உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/603

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆற்றல்‌, பெட்ரோலிய 579

ஆகும். அமெரிக்க ஒன்றிய நாடுகளில் ஓர் ஆண்டில, குழாய் வழிகளில் இயற்கை நில எண்ணெய் வழங் கீடு 5,509,663, 000 பீப்பாயாகவும், தூய்மையாக் கப்பட்ட பொருள்கள் 3,336872,000 பீப்பாயாக வும் மொத்தம் 8,846,565,000 பீப்பாயாகவும் அமையும். தயாரிக்கும் இடங்களிலிருந்து உள்நாட்டிற் கும், இடைப்பட்ட தூரத்தினைக் கொண்ட இடங் களுக்கும் மற்றும் தயாரிக்கும் இடங்களிலிருந்து தங் களது இருப்பிடங்களில் தேக்கத் தொட்டிகளைக் கொண்டிருக்கும் தனியார்களுக்கும், வணிக, தொழிற் சாலைப் பயனீட்டாளர்களுக்கும் பெட்ரோலியப் பொருள் தொட்டிகளைக் கொண்ட சரக்கு வண்டி கள் (tank trucks) கொண்டு சென்றன. அதிகச் செலவின் காரணமாக, சரக்கு வண்டிகள் வழியாக மிகுந்த அளவு வழங்கீடு, 480 கி. மீ ஆர அளவிற்குள் அமைந்தது. பதப் பல் தூய்மையாக்குதலும் பெட்ரோலியத்தைத் படுத்துதலும். இயற்கை நில எண்ணெயின் வேறுபட்ட வகைகளின் காரணமாகத் (செயல்படுத் கொள்ளும்போது, தும் முறையினைக் கருத்தில் முக்கிய வேறுபாடுகளைக் காட்டக் கூடியவை ) தூய் மையாக்கப்பட்ட பொருள்களின் (refined products) வேதியியற் கலப்பு ஒரு நிலஇயல் அமைப்பிற்கும் மற்றொரு நில இயலமைப்பிற்கும் வேறுபடுகின்றது. மேலும் சிலவகையான தூய்மையாக்கப்பட்ட பெட் ரோலியப் பொருள்களுக்கு, வேறுபட்ட காலங்களில் தேவைமாறுவதனாலும், எந்த இரு பெட்ரோலியத்' தூய்மையாக்கும் நிலையங்களும், ஒருமித்து இரா. வினையூக்கம் செய்து சிதைக்கும் அமைப்புகளும் catalytic crackers) மாற்றியமைக்கும் அமைப்புகளும் ஹைடிரஜனை க் (retormers) கொண்டு மாற்றிச் செயல் முறைப்படுத்தும் அமைப்புகளும் (hydro-trea- ters) மற்றும் இது போன்றதான சில தொகுதிகளும், ஒரு தூய்மையாக்கும் நிலையத்திற்கும் மற்றொரு தூய்மையாக்கும் நிலையத்திற்கும் ஒன்றாகவே இருந் தாலும், இவையாவும் ஒன்றுடன் ஒன்று இணைக் கப்பட்ட அமையும் முறையும், ஒரு நிலையத்திற்கும் மற்றொன்றிற்கும் வேறுபடும். படம் 9 இல் காட்டப் பட்டுள்ள படத்தில், ஒருங்கிணைக்கப்பட்ட தூய்மை யாக்கும் நிலைய அமைப்புகள் மிகவும் எளிமைப் படுத்திக் காட்டப்பட்டுள்ளன. இயற்கை நில எண்ணெயிலிருந்து எரிபொருள் களைத் தயாரிப்பதற்கு அடிப்படையான முக்கிய செயல்முறைப்படுத்தும் தொகுதிகளாவன இயற்கை நில எண்ணெயைக் காய்ச்சி வடித்தல் (crude distill- ation), வினையூக்கி மாற்றியமைத்தல் (catalytic cracking), வினையூக்கிச் சிதைத்தல் (catalytic cracking), வினையூக்கி ஹைடிரஜன் முன்னிலையில் சிதைத்தல் (catalytic hydro cracking), ஆல்கைலேற்றம் அ.