உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 ஆம்‌ஃபிஸ்ட்டோம்‌ குடல்‌ புழுநோய்‌

30 ஆம்ஃபிஸ்ட்டோம் குடல் புழுநோய் இரைப்பையின் சுவரைப் பற்றிக்கொண்டு திசுவை யும் திசு நீரையும் உட்கொண்டு வாழ்கின்றன. ஆம்ஃபிஸ்ட்டோம் புழுக்களில் இரு பாலுறுப்புகளும் உள்ளன. வடிவமைப்பு, அளவுகள் ஆகியவற்றின் வேறுபாட்டினால் ஆம்ஃபிஸ்ட்டோம் புழுக்கள் பல வகைகளாகப் பாகுபாடு செய்யப்பட்டுள்ளன. அவற் றில் முக்கியமானவை காட்டிலோஃபோரான் (caty- lophoron sp.) காலிக்கோஃபோரான் (calycophoron sp.), கேஸ்ட்ரோத்தைலாக்ஸ் (gastrothylax sp.) ஆர்த்தோசீலியம் (orthocoelium sp.), பெராம்ஃ பிஸ்ட்டோமம் (paramphistomum sp.) போன்றவை யாகும். வாழ்க்கை வட்டம். ஆம்ஃபிஸ்ட்டோம் புழுக் களின் முட்டைகள் குடல் வழியாகச் சாணத்துடன் வெளியேறித் தரையையும், பின்னர் மழை அல்லது வாய்க்கால் நீரின் மூலமாக நீர்நிலைகளையும் அடைகின்றன. சுமார் 10 முதல் 20 நாள்களில் முட்டைக்குள் மிராசிடியம் (miracidium) எனும் குஞ்சு வளர்ந்து வெளியேறுகின்றது. இது நீரில் சுமார் 6 மணி முதல் 10 மணி நேரம் நீந்தி அதன் இடையூட்டுயிரான நன்னீர் நத்தைகளின் உடல் திசு வைத் துளைத்து உள்ளே செல்கின்றது. ஒவ்வொரு வகை ஆம்ஃபிஸ்ட்டோம் புழுவும் குறிப்பிட்ட நன் னீர் நத்தைகளை மட்டுமே இடையூட்டுயிராகக் கொள்கின்றது. முக்கியமாக இண்டோப்பிளானர் பிஸ் எக்சஸ்ட்டஸ் (indoplanorbis exustus) @ நன்னீர் நத்தைகள் பலவகையான ஆம்ஃபிஸ்ட் டோம் புழுக்களின் இடையூட்டுயிர்களாகச் செயல் படுகின்றன. லிம்னியா லூட்டியோலா (lymnaea luteola), கைராலஸ் (gyraulus sp.) போன்ற நன்னீர் நத்தைகள் சிலவகை ஆம்ஃபிஸ்ட்டோம் புழுக்களின் இடையூட்டுயிர்களாகவும் செயல்படுகின்றன. நத்தை யின் உடலினுள் சென்ற ஆம்ஃபிஸ்ட்டோம் மிரா சிடியம், ஸ்ப்போரோசிஸ்ட் (sporocyst) எனும் அடுத்த பருவத்தையடைந்து, பின்னர் பல ரீடியாப் பருவங்களை (redia) அடைகின்றன. ஒவ்வொரு ரீடியாவினுள்ளும் பல சர்க்கேரியாக்கள் (cercaria உற்பத்தியாகி நத்தையின் திசுவினுள் வளர்கின்றன. எனவே ஒரு முட்டையிலிருந்து வெளியான ஒரு மிராசிடியம் நத்தைக்குள் சென்று சுமார் ஒருமாத காலத்தில் பல மாற்றங்களுக்கும் வளர்ச்சிக்கும் பின் னர் பலநூறு சர்க்கேரியாக்களாக பெருகி நத்தையி லிருந்து வெளியேறுகின்றன. இந்த சர்க்கேரியாக்கள் நீரில் நீந்தி அங்குள்ள புற்பூண்டுகளின் இலைகளில் ஒட்டி மெட்டாசர்க்கேரியாக்களாக (metacercaria மாறுகின்றன. மெட்டாசர்க்கேரியாக்கள் புற்களின் மேல் கடுகளவில் கரும் புள்ளிகளாகக் காணப்படு கின்றன. நீரின் மட்டம் குறையும்போது அங்கு