602 ஆற்றல், வேதியியல் எரிபொருள்
602 ஆற்றல், வேதியியல் எரிபொருள் பொருள்களும் பயன்படுகின்றன. சமீபகாலமாகத் திண்ம எரிபொருள்களின் எரிதல் வெப்பத்தை உயர்த்தும்வகையில் போரான் (B) அலுமினியம் (A1 ) பெரிலியம் (Bc) போன்ற உலோகங்கள் எரிபொருள் களோடு சேர்க்கப்படுகின்றன. இவ்வாறு சேர்க்கும் உலோகங்கள் ஒரு வகையான நிலைத்த எரியாத் தன் மையை (combustion instability) நீக்கவும் உதவுகின் றன. ஹைடிரஜன். வேதியியல் எரிபொருள்கள் இரண்டு வகைப்படும். அவையாவன, கரியாக்க வகை (car- bonaceous), கரியாகா வகை (non carbonaceous) என் பனவாகும். கரியாகா அல்லது கரியினாலாகாத எரிபொருள் கள் அனைத்திலும் அதிக வெப்ப மதிப்புள்ள எரி பொருள் ஹைடிரஜனாகும் (gaseous hydrogen). இதன் அடர்த்தி மிகக் குறைவாக உள்ளதால் இத னுடைய வெப்ப மதிப்பீட்டு எண் 340 பி.வெ.அ. ஆகும். ஹைடிரஜன் எரிபொருள், ஆக்சிஜன் ஹைடிர ஜன் கைவிளக்குகளில் (torch) பயன்படுகிறது. சாதா ரணமாக ஆக்சிஜன் அசெட்டிலின் தீத் தணலால் உண்டாக்க முடியாத 28000°செ. வெப்ப நிலையை ஹைடிரஜன் ஆக்சிஜன் தீத் தணலால் உண்டாக்க முடி கிறது.ஹைடிரஜன் மூலக்கூறு ஈரணுமூலக்கூறு ஆகும். மூலக்கூறு ஹைடிரஜனில் இருந்து உண்டாகும் அணு நிலை ஹைடிரஜன் (atomic hydrogen) அதிக வினைத் திறன் (reactive) உடையதாக உள்ளது. ஹைடிரஜன் அணுக்கள் ஒன்றாக இணைந்து உண்டாகும் ஹைடி ரஜன் தீத் தணலில் 3400°C வெப்பநிலை கிடைக் கிறது. ஹைடிரஜன் வளிமம் எரிபொருள் மின்கலன்களி லும் (fuel cells) பயன்படுகிறது. இவ்வகை எரிமின் கலங்களில் எரிவதால் ஏற்படும் வெப்ப ஆற்றல் நேரடி யாக மின் ஆற்றலாக மாற்றம் அடைகிறது. ஆற்றல் நேரடியாக மின் ஆற்றலாக மாறும். இந்த மாற்றம் உலக எரிபொருள் தோற்றுவாய்ப் பொருள்களின் அளவைநிலைக்கச் செய்கிறது. காட்டாக, ஹைடிாஜ னும், ஆக்சிஜனும் எரிபொருளாகப் பயன்படும் எரி பொருள் மின்கலன் சில இடங்களில் பயன்படுகிறது. நீர்ம ஹைடிரஜன். 19 ஆம் நூற்றாண்டின் முற பகுதிவரை துப்பாக்கி மருந்தே (monopropellants ) ஏவூர்திகளில் எரிபொருளாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது. இரண்டாம் உலகப்போருக்குப் பின்புதான் ஏவூர்தி எரிபொருளாக ஹைடிர ஜனைப் பயன்படுத்த தொடங்கினர். நீர்ம எரிபொருள்களை உலகுக்கு அறிமுகப்படுத்தியவர் இராபர்ட் ஹட்சிங் கொடார்டு (Robert Huching Coddard) ஆவார். அவர் நீர்ம எரி பொருள்களோடு (bipro pellants) நீர்ம ஆக்சிஜனைப் பயன்படுத்தினார். நீர்ம எரிபொருள்களைப் பயன்படுத்துவதால் பல