உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/636

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

612 ஆற்றலரி

612 ஆற்றலரி முறையில் உருவாக்கப் பெறும் பண்படா எண் ணெயை (synthetic crude oil) உற்பத்தி செய்யும் தொழிலில் ஒரு பீப்பாய் (barrel) எண்ணெய்க்கு 650 பரு மீ அளவு ஹைடிரஜன் தேவைப்படும். எண் ணெய்க்களிப் பாறையிலிருந்து (shale) ஒரு பீப்பாய் எண்ணெய் பெற 130 பரு மீட்டர் ஹைடிரஜன் தேவைப்படும். நிலக்கரி வளிமமாக்கத்தில் உண்டாக் கப்பட்டுக் குழாய் வழியாகச் செலுத்தப்படும் தொகுப்பு முறையில் உருவாக்கப்பட்ட ஒவ்வொரு 1000 பருமன் அடி வளிமத்திற்கும் 150 பரு மீ ஹைடிர ஜன் தேவைப்படும். பெட்ரோலியம் தூய்மையாக்கு தலில் (petroleum refining) ஒரு பீப்பாய் அளவு இயற்கை நில எண்ணெய் (crade) தூய்மையாக்கு வதற்கு 61 பரு மீட்டர் ஹைடிரஜன் தேவை என அளவிடப்படுகின்றது. இரும்புத் தாதினை நேரடி யாக உருமாற்றம் செய்யும்போது ஒரு டன் அளவு இரும்பிற்கு ஹைடிரஜனின் பயன்பாடு 2000 பரு மீட்டர் அளவிற்கு உயரும் எனவும் எதிர்பார்க்கப் படுகின்றது. மற்ற வகையான ஹைடிரஜன் மூனங் கள் (hydrogen Sources) கிடைக்காதபோது தேவை யான ஹைடிரஜனை இயற்கை வளிம மொத்த ஆக்க அளவில் (natural. gas production) கிட்டத்தட்ட 10% இயற்கை வளிமத்தைப் பயன்படுத்திப் பெறலாம். ஜே.சு. ஆற்றலரி சிவப்புக் கும்போடாலி என்ற மறு பெயரும் இதற்கு உண்டு. இது ஒரு பூவிதழ் வட்டமுடைய இருவிதை யிலைக் குடும்பங்களில் ஒன்றான போலிகோனேசியைச் (polygonaceae) சார்ந்தது. தாவரவியலில் தாவரவியலில் இதற்கு பெர்சிக்கேரியா கிளேப்ரா (persicaria glabra) (willd.) polygonum - glabrum (wlld ) என்று பெயர். இது குளக்கரை, ஆற்றங்கரை ஓரங்களிலும் ஈர நிலப்பகுதிகளிலும் களைச்செடியாக வளர்கின் றது. சமவெளிகளிலும், 2,000 மீ. உயரம் வரை உள் ளப் பகுதிகளிலும் காணப்படுகிறது. gonez. சிறப்புப்பண்புகள். இது பெரும்பாலும் ஓராண்டு அல்லது ஒரு பருவம் வாழக் கூடிய குறுஞ்செடி annual berb) ஆகும். தண்டுகள் பருத்த கணுக்க ளைக் (swollen nodes) கொண்டவை. இதன் மற் றொரு தனிப்பண்பு உறை இலையடிச் சிதலைப் (ochreate stipules) பெற்றிருப்பதாகும். இதன் இலை கள் ஈட்டி வடிவானவை; மாற்று இலை அமைவு கொண்டவை; இலை விளிம்பு முழுமையானது வெளிர் சிவப்புப் பூக்கள் கதிர்வகை (raceme) மஞ்ச ரியில் அமைந்திருக்கும்; மிகச் சிறியவை, இருபாலா னவை ஆரச்சமச்சீரானவை. தண்டுகளின் நுனிப் பகுதிகளிலோ, இலைக்கோணங்களிலோ மசஞ்ரி b 3 8. 2 9. 7 12 ஆற்றலரி 1. மிலார் 2. உறை இலையடிச்சிதல் விரிப்புத் தோற்றத் 8. மகரந்தத்தாள் B. 3. மஞ்சரி 4. சூற்பையின் நீள்வெட்டுத் தோற்றம் சுரப்பிகள் 10' பூ 11. பூவிதழ் 18. விதை 5. சூல் 8. சூவகத்தண்டு 7. பூவின்