உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/555

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆற்றல்‌, நுகர்வு 531

அழைக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாகக் குளிர்ந்த உருளைக்கிழங்கைச் சூடேற்றலைக் கூறலாம். இதில் வெப்ப ஆற்றல் பாத்திரத்திலிருந்து குளிர்ந்த உருளைக்கிழங்கை நோக்கிப் பாய்கிறது. ஆனால் இங்கு விசை செலுத்தப்படுவதில்லை. வேலையும் வெப்பமும் ஆற்றல் பாய்வின் இரு மாறுபட்ட செயல்வகைகளாதலால், ஒவ்வொரு வகையிலும் எவ்வளவு ஆற்றல் செல்கிறது என்பதைக் கொண்டு அவற்றை அளவிட முடியும். எடுத்துக்காட்டாக, ஒரு மின் ஆக்கியை இயக்கப் பயன்படும் ஒரு கொதி கலன் நீராவிச் சுழலிச்செறிகலன் அமைப்பை எடுத் துக் கொள்வோம். கொதிகலனில் எரிக்கப்பட்ட எரிபொருள் ஒரு மணி நேரத்தில் 102109 பிரிட்டன் வெப்ப அலகு (பி. வெ. அ) ஆற்றலை உற்பத்தி செய்கிறது. இந்த ஆற்றலின் ஒரு பகுதியானது அதாவது 4×108 பிரிட் டன் வெப்ப அலகு/மணிக்குச் சுழலக்கூடிய நீராவிச் சுழலியின் தண்டு வழியாக வேலை வடிவில் பாய் கிறது. அங்கு இவ்வாற்றல் மின் ஆக்கியின் அச்சுத் தண்டைச் சுழலச் செய்யப் பயன்படுகிறது. மீதமுள்ள 6x10 பி. வெ. அ./மணி அளவு ஆற்றல் காற்றி லேயோ அல்லது குளிரூட்டும் நீருக்கோ திறந்து விடப்படுகிறது. இவ்வாறாக எரிபொருளில் இருந்த ஆற்றலின் 40% மட்டுமே அது எதற்காகப் பயன் படுத்தத் திட்டமிடப்பட்ட தோ அதற்காகப் பயன் படுத்தப்பட்டது. எனவே இந்தப்பொறி 40% திறமை யைப் பெற்றிருக்கிறது. வெப்பப்பொறிகள். தாரைப் பொறிகள், தானி யங்கிப் பொறிகள், மற்றும் நீர்ச்சுழலிகள் ஆகியவை களை உள்ளடக்கிய பலபொறிகள் ஆற்றலை அதிக வெப்ப நிலையில் பெற்று அதில் ஒரு பகுதியை T] உயர்வெப்பநிலை ஆற்றல் 1 ஆற்றல் நுகர்வு 531 வேலையாக மாற்றுகின்றன. மேலும் மீதமுள்ள ஆற்றலைக் குறைந்த வெப்பத்தில் வெளியேற்றி விடு கின்றன. இந்தப் பொறிகளின் ஆற்றல் திறனைப் பற்றி ஆராயப்பட்டு ஒரு மீளியக்க வெப்ப எக்கி என்ற கருத்துருவம், (concept) மற்றப் பொறிகளின் குறைந்த செயல்பாட்டை அளவிட ஒரு மாதிரியாக உருவானது. உயர் வெப்ப நிலையில் (T.1) ஓர் ஆற்றல் தேக் கம் (reservoir) உள்ளது என்று கொள் லோம். மற்றொரு தாழ் வெப்பநிலையில் ( T) உள்ள ஆற்றல் தேக்கத்தையும் கொள்வோம். இவை ரண்டுடனும் தொடர்புடையதும் மேலும் ஆற்றல் செல்லக் கூடிய தண்டுடையதுமான ஒரு பீளியக்க வெப்பபொறி உள்ளதாகக் கொள்வோம். மேலும் இரண்டு தேக்கங்களுடன் வெப்பத்தைப் பகிர்ந்து கொள்ள அந்தப் பொறியால் இயலுமென்றும் கொள்வோம். இந்தவெப்பப்பொறியைச் (heat engine) செய்யப் பயன்படுத்தப்படும்பொது அதிக வெப்பநி லையிலுள்ள தேக்கத்திலிருந்து (reservoir) வெப்பத் தைப் பெற்று அதில் ஒரு பகுதியை ஆற்றலாக மாற்றி சுழலும் தண்டின் மூலமாக அவ்வாற்றலை வெளியி டுகிறது. ஒரு பகுதி வெப்பத்தைக் குறைந்த வெப்ப நிலையிலுள்ள தேக்கத்திற்கு (reservoir) அனுப்பு கிறது. இது ஒரு நீராவிச் சுழலி ஆற்றல் நிலையத்தின் மாதிரியாகும். T. உயர்வெப்பநிலை ஆற்றல் Q,வெப்பப்பாய்வு திரும்பிச் செயல் படும் வெப்பப் பொறி Q₁-Q, Cama வெளியீடு வெப்பப் பாய்வு திரும்பிச் செயல்படும் வெப்பப் பொறி வேலைப் பாய்வு சுழல் அச்சுத்தண்டு Qவெப்பப்பாய்வு Tஉ தாழ்வெப்பநிலை ஆற்றல் வெப்பப் பாய்வு T, தாழ்வெப்பநிலை ஆற்றல் படம் 7. திரும்பிச் செயல்படவல்ல கருத்தியலான வெப்பப் அ.க. 3-34அ பொறி படம் 8. திரும்பிச்செயல்படவல்ல வெப்பப் பொறி மேலே உள்ள படத்தில் Q1 அளவு வெப்பம் அதிக வெப்பநிலையிலுள்ள தேக்கத்திலிருந்து (reser- voir) பொறிக்குச் செல்கிறது. அதில் ஒரு பகுதி O.. ஒப்பீட்டளவில் குளிர்ந்தநிலையிலுள்ளதேக்கத்திற்குச் (reservoir) செல்கிறது. மற்றொரு பகுதி (Q-Q, தண்டன் வழியாக வேலை வடிவில் வெளிச் செல் கிறது. இப்பொழுது வெளியிலுள்ள (agences) மூலம்