உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 ஆமணக்கு (சித்தமருத்துவம்‌)

r 34 ஆமணக்கு (சித்தமருத்துவம்) திலும், மிருதுவாக்குவதிலும் இதன் பயன்படுகின்றது. ஆமணக்குப் பயன்படுகின்றது. (yeasts), எண்ணெய் பிண்ணாக்கு நொதிகள் (enzy- பாக்டீரியா ஆகிய எண்ணெய் எருவாகப் mes), ஈஸ்டுகள் வற்றினால் பக்குவப்படுத்தப்பட்ட ஊட்டச்சத்தை அதிகம் கொண்டிருப்பதால் சாப்பிடுவதற்கு உகந்ததாகும். பட்டுப்பூச்சி களுக்கு இலைகள் உணவாகக் கொடுக்கப்படு கின்றன. இலைத் துகள்களுக்குப் பூச்சிகளைக் கொல்லும் தன்மை உண்டு. கட்டிகள், கொப்புளங் களுக்கு ஒற்றடம் கொடுப்பதற்கு இலைகள் பயன் படுகின்றன. இவற்றை மார்பகங்களில் வைத்துக் கட்டினால் பால் சுரக்கும் என்று கூறப்படுகின்றது. ஆமணக்கு நாற்றில் லிப்டேஸ் (lipase), அமைலேஸ் (amylase), இன்வர்ட்டேஸ் (invertase), மால்ட்டேஸ் (maltase) போன்ற நொதிகள் இருப்பதாகத் தெரி விக்கப்பட்டுள்ளது. முளைக்கும் விதைகளில் கேட்ட லேஸ் (catalase), பெராக்சிடேஸ் (peroxidase), ரிடக்ட் டேஸ் (reductase) போன்ற நொதிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. புதிதாக எடுக்கப்பட்ட இலையின்சாறு நச்சு விளைவுகளை அகற்றுவதற்கும், மஞ்சள்காமாலையைக் (jaundice) குணப்படுத்து வதற்கும் பயன்படும் என்று கூறப்படுகின்றது. வேரிலிருந்து எடுக்கப்படுகின்ற சாறு இடுப்புவலிக்கு (lumbago) மருந்தாகும். வேரை அரைத்துப் பசை யாக்கிப் பல்வலிக்குக் கொடுக்கலாம். வேரின் பட்டை சக்தி வாய்ந்த பேதி மருந்தாகப் பயன்படுகின்றது. ஆமணக்கு விதை பசையாக்கப்பட்டு முடக்குவாதத் திற்குப் பயன்படுத்தப்படுகின்றது. வறுக்கப்பட்ட விதைகள் தமிழ்நாட்டில் கால்நடை மருத்துவத்தில் பயன்படுகின்றன. நூலோதி மா. பாலதண்டாயுதபாணி 1. Gamble, J. S., Fl. Pres. Madras, Vol. II, Adlard & Son, Ltd., London, 1925. 2. The Wealth of India, CSIR., Publication, New Delhi, 1984. ஆமணக்கு (சித்தமருத்துவம்) ஆமணக்கின் இலை, வேர், விதை, நெய் ஆகியவை சித்த மருந்துவத்தில் பல வழிகளில் பயன்படுகின்றன. இலை. சிற்றாமணக்கின் இலையையும், கீழா நெல்லி இலையையும் ஒரே அளவு எடுத்து, அரைத்து எலுமிக்கங்காய் அளவு மூன்று நாள் காலையில் மட்டும் கொடுத்து, நான்காம் நாள் மூன்று அல்லது நான்கு முறை வயிறு போவதற்குரிய அளவு சிலதைப் பொடி கொடுக்கக் காமாலை குணமாகும்.