உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/558

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

534 ஆற்றல்‌, பெட்ரோலிய

534 ஆற்றல், பெட்ரோலிய உரு வெப்பநிலைகளை உண்டாக்குவதில் மின்தடைசூடேற் றல் குறிப்பிடத்தக்க சிறப்புடையது. இரும்பு கக்கூடிய 1540°C போன்ற குறைந்த வெப்பநிலையில் கூட மின்தடை வெப்பம் சிக்கனமாகவே உள்ளது. இந்த அளவு வெப்பத்தை (1540°C) நேரடி எரிதல் மூலம் கூட அடையலாம். ஆனால் வெப்பநிலை அதி கமாகச் சூடான எரிவிளை பொருள்கள் சிம்னி மூலம் வெளியேறுவதால், நேரடி எரிமுறை வெப்பமூட்டல் தனது செயல்திறனை இழக்கிறது. இருந்தாலும் குறைந்த அளவில் இருந்து ஓரளவு வெப்பம் வரை எரிமுறை வெப்பப்படுத்துதல் அதிகத் திறன் உள்ள தாகவும் இருக்கிறது. ஏனெனில் எரிதலின் விளை பொருட்கள் சிம்னியை விட்டு வெளியேறுவதற்கு முன் குளிர்ந்து அதிக அளவு வெப்பத்தை வெளியிடு கின்றன. வெந்நீர்ப் பங்கீடு, சமையல், வாழ் இட வெப்பமூட்டல் மற்றும் அதிக அளவு தொழிற்துறை வெப்பமூட்டல் போன்ற உபயோகங்களுக்கு நேரடி எரிதல் மலிவாகவும் திறனுள்ளதாயும் இத்தகைய பயன்பாடுகளுக்கு மின்சாரம் யறுக்கப்பட்ட அளவில்தான் பயன்படுகிறது. க உள்ளது. வரை ஏன் இத்தகைய பயன்பாடுகளுக்கு மின்சாரம் விரிவடையவில்லை என்பதை விளக்க மின்தடை வெப்ப மூட்டல், மின்சாரத்தால் இயங்கும் வெப்ப எக்கி ஆகியவைகளோடு நேரடி எரிதல் முறையை ஒப் பிடும்போது நன்கு தெரியவருகிறது. எரிபொருள் சேமிப்பு மற்றும் ஒட்டுமொத்த விலை ஆகியவற்றின் நிலையில் இருந்து பார்க்கும்போது மின் தடை வெப்ப மூட்டல் சிறந்ததாக இல்லை. ஏனெனில் அதிக அளவு மின்சாரம் தேவையாக உள்ளது. மேலும் விலையும் அதிகம். இருந்தாலும் வெப்பம் குறைந்த அளவு தேவைப்படும் இடங்களிலும், பயன்படுத்து வதில் சிரமமின்மை எங்கெல்லாம் முக்கியமாகக் கரு தப்படுகிறதோ அங்கெல்லாம் மின்தடை வெப்ப மூட்டலே பயன்படுத்தப்படுகிறது. எரிபொருள் சேமிப்பு என்ற நிலையில் பார்க்கும்போது வெப்ப எக்கிகளும் நேரடி எரிதல் முறையும் ஏறக்குறைய சமமான நிலையில் உள்ளன. ஆனால் வெப்ப எக்கி கள் உலைகளை (furnaces) விட அதிக விலையாகின் றன். மின்மயமாக்கத்தின் வடிவப்போக்குகள் மின்மயமாக்க வடிவப்போக்குகளை ஆராயும் போது முழுமையும் மின்மயமாக்கப்பட்ட பயன் பாடுகள் வெப்பம் உண்டாக்குவதற்கும் போக்கு வரத்துக்கும் ஆகிய வகைகள் தெரிய வருகின்றன. முதலில் மின் மயமாக்கப்பட்ட தடை பயன்பாடு