செழிப்பாக வளர்ந்துள்ள, மெட்டாசர்க்கேரியாக் களைக் கொண்ட புல்பூண்டுகளை ஆடு மாடு கள் ஆர்வத்துடன் அதிக அளவில் மேய்கின் றன. புற்களுடன் அநேக மெட்டாசர்க்கேரியாக் களும் விழுங்கப்பட்டு, ஆடுமாடுகளின் வயிற்றி லும், சிறுகுடலின் ஆரம்பப் பகுதியிலும் இளம் ஆம்ஃபிஸ்ட்டோம் புழுக்களாக வெளிவருகின்றன. இவ்விளம் புழுக்கள் குடல் திசுவை ஊடுருவிச் சென்று குடல் சுரப்பிகளைச் சேதப்படுத்தி 6 முதல் 8 வாரங்கள் வரை வளர்கின்றன. பின்னர், குடல் சுவரை விட்டு வெளியேறி முன்னோக்கிச் சென்று இரைப்பையில் அசைவயிற்றுப் பகுதியை அடைந்து அங்கு முழுவளர்ச்சி அடைகின்றன. நோய்த் தாக்குதல். இப்புழுக்களின் வாழ்க்கை வட்டத்தில் அவை இளம் புழுக்களாகச் /சிறுகுடலைத் தாக்கும்போதுதான் ஆம்ஃபிஸ்ட்டோமியாசிஸ் (Intestinal Amphistomiasis) எனும் நோயை உண் டாக்குகின்றன. பருவமழை பெய்து ஏரி, குளம், வாய்க்கால் முதலியவை நிரம்பி நன்னீர் நத்தைகள் பெருகும் காலங்களைத் தொடர்ந்து அவை தாக்கப் பட்டு, அதிக எண்ணிக்கையான சர்க்கேரியாக்கள் வெளியேறிப் பெருமளவு மெட்டாசர்க்கேரியாக்கள் ஆடு மாடுகளால் உட்கொள்ளப்பட்டு, அவை ஆம்ஃ பிஸ்ட்டோமியோஸிஸ் நோயால் அதிகமாகப் பாதிக் கப்படுகின்றன. மேலும் நீர் நிறைந்த நீர்நிலைகளின் அருகில் மேய்ச்சலுக்குச் செல்லும் ஆடு மாடுகளுக்கு ஆண்டு முழுதும் இந்நோய் ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றன. சாதாரணமாக 40 முதல் 90 விழுக் காடு ஆடுமாடுகள் பாதிக்கப்பட்டு அவற்றில் முதல் 90 விழுக்காடு மரணம் அடையக் கூடும். செம் மறி ஆடுகள் அதிக எண்ணிக்கையில் மந்தைகளாக வளர்க்கப்படுவதால் அதிக அளவு அவை பாதிக்கப் படுகின்றன. எனவே தனால் பெருத்த சேதம் உண்டாகின் றது. 80 நோயின் அறிகுறிகள். பாதிக்கப்பட்ட ஆடு மாடு களில் கீழ்த்தாடை வீக்கம் ஏற்பட்டுச் சில சமயங்களில் தலை, கழுத்துப்பாகம் (அலைதாடி), முன்கால்கள் வரை வீக்கம் பரவுவதும் உண்டு. குடல் பாதிப்பி னால், அஜீரணம், கழிச்சல், பசியின்மை, இரத்தச் சோகை ஆகியவை உண்டாகின்றன. நாளடைவில் உடல் மெலிவு ஏற்பட்டு எடை குறைந்து தள்ளாடி நடக்கின்றன. தக்க சிகிச்சை பெறாத கால்நடைகள் எழுந்து நிற்கத் திராணியற்றுப் படுத்தநிலையில் சில நாள்களில் இறக்கின்றன. தீவிரமாக நோயுற்றவை (acute cases) 2 முதல் 4 நாள்களில் இறக்கின்றன. மற்றவை அதிதீவிர நோயாலும், நாட்பட்டும் இறக்கும் (subacute and chronic cases). இவை 1 முதல் 3 மாதங்கள் வரை நோயால் அவதியுற்றுப் பிறகு இறக்கின்றன. இவந் றில் சில பிழைத்தாலும் உடல் நலிவுடன் காணப் படுகின்றன. நோயறிதல். நோயுற்ற கழிச்சலுள்ள ஆடுகளின்