நன்மைகள் இருக்கின்றன. எரிதலின் வேகத்தைக் கட்டுப்படுத்தவோ எரிதலை நிறுத்தவோ மீண்டும் எரிதலைத் தொடங்கவோ, நீர் எரிபொருளைப் பயன்படுத்தும் போது மிக எளிதாகச் செய்ய முடிகிறது. எனினும் சில சிக்கல்கள் ஏற்பட்டன. எரிபொருள்கள் திரவ நிலையில் இருப்பதால் அவற்றை ஏற்றுவதற்கும் (pumping) ஒழுங்குபடுத்து வதற்கும் (regularing) எந்திரங்கள் தேவைப்பட்டன. எனவேதான் நைட்ரோ கிளிசரின், நைட்ரோ செல் லுலோஸ் போன்ற நவீனத் திண்ம எரிபொருள் வழக்கிற்கு வந்தன. ஆற்றல் உற்பத்தித்திறன் அடிப்படையில் பார்க் கும்போது அனைத்து நீர்ம எரிபொருள்களைவிட நீர்ம ஹைட்ரஜனே ஏவூர்தி உந்துவிசைக்கேற்ற எரிபொருளாக இருக்கிறது. ஒரு கி.கி. எரிபொருளை ஒரு நொடியில் எரிக்கும்போது எத்தனை கி.கி. அழுத் தத்திறன் (pounds of prints) கிடைக்கிறதோ அதுவே அந்தக் குறிப்பிட்ட எரிபொருளால் ஏவூர்திக்குக் கிடைக்கும் முன்தள்ளுவிசை (propelsive ports ) அல்லது முன்உந்து விசை எனப்படும். இந்த முன் தள்ளு விசைதன் எரிபொருள்திறன் (specific impulse) (ISP) எனப்படும். கிரதீன்ஆக்சிஜன் எரிபொருள் கலவையின் தன்எரிபொருள் திறன் 250. அதே சம யத்தில் ஹைடிரஜன் ஆக்சிஜன் எரிபொருள் கலவை யின் தன் எரிபொருள் திறன் 315 ஆகும். அதிக வினையாற்றல் உள்ள ஆக்சிஜனேற்றிகளான நீர்ம ஓசோன் (0) நீர்ம ஃபுளோரின் (F) ஆகியவற்றை உபயோகிப்பதன் மூலம் எரிபொருள் கலவையின் தன் எரிபொருள் திறனை 360 வரை உயரச்செய்யலாம். நீர்ம ஹைடிரஜனைப் பயன்படுத்துவதில் தொல்லைகள் ஏற்படுகின்றன. முதலாவதாக அத னுடைய குறைந்த கொதிநிலை (-253°C) ஆகும். எனவே அதைத் தயாரிப்பதிலும் சேமித்து வைப்பத் திலும் தொல்லை ஏற்படுகிறது. இரண்டாவதாக நீர்ம ஹைடிரஜனின் அடர்த்தி குறைவாக இருப்ப தால் அதைச் சேமித்து வைப்பதற்கு அதிக தேவைப்படுகிறது. குறைந்த அணு எடையுள்ள தனி மங்களோடு சேர்ந்து நீர்ம ஹைடிரஜன் பருமனளவு குறைவான (less valuminous) எரிபொருள்களைக் கொடுக்கிறது. அவ்வாறு உண்டாகும் எரிபொருள் களின் தன்எரிபொருள் திறனில் அதிகக் குறைவு ஏற் படுவதில்லை. சில இடம் ஹைடிரைடுகளும் மற்றும் சிலஎரிபொருள்களும். ஹை டிரஜன், நைட்ரஜன் வளிமத்தோடு சேர்ந்துஎளிதில் நீர்மமாக்கக் கூடிய அம்மோனியா (NH;) ஹைட்ர சீன் (N, H,) ஆகிய வளிமங்களைக் கொடுக்கிறது. போரான் (B) லித்தியம் (Li) சிலுக்கான் (Si)கந்தகம் (S) ஆகிய தனிமங்களின் ஹைடிரைடுகள் சிறந்த எரி பொருளாகக் கருதப்படுகின்றன. காட்டாக, (டைபோ ரேன் (B, Hரு). மற்ற சாதாரணக் கரியாக்க (car- bonaceous) எரிபொருள்களின் ஆற்றலைப் பெருக்கப்