ஆற்றல், பெட்ரோலிய
542 ஆற்றல், பெட்ரோலிய அர்க்கன் சாஸ், நியூமெக்சிகோ, லூசியானா ஆகிய இடங்களில் எடுக்கப்பட்ட இயற்கை நில எண்ணெய் களின் அ.பெ.க அடர்த்திகள் அராபிய, ஈரானிய கொலம்பிய இயற்கை நில எண்ணெய்களைப் போன்றே சரியாக 35க்கும் 40க்கும் இடைப்பட்ட அளவினைக் கொண்டதாகும். காய்ச்சி வடித்தல் (dis- tillation) முறையில் பெறப்பட்ட எண்களுடன் சரி பார்க்கும் போது இந்த இயற்கை நில எண்ணெய் களுடைய கேசொலின் அளவு C (204° செ) வெப்ப நிலைக்குக் கீழாகக் கொதிக்கும் பின்னம் (fraction ) பருமன் அளவில் 25./ இலிருந்து 35. அளவிற்கும் கள் மேலான இடைவெளிகளைக் கொண்டதாய் இருப் பதைக் காணலாம். எடை குறைவான இயற்கை நில எண்ணெய்களின் (light crudes) கெரோசின் பகுதி உயர்ந்து காணப்படுகின்றன. இதனுடன் வேறுபடுத்திக் காணும்போது, வையோமிங்கிலிருந்து பெறப்பட்ட 17.9 அ.பெ. க. அடர்த்தியினைக் கொண்ட புளிப்பான இயற்கை நில எண்ணெய் 6% கேசொலினும், 40./. ஆஸ்பால்ட்டும் (asphalt) கொண்டிருப்பதைக் காணலாம். கலிபோர்னியாவில் பெறப்பட்ட இயற்கை நில எண்ணெயில் காய்ச்சி வடித்த பிறகு உள்ள எச்சம் (residuum) அதிக அள விலும், கேசொலின் சிறிதும் இல்லாமலும் காணப் படுகின்றது. க கந்தகம்.(sulphar). பெட்ரோலியம் தூய்மையாக் தம் செய்யும் நிலையத்தில் (refinery) இயற்கை நில எண்ணெயினைக் கையாளுவதைக் கருத்தில் கொள் ளும் போதும் முடிவுற்ற பொருள்களில் கந்தகத்தின் விரும்பத்தகாத விளைவுகளைக் கருத்தில் கொள்ளும் போதும் இயற்கை நில எண்ணெயிலுள்ள கந்தகத் அமைகின்றது. தின் அளவு முதன்மையான தாய் உயர் கந்தகம் கொண்ட இயற்கை நில எண்ணெய் களின் அரிக்கும் தன்மை காரணமாகப் பெட்ரோலி யம் தூய்மையாக்கம் செய்யும் நிலையச் சாதனங் களைத் (refinery equipment) தனித்தன்மை வாய்ந்த பொருள்களால் சுட்டவேண்டி உள்ளது. கரிப்பின் தன்மை காரணமாயும் (corrosiveness) விலையுயர்ந்த வினையூக்கிகளின் (catalysts) மீது கந்தகம் கொண்ட சேர்மங்களின் விரும்பத்தகாத விளைவுகளின் காரண ஊட்டச்சரக்காகப் (feed மாகவும் நிலையத்தின் stock) பயன்படுத்துவதற்கு முன்னர் அதில் கந்த கத்தை நீக்கம் செய்வது (desulphurization) தேவையா கின்றது. பயனீட்டாளர் நிலையிலிருந்து நோக்கும்போது சல்ஃப்யூரஸ் கேசொலின் (sulphurous gasoline) அரு வெறுப்பான நாற்றத்தைக் கொண்டதாகும். இதனை இனிமையாக்காவிடில், இந்தச் சல்ஃப்யூரஸ் கேசொ லின் எரிபொருள் அமைப்பினையும் ( fuel system) எந் திரப் பகுதிகளையும் அரிப்பதோடு, இது எரிந்த