ஆற்றல், பெட்ரோலியம் 573
குறிப்புகளினாலும் ரெய்ட் ஆவி அழுத்தத்தின் வழி யாகவும் (Reid vapor pressure and the ASTM dist llation data) கேசொலினினுடைய எளிதில் ஆவியாகுந்தன்மை தீர்மானிக்கப்படுகின்றது. குறிப் பிடப்பட்ட நிலைகளில் 37.8° செ வெப்பநிலையில், கேசொலினின் ஆவி அழுத்தமே (vapor pressure) ரெய்ட் ஆவி அழுத்தமாகும். (Reid vapor pressure ) ஓர் எரிபொருளின் வடிக்கப்படுவதற்கான வளைவு (distillation curve. of a fuel) குறிப்பிடப்பட்ட சோதனை நிலைகளில் (specified test conditions) வேறுபட்ட அளவுகளில் வழங்கப்பட்ட மாதிரி எரி பொருளினை வடிக்கும் வெப்பநிலைகளைக் குறிப் பதாகும். எப்படியிருப்பினும், வடிக்கப்பட்டதற்கான வளைவில் இறுதிப்புள்ளியிலமைந்த (end point ) வெப்பநிலையைக் காட்டிலும் மிகக் குறைந்த வெப்பநிலையில், காற்று இருக்கும்போது, கேசொ லின் முழுதுமாக ஆவியாக்கப்பட்டுவிடும். ஒரு குடுப்பிட்ட விழுக்காட்டு அளவு கேசொலின் ஆவி யாகும்போது, ஒரு வளிமண்டல அழுத்தத்தில் சம நிலையில் ஒரு குறிப்பிட்ட அளவு காற்று ஆவிக் கலவை (air vapor misture) உருவாகும் வெப்பநிலை கேசொலினின் எளிதில் ஆவியாகும் நிலையென (volatility of argasoline) பிரிட்ஜ்மேன் என்பவரால் வரையறுக்கப்பட்டுள்ளது. இவ்வரையறையின்படிக் காணும்போது, குறிப்பிட்ட அதே விழுக்காட்டு அளவு ஆவியாக்கத்தைக் கொண்டு குறைந்த வெப்ப நிலையில் கொடுக்கப்பட்ட அளவு காற்று ஆவிக் கலவையை ஒருவகையான கேசொலின் மற்றொரு வகையான கேசொலினைக் காட்டிலும் உண்டாக்கும் போது, இந்த வகையைச் சார்ந்த கேசொலின் மற் றொரு வகையைச் சார்ந்த கேசொலினைக் காட்டி லும் எளிதில் ஆவியாகும் தன்மையைக் கொண்டது எனக் கருதலாம். ஒரு குறிப்பிட்ட சோதனை மாதி ரிக்கான (given test sample} வடிக்கப்படும் வெப்ப நிலைகளைக் காட்டும் வளைவுகள் (distillation tem - perature curves) ஒரு குறிப்பிட்ட வெப்ப நிலையை அடையும் நேரத்தில் வடிக்கப்பட்ட மாதிரிப் பொரு ளின் விழுக்காட்டு அளவைக் காட்டுவதாகும். ஒப்படர்த்தி (specific gravity). பெட்ரோலிய எரிபொருளின் ஒப்படர்த்தி 23° Q. வெப்ப நிலையில், பெட்ரோலிய விளைபொருளின் ஒரு குறிப் பிட்ட பருமன் அளவுள்ள எடைக்கும், அதே வெப்ப நிலையில், அதே பருமன் அளவுள்ள வடிக்கப்பட்ட நீரின் எடைக்கும் உள்ள வீகிதத் தொடர்பாகும், இவ் விரு எடை அளவீடுகளும் காற்றில் மிதக்கும் விசை யைக் (air buoyancy) கருத்தில் கொண்டு அளவுகள் சரிசெய்யப்படுகின்றன. (corrected) அ. பெ.க.வின் அடர்த்தி அளவுகோலிற்கும் (API gravity scale) ஒப்படர்த்திக்கும் (specific gravity) உள்ள தொடர்பு கீழ்க்காண்பதாகும். ஆற்றல், பெட்ரோலியம் 573
- API = 141.5/ (ஒ.அ.60/23. செ.) - 131.5
பாயும் நிலை (pour point). மிகக் குறைந்த வெப்ப நிலையில் எரிபொருளானது பாயக் கூடிய தன்மை யைப் பெறும் நிலை பாயும்நிலை என வரையறுக் கப்படுகின்றது. இப்பண்பானது எரிபொருளின் உட்கூறைச் (composition) சார்ந்ததாகும். சாதாரணமாக, எரிபொருளின் பாயும் நிலை எதிர்பார்க்கப்படும் குறைந்த பயன்பாட்டு வெப்ப நிலைக்கும் கீழாகக் குறைந்தது 10 இலிருந்து 15° வரை இருக்க வேண்டும், பனிப்படல நிலை ( cloud point). அனிலீன் பனிப் படல நிலை ஓர் எரிபொருள் எண்ணெயில் பாரஃபின் தன்மையைக் காட்டும் அளவீடாகும். அனிலீன் பனிப்படல நிலையின் உயர்ந்த மதிப்பு, நேராகப் பெறப்பட்ட பாரஃபினைக் கொண்ட எண்ணெ யினைக் (straight-run paraffinic oil) குறிக்கும். அனி லீன் பனிப்படல நிலையின் குறைந்த மதிப்பு வாசனை யுள்ள நாப்தீனைக் கொண்ட எண்ணெயையோ உயர் சிதைவடைந்த எண்ணெயையோ குறிக்கும். கார்பன் அளவு (carbon content). காண்க. கான்ராடுசன் கார்பன் சோதனை (conradson carbon test). சுழ்தெறி நிலை (flash point). MUALL சோதனை நிலைகளில் ஒரு சோதனைச் சுடரை (test flame) வைக்கும்போது, எரிபொருட் பரப்பின் மீது ஒளிவீசும் மிகக் குறைந்த வெப்பநிலையாகும். இப்பண்பு, எரிபொருள் ஆவியாவதற்கான போக் கினைக் காட்டும் அறிகுறியாகும், எரிநிலை (fire point). குறிப்பிட்ட சோதனை நிலைகளில் ஓர் எரிபொருள் தீப்பற்றிக் குறைந்தது 5 நொடிகளாவது எரியும், மிகக் குறைந்த வெப்ப நிலையாகும். புகைநிலை. இந்த அளவீட்டின் வாயிலாக, ஓர் எரிபொருளின் புகைக்கும் போக்கு (smoking ten- deney) குறிப்பிடப்படுகின்றது. புகை நிலையானது, ஒரு குறிப்பிட்ட திரியினைக் கொண்ட விளக்கில் (given wick lame) ஒரு குறிப்பிட்ட வகையைச் சார்ந்த சுடரில் (specified type of flame) காணக் கூடிய புகை ஏதுமற்ற உச்ச உயரத்தின் (maximum height) அளவாகும். பிசுப்புத் தன்மை (viscosity). குறிப்பிட்ட நிலை களில், நுண்துளைக் குழாய் (capillary tube) வழி யாக, ஒரு குறிப்பிட்ட அளவு எரிபொருள் பாய்ந்து செல்வதற்கான நேரம் பிசுப்புத்தன்மையின் அளவா கக் குறிப்பிடப்படுகின்றது. இயங்குப் பிசுப்புத்