ஆற்றல், பெட்ரேரலியம் 543
இயற்கை வளிமம் எண்ணெய்க் களிப்பாறைகள், தார் மணல்கள். இயற்கை வளிமம் அதே நில இயல் அமைப் புகளில் வழக்கமாகக் காணப்படுவதுடன் பெட்ரோ லிய இயற்கை நில எண்ணெயுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டிருந்தாலும் பெட்ரோலிய இயற் கை நில எண்ணெயின் (crude petroleum) ஒரு கூறாக (component) அவ் வளிமம் வழக்கமாக வரையறுக் கப்படுவதில்லை. எவ்வாறிருப்பினும், பேரளவு இயற்கை வளிமக் கிணறுகள், உற்பத்தியாக்கம் செய்யும் எண்ணெய்க் கிணறுகளுடன் தொடர் புடையவையாய் அமையவில்லை. (காண்க, ஆற்றல், இயற்கை வளிம எண்ணெய்க்களிப்பாறைகளிலிருந்து பெறக்கூடிய எண்ணெய்கள் உண்மையான பெட் ரோலியமாக இருப்பதில்லை. ஆனால் இவற்றினைத் தனித்தன்மைவாய்ந்த வேதியியல் முறைகளுக்கு உட் படுத்தியதும் அவை போன்ற பெட்ரோலியம் பொருள்களை வழங்குகின்றன. எண்ணெய்க் களிப் பாறைகள் எண்ணெய்ப் படிவுப் பாறைகளாகும். இவை கெரோஜன் (kerogen) என்ற பிட்டுமன் (bituminous substance) இயல்புப் பொருளை உயர் அளவிலும், 30 முதல் 60 விழுக்காடு கரி மப்பொருளையும் (organic matter) நிலைத்த கொண்டுள்ளன. கார்பனையும் (fixed carbon) கெரோஜனானது, ஒரு குறிப்பிட்ட வேதியியற் சேர்ம மாக (chemical compound) இல்லாவிடினும், செறி கலனில் காற்று நீக்கிய பின் வெப்பப்படுத்தும்போது எண்ணெய்ப் பொருளை வழங்குகின்றது. சாதாரண கரைப்பான்களுடன் எண்ணெய்க் களிப்பாறையைக் கரைத்துப் பிரித்தெடுக்கும்போது எண்ணெய் கிடைப் பதில்லை. மேலும் எண்ணெய்க்களிப்பாறை(oil shale) கரைப்பான்களுடன் கரையும் திறன் குறைவான தாகும். இச்சான்றே வேதியியல் மாற்றத்தினால் எண்ணெய் விளைகின்றதென்று துணியத் துணையா கின்றது. அதாவது கெரோஜனை ஆக்கம் செய்யும் மூலக் கூறுகளை வெப்பத்தினால் சிதைக்கும் வேதி யியல் மாற்றத்திற்கு உட்படுத்தும்போது எண்ணெய் உண்டாகின்றது என்பது உறுதியாகிறது. பெட்ரோலியத் தொழிலில் மரபுமுறைப் பெட் ரோலியம் ஆக்கம் செய்யும் தொழில் நுட்பத்தில் (conventional production techniques) கிணற்றின் வழியாக ஆக்கம் செய்யாத மிகவும் பளுவான பிசுப் புத் தன்மை வாய்ந்த இயற்கை நில எண்ணெய் செறி வுற்ற மணற்பாறைத் தேக்கங்களை (sand stone தார்மணல்கள் (tar reservoirs) விவரிப்பதற்குத் sands) என்ற சொற்றொடர் வழக்கமாகப் பயன் படுத்தப்படுகின்றது. பிட்டுமன் கொண்ட மணல் களும் எண்ணெய் மணல்களும் (bituminous sands and oil sands) என்ற மற்ற இரு சொற்றொடர்கள் வழக்கத்தில் இருந்து வருகின்றன. தார்மணல்களுடன் (tar sands) செறிவூட்டம் பெற்ற பளுவான பிசுப் பெட்ரோலியப் புத் தன்மையான