உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆமா 35

வயிற்று வலி குறைந்து, மலம் வெளிப்படும். உடம் பில் மேல்தோல் உராய்ந்து, எரிச்சல் ஏற்பட்டால் அவ்விடத்தில் விளக்கெண்ணையைத் தடவ எரிச்சல் நீங்கி, முன்பிருந்த நிலையை அடையும். கண்கள் மருந்துகளின் வேகத்தாலும் தூசுகள் விழுவதாலும் அருகிச் சிவந்தால் ஆமணக்கெண்ணெயும், தாய்ப் பாலும் சேர்த்துக் குழைத்துக் கண்ணிலிடச் சிவப்பு மாறிக் குணமாகும். முலைக்காம்பு, புண், வெடிப்பு இவற்றிற்கு இதைத் தடவி வரலாம். முக்கூட்டு நெய்யில் இதுவும் ஒன்று. பலவகையான உள், வெளிப் பயன்பாடுகளில் பயன்படுத்தப்படும் எண்ணெய் ஆமணக்கெண்ணெய் முறைகளில் கிறது. ஆமா காட்டெருமை என்ற சேர்க்கப்படு சே.பிரேமா பொதுச்சொல் தென்னிந்தி யாவில் அதிகமாகக் காணப்படும் பாஸ் கெளரஸ் (Bos gaurus) என்ற விலங்கையும் வட இந்தியாவில் அதிகமாகக் காணப்படும் புபாவஸ் புபாலஸ் (Bubalus bubalur. Buffalo) என்ற விலங்கையும் குறிப்பதற்குப் பயன்படுகிறது. எனவே காட்டெருமை என்ற சொல் இங்கு தவிர்க்கப்படுகிறது. கவுர் என்பது இந்தி மொழிச் சொல். எனவே சங்க இலக்கியங்க ளில் இவ்விலங்கைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்ட ஆமா என்ற சொல்லே இங்கும் எடுத்தாளப்படுகிறது ஆமா (The gaur or Indian bison) சில காலங் களில் மேய்ச்சல் நிலங்களை நாடிக் கீழிறங்கி வந் தாலும் பொதுவாக மலைகளில் கூட்டமாக வாழும். காடுகளடர்ந்த மலைப் பகுதிகளில் 1830 மீட்டர் உயரம் வரை மேலே சென்று வாழ்கின்றன. இந்தி யாவின் தெற்கில் தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் (மலையடிவாரக் காடுகளில்) தொடங்கி வடக்கே செல்லச் செல்லக் கிழக்குப் பகுதிகளில் மட்டும் வாழ்கின்றன. நருமதை, தபதி, நதித்தீரங் களிலுள்ள அடர்ந்த கானகங்களிலும், மத்திய இந்தியாவில் சாத்பூரா மலைகளின் மூங்கிற் காடு களிலும் ஆமாக்கள் உள்ளன. தமிழ்நாட்டில் பழநி திண்டுக்கல், சாந்தமங்கலம் ஆகிய இடங்களுக்கருகி லுள்ள மலைக்காடுகளிலும், சேலத்தையடுத்த சேர்வ ராயன் மலைகளிலும் வாழ்கின்றன. இவ்விலங்குகள் பொதுவாகத் தோள் மட்டத்தில் ஐந்திலிருந்து ஆறடி உயரம் வரை உள்ளவை. இவற்றின் பெரிய தலை யும் தாழ்ந்த குட்டையான திண்ணிய கால்களும், உடலும், தோள் பகுதியிலிருந்து மேலெழுந்து நடு முதுகு வரை நீண்டு திரண்டு,பின் சரிந்து காணப் படும் திமில் போன்ற தசை அமைப்பும் குறிப்பிடத் தக்கன. புதிதாகப் பிறந்த கன்று பொன் மஞ்சள் நிறத்தில் இருக்கும். பின்னர், கன்று வளரும்போது 2.