க. 3-37அ ஆற்றல், பெட்ரோலிய 579 (alkylation), வெப்பப்படுத்திச் சிதைத்தல் (thermal cracking), ஹைடிரஜனைக் கொண்டு மாற்றிச் செயல் முறைப்படுத்துதல் (hydro treating), வளிமச் செறி வூட்டம் (gas concentration) என்பனவாகும். நீர்ம மற்றும் வளிமப் பாய்வுகளைத் தூய்மை யாக்குவதற்குப் பல எண்ணிக்கையுள்ள துணை முறைகளைக் கொண்ட பதப்படுத்தும் தொகுதிகளை மேலாளுமையையும் மாசுறுதலைக் கட்டுப்படுத்தும் அமைப்புகளைக் குளிர்விக்கும் நீர் அமைப்புக ளையும் வளிமப் பாய்விலிருந்து (gas streams) ஹைடிரஜன் சல்பைடினை (அல்லது தனிம சல்பரினை) மீட்கும் தொகுதிகளையும், உப்பினை நீக்கும் அமைப்புகளையும் மின் நிலையங்களையும் நீராவி ஆக்கம் செய்யும் அமைப்புகளையும், இயற்கை நில எண்ணெயையும் அதன் விளை பொருள்களை யும் தேக்கத் தக்க வசதிகளையும் தூய்மையாக்கும் நிலையங்கள் கொண்டிருக்கின்றன. அமெரிக்க ஒன்றிய நாடுகளின், பெட்ரோலியத்தைத் தூய்மையாக்கும் தொழிற்சாலைகளின் முக்கிய புள்ளித் தொகுப்பு விவரங்கள் அட்டவணை 15 இல் கொடுக்கப்பட் டுள்ளன. பெட்ரோலியம் தூய்மைப்படுத்துதலும் பெட் லோலிய வேதியியற் பொருட்களின் ஆக்கமும், 24 மணி நேரமும், ஆண்டின் 365 நாள்களிலும் நடை பெறும். இதன் பராமரிப்பிற்கான நேரம் திட்ட மிடப்பட்ட குறைந்த கால அளவைக் கொண்டது. காண்க படங்கள் 10.11. ஒருவர் தூய்மையாக்கும் நிலையத்தைப் பார்த்தாலன்றி அதன் அளவினையும், சிக்கல் வாய்ந்த அமைப்பையும் புரிந்து கொள்ளுதல் எளிதன்று. காண்க, படங்கள் 12, 13. இயற்கை நில எண்ணெயைக் காய்ச்சி வடித்தல். தூய்மையாக்கும் சாதனத்தில் அரித்தலனக் குறைப் பதற்காக, காய்ச்சி வடிக்கும் தொகுதிக்கு முன்ன தாக உப்பினை நீக்கும் அமைப்பு (desalter) பயன் படுத்தப்படுகின்றது. இவ்வுப்பினை நீக்கும் அமைப் பானது மூல இயற்கை நில எண்ணெயிலுள்ள கனிம உப்பின் அளவைக் (inorganic salt) குறைகின்றது. உப்புச்செறிவூட்டங்கள் பரந்த அளவில் வேறுபடுகின் றன, 1000 பீப்பாய்களில் சுழி முதல் பல நூறு கி.கி. அளவிலான NaCl என்று குறிப்பிடப்படு கின்றது. இயற்பியல் முறையில் காய்ச்சிப் பகுத்து வடிக்கும் முறையில் (fractioral distillation) இயற்கை நில எண்ணெய்க்கான தொகுதி இயங்கி, இயற்கை நில எண்ணெயைப் பல கொதிக்கும் இடை வெளிகளைக் கொண்ட கூறுகளாகப் பிரிக்கின்றது. இவ்வாறாகப் பிரிக்கப்பட்ட கூறுகள், தேர்ந்தெடுக் கப்பட்ட சாதனத்தின் வழியாகச் செயல் முறைப் படுத்தப்படுகின்றன. தூய்மையாக்கும் நிலையங் களிடையே, இக் கூறுகளின் (அல்லது பின்னங்களின்) கொதிக்கும் இடைவெளி வேறுபட்டாலும், இயற்கை