பொருள்கள் ஆற்றல், பெட்ரேரலியம் 543 (viscous petroleum substances) substances) ஆஸ்ப்பால்ட்டு உள்ள எண்ணெய்கள் (asphaltic oils) என வழங்கப் படுகின்றன. பெட்ரோலியக் கையிருப்பு வளங்கள். பெட்ரோலியம் இயற்கை வளிமம் போன்ற பெரும் இயற்கை மூல வளக் கையிருப்புக்களைக் கவனத்தில் கொண்டு, குறிப்புக்களைத் தொகுத்து வழங்கும்போது இத் தகைய பொருள்கள் பேரளவிலான நிலப் பரப்புக் களுடனும் நில இயல் கட்டமைப்புக்களுடனும் தொடர்பு கொண்டுள்ளன என்பதை மிகைப்படுத்திக் கூறுவது தேவையற்றதாகும். மேலும் இத்தகைய இயற்கை மூல வளங்கள் கிடைக்கும் நிகழ்ச்சியினை, ஒரு சேமிப்புக்கிடங்கில் விற்பனைப் பொருட்களை விரிவாகக் கணக்கெடுத்துப் பட்டியலிடுவது போன்று கணக்கெடுக்க இயலுவதில்லை. இத்தகைய குறிப்பு களைக் கொண்டு, நிலைத்துத் தோன்றக் கூடிய செய்திகளை மக்களிடையே வெளியிடும்போது, அதிலும் கணிபொறியின் வழியாக அத்தகவல்கள், பிழையின்றி நிறைவளிக்கும் வகையில் வெளியிடும் போது, அச்செய்திகள் மக்கள் மனத்தில் ஆழ்ந்த உணர்ச்சியைத் தூண்டும். ஆனால் இச் செய்தி களை வெளியிடுபவர், இத்தகைய கையிருப்பு வளங் களைப் பற்றிய குறிப்புகள், உண்மையிலேயே மதிப் பீட்டு விவரங்களே என்பதை மறந்து விடக்கூடாது, மேலும் இத்தகைய விவரங்களைக் கொண்டு திட் டங்களை மேற்கொள்ளும் போது, கையிருப்பு வளங்களைப் பற்றிய குறிப்புக்கள் விரிவாக எடுத்து வழங்கினாலும், அவை ஏறத்தாழ உண்மையான அளவுகளாக இருக்குமேயன்றி, மிகச் சரியான அளவு களாக ஒருபோதும் இரா என்பதைத் தொடர்ந்து நினைவில் கொள்ளவேண்டும். அமெரிக்க ஒன்றிய நாடுகளில் பெட்ரோலியக் கையிருப்பு வளங்கள். அமெரிக்க ஒன்றிய நாடுகளின் பெட்ரோலியத் தொழிற்சாலைகளும், பொது மக் களும், இயற்கை நில எண்ணெய்க் கையிருப்பு வளங் களைப் பற்றிய தகவல்களின் தேவையைப் பற்றி நன்கு அறிவார்கள். 1915 ஆம் ஆண்டு இரால்ஃப் ஆர் னால்டு என்பவர், இயற்கை நிலஎண்ணெயின் கையி ருப்பு வளங்களைப் பற்றி மதிப்பீடு ஒன்றைத் தயாரித் தார். 1916 ஆம் ஆண்டிலும் 1919ஆம் ஆண்டிலும். இது போன்ற மதிப்பீடுகள் அமெரிக்க ஒன்றிய நாடு களின் நிலஇயல் அளக்கைத் துறை (U. S.Geological Survey) தயாரித்தது. 1922 ஆம் ஆண்டிற்கு இயற்கை நிலஎண்ணெயின் கையிருப்பு வளத்தினை அமெரிக்க ஒன்றிய நாடுகளின் நில இயல் அளக்கைத் துறையும், அமெரிக்க நாட்டின் பெட்ரோலிய நிலஇயல் வல் லுநர்களின் கழகமும் (American Association of Petro- leum Geologists) கூட்டாகத் தயாரித்தன. 1925ஆம் ஆண்டில் இயற்கை நில எண்ணெய் வளத்தின் மதிப் பீடு அமெரிக்கப் பெட்ரோலியக் கழகத்தினரால் (American Petroleum Institute) தயாரிக்கப்பட்டது.