க. 3-3அ ஆமா 35 இந்நிறம் இளமஞ்சள், காவி, இளம்பழுப்பு நிறங்க ளாக மாறி, நன்றாக வளர்ச்சியடைந்த நிலையில் செம்பழுப்பு நிறம் பெறுகிறது. முழு வளர்ச்சியுற்ற ஆமாவின் தோல் கருப்பாகவும் மயிரின்றியும். நெற்றிப் பகுதி சாம்பல் நிறத்திலும் கால்களின் கீழ்ப் பகுதிகள் மஞ்சள் அல்லது வெண்ணிறத்திலும் காணப்படும். கண்கள் பழுப்பு நிறத்தனவாயினும், சில வேளைகளில் ஒளி எதிர்பலிப்பின் காரண மாக நீலநிறமாகத் தோன்றுவதுண்டு. முகம் முழு தும் அடர்ந்த, சாம்பல் கலந்த பழுப்பு நிற மயிர் கள் காணப்படுகின்றன: கண்களுக்குக் கீழ் மட்டும் இவை சற்றுக் கருநிறமாக உள்ளன. காதுகள் சற்றுப் பெரியவை; விசிறி வடிவுடையவை. கழுத்து, தோள், தொடைப் பகுதிகளில் தோல் அதிகத் தடிப்பாக அமைந்திருக்கும். பெண் விலங்கின் தலை ஆணின் தலையை விடச் சிறியது; கழுத்தும் குறுகியது, ஆணை விடப் பெண் ஆமாக்கள் உருவில் சிறியவை. மேலும் ஆணிடம் காணப்படும் திமில் இவற்றிடம் இல்லை. கால்கள் அதிக வெண்மையானவை. பொதுவாக இவற்றின் கொம்புகள் பின்னோக்கி வளைந்தும், முனைப்பகுதி கள் உள்நோக்கி வளைந்தும் காணப்படுகின்றன. கூரிய குளம்புகள் மான்களுடைய அடிச்சுவடு போன்ற அடிச்சுவட்டை உண்டுபண்ணுகின்றன. புற்கள் இவற்றின் முதன்மையான உணவாகும். இவை இலைகளையும், சில மரங்களின் பட்டை களையும் உண்ணுவதுண்டு. தரையில் ஆங்காங்கு பலவகை உப்புகளும் கனிமப் பொருட்களும் நிறைந்த இடங்களில் விரும்பி மேய்கின்றன. காலை நேரங் களில் மேய்ச்சலுக்குச் சென்று, வெப்பமிக்க பகல் பொழுதில் மரங்களடர்ந்த பகுதிகளில் நிழலில் தங்கிவிடுகின்றன. உடல் அச்சந்தரும் தோற்றம் பெற்றிருந்தாலும் உண்மையில் இவை மிகவும் மருளும் இயல்புடையவை. ஆனால் தவிர்க்க இயலாத தருணங்களில் திருப்பித் தாக்குவதுண்டு. பெரிய உருவமும், நுண்ணிய நுகர்திறனுமே அவற்றின் உதவுகின்றன. பார்வைத் திறனும் தற்காப்புக்கு ஒலி உணர்திறனும் சற்றுக் குறைவு. இவை ஆண்டின் எல்லாப் பருவங்களிலும் இனப்பெருக்கம் செய் கின்றன. கன்று ஈனும் போது,தாய் தன் கூட்டத்தை விட்டுப் பிரிந்து கூட்டத்தினின்று சிறிது தொலை வில் தனித்து வாழ்கிறது. கன்று தன்னைப் பின் தொடர்ந்து வரக்கூடிய கட்டத்தில் மீண்டும் கூட்டத் துடன் சேர்ந்துகொள்கிறது. கன்று, பிறந்த சிறிது நேரத்திலேயே நடக்கவும் தாவிக் குதித்து ஓடவும் தொடங்குகிறது. தமிழ்நாட்டில் முதுமலைப் புகலரணிலும், கர் நாடக மாநிலத்துப்பண்டிப்பூர் புகலரணிலும் இவை பேணப்படுகின்றன. எட்டு முதல் பன்னிரண்டு விலங்குகளாலான சிறுசிறு மந்தைகளாகக் கூடி