உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/635

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆற்றல்‌, ஹைடிரஜன்‌ எரிபொருள்‌ 611

வகை அமைப்புகளை இயக்கும் செலவுகள் முறையே 1.6 மில்லியன் மற்றும் 1.8 மில்லியன் என மதிப்பிடப்பட்டன. 1960 ஆம் ஆண்டின் நடுவில் மின்சார உயர் வெப்பநிலை ஆவிநிலை மின்பகுப்பு (electric high temperature vapour phase electrolysis) முறை உரு வாக்கப்பட்டன. இம்முறையில் திண்ம நிலை மின் பகுபொருளாக (electrolyte) நுண்துளைகள் கொண்ட சிர்க்கோனியா பயன்படுத்தப்படுகின்றது. இயங் கிடும் வெப்பநிலை அளவுகள் 500 முதல் 800° செ. வரை ஆகும். இதைவிட மேம்பட்ட அமைப்பு வாக்கப்பட்டு வருகின்றது. இம்முறையில் துணை விளைபொருளான ஆக்சிஜனைப் (by-product oxygen பயன்படுத்தி ஹைடிரஜன் மட்டும் ஆக்கப்படுகின்றது. மின்பகுப்புக் கருவியின் மேம்பட்ட வடிவமைப்பு களில் மேலான மின்முனைகள் குறிப்பிடத்தக்கவை. மேம்பட்ட மின்முனைகளின் மூலம் மின்பகுப்பு செலவினை 20% முதல் 25% ஹைடிரஜனுடைய வரை குறைத்திடலாம். உரு வெப்ப வேதியியல் முறையில் பிரித்தல் (thermo chemical splitting). இதற்குரிய முதன்மையான நோக் கம் யாதெனில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட தொடர்ந்த வேதியியல் வினைகளின் (series of chemical reactions) வழியாக நீரிலிருந்து ஹைடிரஜ னையும், ஆக்சிஜனையும் நிறைவளிக்கும் வகையில் பிரிப்பதாகும். ஜெர்மன் கூட்டுக் குடியரசிலுள்ள (nederal republic of germany) ஜிலிச் அணுக்கரு ஆய்வுமையத்தில் (nuclear research centre julich) பெரிய அளவிலான பணிகள் நடைபெற்றுக் கொண் டிருக்கின்றன. இங்கு கந்தகம், குளோரின் ஆகியவற் றின் அடிப்படையில் வெப்ப வேதியியல் சுழற்சி முறையில் (thermo chemical cycles) அதிகக் கவனம் செலுத்தப்படுகிறது. குறைந்தது 56 வேதியியல் தனி மங்களுடனும் எதிர்ப்படும் பிரச்சினை யாதெனில் ஒன்று அல்லது இரண்டாவது தொடர்வினையைச் செய்ய அதிக ஆற்றல் தேவைப்படுவதாகும்; மேலும் மறு ஆக்கம் செய்யக்கூடாத நிலைத்த சேர்மங்கள் உண்டாக்கும் வினைகள் தோன்றுவதும் ஆகும். இதில் தோன்றும் வினைகள் வெப்ப மூலத்திற் காக அணுக்கரு உலையைச் சார்ந்து இருக்கும்; அவை நடைமுறை சார்ந்த இயங்கக் கூடிய பிணைப்பு உலை வெளிப்படுவதற்காகக்காத்திருக்க வேண்டியதில்லை. CaBr + 2H,O → Ca (OH), + 2HBr Hg + 2HBr t HgBr, + H 2 HgBr,, + Ca(OH), → CaBr, + HgO + H,O 4 HgO + Hg + + 0, இவ்வரிசை முறையமையும் வினையின் குறைபாடு யாதெனில் உயர்ந்த அரிக்கும் ஹைடிரஜன் புரோமை டினுடைய (corrosive hydrogen bromide) அ. க. 3-39அ பயன் ஆற்றல், ஹைடிரஜன் எரிபொருள் 611 