களைப் பார்ப்போம். இவ்வகையில் மின்சாரத்தின் மூலமாகச் செயல்பட முடியும் பயன்பாடுகளும் நேரடி எரிதலை விட மின்சாரம் அதிகச் சிறப்பு பெற்றிருக் கும் பயன்பாடுகளும் அடங்கும். இதுவரை அதிக அளவில் வெப்பப்படுத்தும் சாதனங்கள் மின்மயப் படுத்தப்படவில்லை. மேலும் இந்தப் பயன்பாட்டுக்கு மின்சாரம் சிற்றளவில்தான் பயன்படுத்தப்படுகிறது. ந. ரமேஷ் ஆற்றல் பாய்வு உலக பொருளாதாரத்தில் ஆற்றல் நீர் மின் ஆற் றல், நிலக்கரி, இயற்கை வளிமம், யூரேனியம் மற்றும் பல ஆதார வளங்களாக அமைகிறது. இவ்வாறு ஆற்றல் பாய்ந்து வெப்பம், ஒளி மற்றும் சக்தி ஆகிய வற்றை அளிக்கிறது. சிலவகை முதன்மை ஆற்றல் மூலங்கள் (primary energy sources) நேரடியாக எரிபொருளாகப் பயன்படுத்தப்படுகின்றன. நிலக் கரி, எண்ணெய், இயற்கை வளிமம் ஆகியவை அடுப் புகளிலும் (stoves) உலைக்கலங்களிலும் (furnaces ) நேரடியாக எரித்து வெப்பம் பெறப்படுகிறது. பெரும்பாலான தானியங்கிகள், விமானங்கள் தொடர்வண்டிகள் ஆகியவற்றிற்கான சக்தி உள் எரி பொறிகளில் எண்ணெயை எரிப்பதன் மூலம் ஆக் கப்படுகிறது. மற்ற சில முதன்மை ஆற்றல் மூலங்கள் பயன்படுத்தப்படுவதற்கு முன் மின்னாற்றலாக மாற் றப்படுகின்றன. பெரும்பாலும் ஒளி வழங்கல் (Illu- mination) மின்மயப்படுத்தப்பட்டுள்ளது. பெரும் பான்மை எந்திர கருவிகள், குளிர்பதன நிலையங் கள், மின் தூக்கிகள் (elevators), தொலைகாட்சி மற் றும் உபகரணங்கள், நிலை எந்திரங்கள் ஆகியவை களும் மின் மயமாக்கப்பட்டுள்ளன. நேரடியாக இயற்கை மூலங்கலிலிருந்து பெறப் படும் ஆற்றல் முதன்மை ஆற்றல் (primary energy) எனவும் (எரிபொருள்கள், நீர் ஆற்றல், வளிம ஆற்றல் புவியீர்ப்பு ஆற்றல் மற்றும் அணுக்கரு ஆற்றல் ஆகி யவற்றின் ஆற்றல் உள் அடக்கம்) பொருத்தமான நிலையங்களைக் கொண்டு (plants) முதன்மை ஆற் றலைப் பயன்படுத்தி மனிதனால் உற்பத்தி செய்யப் படும் ஆற்றல் இரண்டாவது ஆற்றல் (secondary energy) எனவும் கூறப்படும், ஆற்றல் வெப்பம், ஒளி மற்றும் எந்திர ஆற்றல் ஆகிய மூன்று முக்கிய பயன்களுக்காக பயன் படுத்தப்படுகிறது. வெப்பத்தையும் ஒளியையும் நெருப்பின் மூலம் எளிதாக உருவாக்க முடியும்.. மக்கள் பல்லாயிரம் ஆண்டுகளாக மரம் மற்றும் கரிமப் பொருள்களை (organic materials) எரிபொரு ளாகப் பயன்படுத்தி, நெருப்பை உண்டாக்கி வந்துள் ளனர். எந்திர ஆற்றலை உற்பத்தி செய்தல் மிகவும் கடினமானது. இருந்தாலும் நீர் ஆற்றல், காற்றலை கள், மிதவைகள், வேலைசெய்யும் விலங்குகள் மற்றும். .