பின்னர் வளிமண்டலத்தையும் மாசுறச் செய்யும். அட்டவணை 1 இலும் 2 இலும் வழங்கப்பட்ட குறிப்புகளில் அடங்கும் மற்ற கூறுகள் கீழே தரப்பட் டுள்ளன. காய்ச்சி வடித்தல் இடைவெளி. காய்ச்சி வடிக்கும் இடைவெளியில் என்னென்ன பின்னங்கள் (fract- ions) அடங்குகின்றனவென்றும், ஒவ்வொரு பின்ன மும் எவ்வளவு இருக்கின்றது என்றும் காட்டுகின்றன. பாயும் நிலை (pour point). பொருள் பாயக்கூடிய மிகக் குறைந்த வெப்பநிலையைப் பாயும் நிலை குறிப் எண்ணெயில் பதாகும். இப்பாயும் நிலையானது உள்ளடங்கிய மெழுகுத் தன்மை (waxiness) பிட்டு சார்ந்த மன் (bitumen) ஆகிய உட்கூறுகளைச் தாகும். படிவும், நீரும் (sediment and water). பெட்ரோலி யத்திலுள்ள படியும், நீரும் தூய்மையற்ற பொருளையும் (dirt) மற்ற அயற்பொருளையும் நீரையும் குறிப்பிடுவதாகும். அமைய உப்பு உட்பொருள் (salt coatent). உப்பு உட் பொருளானது சாதாரண உப்பாகிய சோடியம் குளோரைடை மட்டும் குறிப்பிடுவதாக வில்லை. ஆனால் இது வழக்கமாகச் சோடியம் குளோரைடாகப் பொருள்படுத்திக் கொள்ளப்படு கிறது. எஞ்சிய எண்ணெய்களிலும் (residual oils ) ஆஸ்பால்ட்டிலும், சேரக்கூடிய விரும்பத்தகாத மூலக் கூறாக இருப்பதாலும் நீர்மப் பாய்வைத் (fluid flow) தடுக்கும் போக்கினைக் கொண்டுள்ளதாலும், உப்பு விரும்பத் தகாததாகும். வெப்பப்படுத்தும்போது சில வகையான உப்புச் சேர்மங்கள் தனிக் கூறு களாகச் சிதைந்து தூய்மைப்படுத்தும் சாதனங் களின் அரிப்பிற்குக் காரணமாய் அமைவதால் இத் தகைய உப்புச் சேர்மங்கள் விரும்பத் தக்கவாறு அமையவில்லை. உலோக உட்பொருள் (metals content). வென டியம் (vanadium), நிக்கல் (nickel) இரும்பு போன்ற பளுவான உலோகங்கள் பளுவான வளிமம் எண்ணெ யிலும் (heavier gas oil) காய்ச்சி வடித்த பிறகு எஞ்சியுள்ள பின்னங்களிலும் (residuum fractions ) சேரக்கூடிய போக்கினைக் கொண்டதாயிருப்பதால், இவ்வுலோகங்கள் தூய்மைப்படுத்தும் இயக்கங்களில் சுறுக்கிடுகின்றன. மேலும் இவ்வுலோகங்கள் வினை யூக்கிகளுக்கு ஊறுவிளைவிக்கக் கூடியவையாயும் (poisoning) உள்ளன. உலைகளிலும், கொதிகலனில் எரிக்கும் பெட்டிப் பகுதிகளிலும் (furnaces and boiler fire boxes) வெப்பப்படுத்தப்பட்ட பரப்பு களிலும் படிவுகள் உண்டாவதற்கு இந்தப் பளுவான உலோகங்கள் காரணமாய் இருக்கின்றன. இதன் சாதனங்கள் நிலையான குறைபாடு களுக்கு உட்படுத்தப்படுவதுடன், வெப்பமாற்றுத் குறுக்கிடுவ திறத்தில் (heat transfer efficiency) தால் பராமரிப்புச் செலவுகள் கூடுதலாகின்றன. காரணமாகச்