உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 ஆம்‌ஃபோட்டரிசின்‌

32 ஆம்ஃபோட்டரிசின் ஆம்ஃபோட்டரிசின்-பி இவ்வகைக் காளான் கொல்லிகள் ஸ்ட்ரெப்ட்டோ மைசிஸ் நோடோசஸ் (Streptomyceis nodosus) என்ற மண்காளான், நொதிக்கும்போது உருவாகின்றன. ஆம்ஃபோட்டரிசின் - பி இன் (amphotericin -B) பி காளான் கொல்லித் தன்மை அமிலத் தன்மையில் குறைகிறது. இது ஹிஸ்ட்டோபிளாஸ்மா (histo- plasma), கிரிப்ட்டோகாக்கசு (cryptococcus), கேண் டிடா பிளாஸ்ட்டோமைக்கோசிஸ் (blastomycocysis) முதலிய காளான்களுக்கு எதிராக வலிமையுடன் செயல்படுகிறது. காளான்களின் எண் ணிக்கையைப் பொறுத்தும், அவற்றின் உணர்திற னைப் (sensitivity) பொறுத்தும், காளான் கொல்லி யாகவும், காளான் எதிர்ப்பியாகவும் விளங்குகிறது. காளான் சுவர்ப்படலத்தில் இணைந்து, துளையை விரிவுபடுத்திக் காளானைச் செயலற்றதாக்குகிறது. (candida), இது குடல்வழியாக உறிஞ்சிக் கொள்ளப்படுவதில்லை ய தலால் சிரைவழி ஏற்றமாகவே பயன்படுத்தப்படு கிறது காப்புப் பிறழ்வு, வலி, வலிப்பு, காய்ச்சல், தலை வலி, சிறுநீரக இயக்கக் குறைவு முதலிய விரும்பத்தகா விளைவுகள் ஏற்படக் கூடும். இம்மருந்து காளான் மருந்தாக நோய்களுக்கு எதிராக ஒரு வலிவான விளங்குகிறது. இம்மருந்தை உலகெங்கும் பேரளவில் பரவலாகப் பயன்படுத்துகிறார்கள். தோலில் பரவும் காளான் நோய்களுக்குக் களிம்பு வடிவிலும் இது பயன்படுத்தப்படுகிறது. நூலோதி Goodman & Gillman, The Basis of Therapeutics, 1980. ஆமணக்கு சா. ச. Pharmaecological ஆமணக்கு யூஃபோர்பியேசி (euphorbiaceae) என்ற ஒருபூவிதழ் வட்டத்தையுடைய (monochlamydeous) இருவிதையிலைக் குடும்பத்தைச் சார்ந்தது. ஏறக் குறைய இந்தியா முழுதும் பரவிக் காணப்படுகிறது. இதன் தாயகம் வெப்ப மண்டல ஆப்பிரிக்கா என்று கருதப்படுகிறது. வடமொழி இலக்கியச் சான்றுக ளின் அடிப்படையில் இதற்கு இந்தியாவும் தாயக மாக இருக்கக்கூடும் என்று தெரிகிறது. எப்படியிருந்த போதிலும் இந்த இரு நாடுகளிலும் ஆமணக்கு தொன்று தொட்டுப் பயிராக்கப்பட்டு வருகின்றது. விதையிலிருந்து கிடைக்கும் எண்ணெய்க்காக இது பயிரிடப்படுகிறது. தமிழில் ஆமணக்கு, சிற்றா மணக்கு, கொட்டை முத்து என்று பலவாறாக அழைக் கப்படும். தாவரவியலில் ரிசினுஸ் கொம்முனிஸ் Ricinus communis Linn.) என்று குறிப்பிடப்படுகிறது. சிறப்புப்பண்புகள். ஆமணக்கு,சுமார் 6 மீ. உயரம் வரை வளரக்கூடிய மிருதுவான தண்டுப் பகுதியைப் பெற்றுள்ள ஒரு புதர்ச்செடியாகும். இளந்தண்டுகள் குழல்போன்றும் (fistular) கேசங்கள் அற்றுச் சாம்பல் கலந்த பசுமை நிறத்துடனும் காணப்படும். இலை கள் பசுமையானவை அல்லது சிவப்புக் கலந்த பசுமை யானவை; 30 முதல் 60 செ.