இலை களைச் சிறுக நறுக்கிச் சிற்றாமணக்கு நெய்விட்டு வதக்கிச் சூட்டுடன், வலியுடன் கூடிய கீல்வாய்வு களுக்கும், வீக்கங்களுக்கும் ஒற்றடம் கொடுக்கலாம். ஆமணக்கின் இலையைச் சிற்றாமணக்கு எண்ணெய் தடவி, அனலில் வாட்டி மார்பில் வைத்துக் கட்டி னால் பால் பெருகும். ஆமணக்கின் இலையை விளக்கெண்ணைய் தடவி அனலில் வதக்கிக் கட்டி களில் வைத்துக் கட்ட அவை பழுத்து உடையும். வேர். ஆமணக்கின் வேரைக் குடிநீர் செய்து அதில் சிறிது பூநீறு சேர்த்து மூன்று அல்லது ஐந்து நாள்களுக்குக் காலை, மாலை ஆகிய இரு நேரங் களில் உட்கொண்டால் பக்கச்சூலை குணமாகும். வளிக் குற்றத்தைத் தன்னிலைப்படுத்தச் செய்யும் குடிநீர்களிலும், தைலங்களிலும் ஆமணக்கின் வேரைச் சேர்ப்பது வழக்கம். விதை. ஆமணக்கின் விதையை மேல்தோல் நீக்கிக் காரசாரம் வைத்துத் துவையல் செய்து கழற்சிக் காயளவு கொடுத்தால் மலச் சிக்கல் நீங்கும். விதையை ஓடு நீக்கி அரைத்துக் கட்டிகளின் மேல் பற்றிட அவை பழுத்து உடையும், கன்று ஈனாத எருமைப் பாலில் ஆமணக்கின் பருப்பை இழைத்துக் கண்களில் தீட்டினால் மறுநாள் பீளை சாகும். பின்னர்க் கண்கள் மிகவும் தூய்மையாக இருக்கும். எண்ணெய். ஆமணக்கின் விதையிலிருந்து நெய் இருவகையாக எடுக்கப்படும். அவை பச்சை எண்ணெய், ஊற்றின எண்ணெய் என்பனவாகும். பச்சை எண்ணெய். ஆமணக்கு விதைகளை உலர்த்தி ஓடுகளை நீக்கி, எந்திரத்தின் மூலமாய்ப் பருப்புகளை அழுத்திப் பிழியும் எண்ணெய், பச்சை எண்ணெய் எனப்படும். ஊற்றின எண்ணெய், ஓர் அகன்ற பாத்திரத்தில் நான்கு பங்கு நீர் விட்டு, அதில் ஆமணக்குப் பருப்பு களை இடித்து, ஒரு பங்கு சேர்த்து, தீயில் எரிக்க நெய் கக்கி நீரின்மீது மிதக்கும். இதை அகப்பையால் எடுத்து, வேறு பாத்திரத்தில் சேர்த்து, அதில் கலந் துள்ள நீரை, அனலில் வைத்துப் போக்கும் முறையே ஊற்றின எண்ணெய் எனப்படும். இதில் நீருக்குப் பதிலாக, இளநீர் சேர்த்துக் காய்ச்சி எடுக்கும் எண்ணெய் குற்றமற்றதும், உடலுக்கு மிகுந்த நன்மை பயப்பதுமாகும். இதைக் கைக்குழந்தை, இளவயதுடையவர், சூல் கொண்டவர். பிள்ளை பெற்றவர், சீதக்குருதிப் பேதியால் வருந்துபவர் முதலானோர்க்கு அச்சமின்றி வயிறு கழியக் கொடுக்கலாம். தற்போது இம்முறை வழக்கொழிந்து வருகிறது. மலக்கட்டு உள்ளவர்கள் ஆமணக்கெண்ணையை மலவாயின் உட்புறத்தில் தடவ மலம் இளகி வெளிப்படும், வயிற்று வலி யினால் அவதியுறும் குழந்தைகளுக்கு அடிவயிற்றி லும், பெரியவர்களுக்கு தொப்புளைச் சுற்றிலும் ஆமணக்கெண்ணெயைத் தடவி, ஒற்றடம் ஒற்றடம் இட