பாடேயாகும். இத்திட்டத்தில் பாதரசம் மிகவும் அதிக மாகத் தேவைப்படுகின்றது. வெப்ப வேதியியல் முறையில் ஹைடிரஜனைப் பிரிப்பதற்கான கட்டுமா னத்திற்குத் தகுதியுடைய பொருள்கள் கிடைப்பது குறைவு ஆகையால் ஆய்வாளர்கள் பெரிதும் கவலை கொண்டுள்ளனர். அணுக்கருப் பகுதிக்கும் (nuclear side) வேதியியற் பகுதிக்கும் (chemical side) இடை. யிலுள்ள வெப்பப் பரிமாற்றிகள் (heat exchangers) கரித்தலையும் (corrosion) கதிரியக்க மாசுறுதலையும் (radio active contamination) தாங்கும் வன்மை பெற்றிருக்க வேண்டும். வழக்கமான நிக்கல் - குரே மியம் உலோகக் கலப்புகள் (alloys) 1050 கெ. வரை தாங்கக் கூடியவை வேற்றுநாட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட உலோகக் கலப்புகள் 1400 கெ. வரை தாங்கக் கூடியவையாகும். இவ்வெப்ப நிலைகட்கு மேலாகச் செல்லும்பொது வெண்களியாற் செய் யப்பட்ட பொருள்களையும் (ceramics) புதிய வகை யிலான உலோகக் கலவைகளையும் பயன்படுத்த வேண்டியிருக்கும். அமெரிக்க ஒன்றிய நாட்டிலுள்ள லாஸ் ஆலெமாசில் பெரிய அளவில் இவ்வாய்வுகள் நடைபெற்று வருகின்றன. எ ஹைடிரஜன் பயன்பாடுகள். எரிபொருள் பொருளா தாரத்தில் மிக்க அளவில் கவனம் செலுத்துவதற்கு முன்பும், இரண்டாம் உலகப் போருக்குப் பின்பும் ஹைடிரஜனின் தேவை ஆண்டிற்கு 15% வீதத்தில் வளர்ந்தது. 1970 ஆம் ஆண்டில் அமெரிக்க ஒன்றிய நாட்டில் 3 டிரில்லியன் பருமன் அடிஹைடிரஜன் (8 மில்லியன் டன்கள்) தோற்றுவிக்கப்பட்டது. 2000 ஆண்டு முதற்கொண்டு திறன் சாராத பயன்பாடு களில் ஹைடிரஜனுடைய வேதியியல் தேவையளவு ஆண்டொன்றிற்கு 7% உயரும் என்று எதிர்பார்க் கப்படுகின்றது. ஹைடிரஜன் பின்வரும் காரியங்களுக் குத் தேவைப்படுகிறது. அவை, பெட்ரோலியம் தூய் மையாக்குதல் petroleum refining) நெகிழிகள் (plastics) தயாரித்தல், எரி எண்ணெய்களின் கந்தக நீக்கம் (desulfurization of fuel oils) இரும்புத் தாதி னைத் தூய்மை செய்தல் (iron ore reduction), வான வூர்திகளிலும் விண்கலங்களிலும் பயன்படுதல் (aerospace uses), ஹைடிரஜன் /காற்று எரிபொருள் மின்கலங்களிலும் (hydrogen/air fuel cells) நெகிழுந் தன்மையுடைய அணுத்திரள் பொருள்களிலும் (ela- stomers) பயன்படுதல் என்பனவாகும். அமோனியா ஆக்கத்தில் (ammonia production) ஹைடிரஜன் 42% அளவு பயன்படுத்தப்படுகின்றது. பெட்ரோலியம் தூய்மையாக்குதலில் (petrolcum refining) 38%அளவு பயன்படுத்தப்படுகின்றது. உலோகத் தொழிலியல் முறைகளிலும், உணவினைப் பதப்படுத்தும் தொழி லிலும் பயன்படுத்தப்படுகின்றது. வழக்கத்தில் இல் லாத எரிபொருள்களுக்கான புதிய முறைகள் வளர வளர ஹைடிரஜனின் தேவை கீழ்க்காணுமாறு மதிப் பிடப்படுகின்றது. நிலக்கரியிலிருந்து கூட்டிணைப்பு