ஆற்றல் மட்டங்கள் 587
யில் படிப்படியாக அதிகரித்துக் கொண்டே செல்லும். மிகத் தாழ்ந்த ஆற்றல் மட்டம் அடி மட்ட நிலை (ground state) எனவும், உயர் ஆற்றல் மட்டங்கள் கிளர்ச்சியுற்ற நிலைகள் (excited states) எனவும், அழைக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக படம் 1 இல் ஹைட்ரஜன் அணுவின் ஆற்றல் மட்டங் கள் தரப்பட்டுள்ளன. பொதுவாக உயர்மட்டத்தி லுள்ள அணுக்களின் எண்ணிக்கை அடிமட்ட நிலையி லுள்ளதைவிடக் குறைவாகவே இருக்கும். அணு நிறமாலை. தனித்தனியாக ஆற்றல் நிலைகளிலுள்ள எலக்ட்ரான்கள் தமது ஆற்றலை வெளியிடுவதில்லை. ஆனால், தாழ் ஆற்றல் மட்டங்களில் உள்ள எலக்ட்ரானைப் புறச்செய் லால் கிளர்ச்சியுறுமாறு செய்து உயர் ஆற்றல் மட்டங்களுக்கு மாற்றலாம். பொருள்கள், இயல் பாகத் தமது ஆற்றலை எவ்வளவு குறைவாக வைத் துக்கொள்ள முடியுமோ அவ்வளவிற்குக் குறைத்துக் கொள்ள முயலுமென்பது இயற்கை நெறி. எனவே, இந்தக் கிளர்ச்சியூட்டப்பெற்ற எலக்ட்ரான், தன் உயர் ஆற்றல் மட்டத்திலிருந்து அடி ஆற்றல் மட் டத்திற்குத் தாவும். அப்போது, அவ்விரு மட்டங் களுக்கிடையேயுள்ள ஆற்றல் வேறுபாடு ஒரு கதிர் வீச்சாக (radiation) வெளிப்படும். ஒரு தனிமத்தில் இவ்வாறு வெளிப்படும் கதிர்விச்சுக்களை அணுவின் நிறமாலை (atomic spectrum) எனக் கூறுகிறோம். அல்லது குறிப்பாக அணுவின் உமிழ்வரி நிறமாலை (emission line spectrum) என அழைக்கிறோம். சுற்றுப்பாதைக் குவாண்டம் எண் ஆற்றல் - ஜூல்களில் 0 ஆற்றல் மட்டங்கள் 587 ஒவ்வொரு தனிமத்திற்கும் அதற்குரிய அணு நிற மாலை உண்டு. இதேபோல், கீழ் மட்டத்திலுள்ள ஓர் எலக்ட்ரான் ஒரு குறிப்பிட்ட ஆற்றலை உட் கவர்ந்து மேல் மட்டத்திற்கு உயரும். இச் செயலை உட்கவர்தல் எனக் கூறுகிறோம். ஆற்றல் கதிர்வீச்சாக வெளிவரும்போதோ உட்கொள்ளப்படும்போதோ E = hy என்ற சமன் பாட்டின்படி நடைபெறுகிறது. hy என்பது ஒரு ஃபோட்டான் (photon) பெற்றிருக்கும் ஆற்றலாகும். இதில் Y- என்பது கதிர்வீச்சின் அதிர்வெண் (frequ- ency); h என்பதுபிளாங்கின் மாறிலி (planck's con- stant); இதன்படி,ஓர் எலக்ட்ரான் E, என்ற ஆற்றல் மட்டத்திலிருந்து, E, என்ற ஆற்றல் மட்டத்திற்குத் தாவும்பொழுது, இவ்விரு மட்டங்களுக்கிடையே உள்ள ஆற்றல் வேறுபாடான E -E,ஒரு ஃபோட் டானாக வெளிப்படும். அதாவது, E=Fz-E = hy EFE₁ இக்கருத்து கீழ்க்காணும் படத்தில் தெளிவாக்கப் பட்டுள்ளது. எலெக்ட்ரான் (கிளர்ச்சியுற்றது) ஃபோட்டான் = ஆற்றல் = E,E,-hr E₁ D=5 -0.87x10-19 --கூடு n=4 -1.36x10-9 கிளர்ச்சி நிலைகள் N - கூடு n=3 M - கூடு n = 2 L-கூடு அடிமட்டநிலை -1 K- கூடு -2.42x10 ts -5,43x10-19 21.76x10¹ படம் 1. ஹைட்ரஜன் அணுவின் ஆற்றல் மட்டங்கள் படம் 2 ஃபோட்டான் வெளிப்படுதல் அணுக்கரு ஆற்றல் மட்டம். கதிரியக்கத் தனி மங்கள் radio active elements) மிகு ஆற்றலு டைய காமாக் கதிர்களை (y-rays) வெளிவிடு கின்றன. அதன் நிறமாலை தனித் தனியான திட்டவட்டமான அதிர்வெண்களைக் கொண்டது. இது, அணுவைப்போல அணுக்கருவும் பல ஆற்றல் மட்டங்களைக் கொண்டுள்ளது என்பதனைக் காட்டு கிறது.அணு, ஒரு மட்டத்திலிருந்து மற்றொன்றிற்கு மாறும்போது கதிர்வீச்சு வெளிவிடுதல்போல், காமாக் கதிர் அணுக்கருவின் ஆற்றல் மட்டங்களில் மாற்றம் ஏற்படும்போது வெளிப்படுகிறது. ஆல்ஃபா அல்லது பீட்டாத் துகள் (& or தீ particle) வெளிவரும்போது காமாக் கதிர் வெளிப்படும். ஓர் அணுக்கரு ஆல்ஃபா அல்லது பீட்டாத் துகளை வெளிவிடும்போது எச்ச அணுக்கருவை