மீ. விட்டம் உடையவை; 5 முதல் 11 பிளவுகளுடன் கைவடிவத்தில் (palmately lobed) அமைந்திருக்கும். விளிம்புகள் பற்கள் போன் றிருக்கும். இலைக் காம்புகள் நீண்டு, அதன் அடிப் பாகத்தில் சுரப்பிகளைப் (glands) பெற்றிருக்கும். மலர்கள் ஒருபாலானவை. இவை 30 முதல் 60 செ.மீ நீளமுள்ள ஸ்பைக் (spike) அல்லது பானிக்குலேட் ரெசீம் (paniculate raceme) மஞ்சரியில் அமைந்திருக் கும். மஞ்சரியின் மேல் பகுதியில் தொகுப்பாக ஆண் மலர்களும், கீழ்ப்பகுதியில் பெண் மலர்களும் காணப் படும். மகரந்தத் தாள்கள் எண்ணற்றவை; இவை கிளைத்துக் காணப்படும். சூற்பை மூன்று அறை களைக் கொண்டிருக்கும்; ஒவ்வோர் அறையிலும் ஒரு சூல் அச்சுசூலமைவுடன் (axile placentation) காணப் படும் தனிவகையான உறைக்கனியாகும்; இது இரு நிலைகளில் வெடிக்கக்கூடிய உலர் வெடிகனியாகும். இதன் உறை போன்ற முட்கள் (outgrowths) பெற்றிருக்கும். போன்று நீள்சதுர வடிவானவை (oblong); விதை உறை ஓடு போன்று கெட்டியானது. வழவழப்பானது, பளபளப்பானது; இது வெவ்வேறு வடிவத்தில் கருமை, வெண்மை நிறக் குறிகளைப் பெற்றிருக்கும். இதன் ஒரு நுனியில் முடிச்சுப் போன்ற வெண் மையான அமைப்பு ஒன்று (caruncle) உண்டு. முளை சூழ்சதை (endorsperm) சதைப்பற்றுள்ளது. விதை யிலைகள் (cotyledons) பெரியவை. வளரிகளைப் வண்டு விதைகள் பயிரிடும் முறை. ஆமணக்குத் தாவரத்தில் பல சிற்றினங்களும் (species) பலவகைகளும் (varieties) காணப்படுகின்றன. இருப்பினும் பயிரிட இருவகை மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒருவகை பெரிய விதைகளை உடையவை, மற்றொரு வகை சிறிய விதைகளை உடையவை. பெரிய விதைகளிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய், தரம் மிகுந்து காணப்படுகிறது. ஆமணக்கு தமிழ் நாட்டில் தருமபுரி மாவட்டத்தில் அதிகப் பரப்பள வில் பயிரிடப்படுகின்றது. கடல் மட்டத்திற்கு மேல் 200 மீ. உயரப் பகுதிகளிலும் பயிரிடப்படுகின்றது. சுமார் 850 மீ. உயரப் பகுதிகளில் பல ஆண்டுகள் வளரக்கூடிய ஆமணக்கு, பயிரிடப்படுகின்றது. ஆமணக்குத் தாவரம் வறட்சியான நிலைகளையும், மழை வெள்ளம் போன்ற சூழ்நிலைகளையும் தாங்கும் தன்மையுடையது. ஆமணக்கு, பொதுவாக மணற்பாங்கான பகுதிகளிலும், களிமண் செம்மண் நிலத்திலும் வளரக்கூடியது. கரும்பு, இஞ்சி, மஞ்சள் போன்ற பயிர் வளரும் வரப்புகளில்