உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆம்‌ஃபிஸ்ட்டோம்‌ குடல்‌ புழுநோய்‌ 31

ஆம்பிஸ்ட்டோம் குடல்புழு நோயால் பாதிக்கப் பட்ட செம்மறி ஆடு சாணத்தை நீரில் கரைத்துப் பிறகு மேல் நீரை எடுத்துவிட்டு அடியிலுள்ள பாகத்தைத் தட்டுகளில் வைத்து வெளிச்சத்தில் அல்லது சிறிது சிறிதாக உருப் பெருக்கியில் ஆய்வு செய்தால் இளம் ஆம்ஃபிஸ்ட் டோம் புழுக்கள் இருப்பது தெரியவரும். ஆடுகளின் சாணத்தை உருப்பெருக்கியில் ஆராய்ந்து அதிக காணப்பட்டால் ஆம்ஃபிஸ்ட்டோம் முட்டைகள் ஆமஃபிஸ்ட்டோம் புழுக்களின் பாதிப்பு இருப்பதை அறியலாம். இறந்த ஆடுகளை அறுத்து ஆய்வு செய்து பார்த் தும் ஆம்ஃபிஸ்ட்டோம் குடல் புழு நோய் இருப் பதை அறுதியிட்டுக் கூற முடியும். உடலில் கொழுப் புச் சத்துக் குறைந்து வயிறு மற்றும் மார்பில் நீர் சேர்ந்திருக்கும். அபோமேசம் (abomasum), சிறுகுடல் ஆகியவற்றின் மெல்லிய திசுக்கள் சிவந்து, வீங்கிக் காணப்படும். இளம் ஆம்ஃபிஸ்ட்டோம் புழுக்கள் அதிக எண்ணிக்கையில் குடல் திசுவைப் பற்றிக் கொண்டிருப்பதும் தெரியவரும். சிகிச்சை. கால்நடை உதவி மருத்துவரை அணுகி அவர் அறிவுரையுடன், நோயுற்ற கால்நடைகளைப் கொட்டகையில் பிரித்துத் தனியாகக் நிறுத்திக் கவனத்துடன் சிகிச்சையளிக்க வேண்டும். ஹெக்ஸா குளோரோஃபின் அல்லது நைக்லோசமைட்டு மருந் துகளை அளிக்க வேண்டும். தேவையெனில் இம் மருந்தினை இரண்டாவதுமுறை அளிக்கலாம். பாதிக் கப்பட்ட கால்நடைகள் விரைவில் நலம் பெற ஈரல் சாறு, பெலாமில் ஆகிய மருந்துகளை அளிக்க வேண் டும். கழிச்சலுள்ள கால்நடைகளுக்கு அரிசிக் குறு ஆம்ஃபிஸ்ட்டோம் குடல் புழுநோய் 31 நொய்க் கஞ்சியை உணவாக அளிக்க வேண்டும். கழிச்சல் நின்றபின் படிப்படியாக வழக்கமான தீவனத்தை அளிக்கலாம். தடுப்புமுறை. ஓரிரண்டு ஆடு மாடுகள் நோயுற்றி ருக்கும்போது அம்மந்தையில் நோய் காணாத மற்ற ஆடு மாடுகளுக்கு அறிகுறி தோன்றாத நிலையில் நோயுற்றிருக்க வாய்ப்பு இருப்பதால் அவைகளுக்கும் சிகிச்சை அளிப்பது மிக அவசியம். ஆம்ஃபிஸ்ட்டோம் நன்னீர் நத்தைகள் மூலம் ஆடு மாடுகளுக்குப்பரவுவதால் கீழே குறிப்பிட்டுள்ள நத்தை ஒழிப்பு முறைகளைக் கையாள்வதன் மூலம் இந்நோயைப் பெருமளவு தவிர்க்கலாம். நத்தை ஒழிப்பு முறைகள். நத்தைகளுக்கு உறை விடமாகவும் உணவாகவும் விளங்கும் நீரிலுள்ள புற்பூண்டுகளை அகற்ற வேண்டும். சிறிய குளம் போன்ற நீர்நிலைகளில் வாழும் நத்தைகளை அப்புறப்படுத்தலாம். வாத்துகள், நத்தைகளை உட்கொள்வதால் அவைகளை நீர்நிலைகளில் விட்டு நத்தைகளை ஒழிக்கலாம். நத்தையின் முட்டை களை உட்கொள்ளும் கௌராமி. கப்பீஸ் கம் பூசியா முதலிய மீன்களை வளர்க்கலாம். நஞ்சுண்டான், சிகைக்காய், புங்கன் பழங்கள் நத்தைகளை அழிக்கும் தன்மை உள்ளவை. எனவே இம்மரங்களை நீர்நிலைகளின் கரைகளில் நடுவதால் அப்பழங்கள் தாமாக நீரில் விழுந்து நத்தைகளை அழிக்க உதவியாக இருக்கும், நத்தை ஒழிப்பு மருந்துகளில் ஏதேனும் ஒன்றைத் தேவையான அளவு குளம், குட்டைகளில் கலப்ப தால் அவற்றை ஒழிக்கலாம். அவற்றில் மயில் துத்தம், சோடியம் பென்ட்டாகுளோரோஃபீனேட்டு, பேலுசைட்டு என்பவை முக்கியமானவையாகும். பருவ மழையைத் தொடர்ந்து பெரும்பாலான ஆடு மாடுகள் இந்நோயால் பாதிக்கப்படுவதால் ஒவ்வொரு வருடமும் மழைக்கு முன்னரும் ஆவணி மாதம்) பின்னரும் (தை மாதம்) இருமுறை முன் னெச்சரிக்கையாக அவற்றிற்குச் சிகிச்சையளித்து நோய் வராமல் தடுக்கலாம். நீர் ஆடு மாடுகள் நத்தைகள் வாழும் நிலைகளுக்குச் செல்லவிடாமல் வேலியமைக்கலாம். கிணற்று நீரைத் தொட்டிகள்மூலம் ஆடுமாடுகளுக்குக் காட்டலாம். ஆம்ஃபிஸ்ட்டோம் புழுவின் இடைநிலைப் பரு வங்கள் வளரத் தேவையான நன்னீர் நத்தைகளை ஒழித்து அவற்றால் புழுக்களின் வாழ்க்கை வட்டம் முற்றுப் பெறாமல் செய்வது இந்நோயினைத்தடுப் பதற்கான முச்கியமான நடவடிக்கையாகும். சி.எம்.லலிதா; ர. ஆனந்தன்