உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/637

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆற்றலும் வேலையும் 613

காணப்படும். பூவடிச் சிதலும் (bract) பூக்காமபுச் சிதலும் (bracteole) சவ்வு போன்றவை (membra- nous). பூ இதழ்கள் 5. மகரந்தத் தாள்கள் 5. சூல்பை மூன்று சூலக இலைகளைக் (carpels) கொண்டது. மேல்மட்டத்திலமைந்தது; ஓர் அறை கொண்டது, நேரான (orthotropous) ஒரு சூல்- கொண்டது. சூல் அடித்தளச் சூல் அமைவுடன் (basal placentation) இருக்கும். இதன் சூலகத்தண்டு 3. தனி சிறிய கொட்டை லகையைச் சார்ந்தது.விதை கருமையாகப் பளபளப்புடன் நிலைத்த பூவிதழ்வட்டத்தினால் சூழப்பட்டது. பொருளாதாரச் சிறப்பு. இச்செடியின் இளந்தண்டு களும், வேர்களும் மற்ற காய்கறிகளுடன் சமைத்து உண்ணப்படுகின்றன. செடியின் சாறு வேறுசில பொருள்களுடன் கலந்து சளிக் காய்ச்சலைக் (paeum onis) குணப்படுத்துவதற்குப் பயன்படுகின்றது. இலை களின் சாறு காய்ச்சலைத் தணிப்பதற்கு மருந்தாகக் கொடுக்கப்படுகின்றது. வேர்கள் மூல வியாதி களுக்கும் (piles), மஞ்சள் காமாலை (jaundice), பலவீனம் ஆகியவற்றிற்கும் மருந்தாகக் கொடுக்கப் படுகின்றன. இது நுண்ணுயிர்க்கொல்லியாகப் பயன் படுகின்றது. நூலோதி தி.பாலகுமார் 1. Fischer. C.E.C., Gamble's Fl. Pres. Madras, Adlard & Son, Ltd., London, 1925. 2. Kent, J. J., Repertory of the Homoeopathic Materia Medica, Ehrhort & Karl., Chicago. 1935. 3. The Wealth of India, CSIR Publication, New Delhi, 1984. ஆற்றலும் வேலையும் எவ்வேலைக்கும் ஆற்றல் தேவை. ஆற்றல பல வகை களில் கிடைகிறது. நாம் உண்ணும் உணவு வேலை செய்ய நமக்கு ஆற்றல் அளிக்கிறது. உணவு செரிக் கப்படுவதால் கிடைக்கும் ஆற்றல் வேதியியல் ஆற்ற லாகும். விறகு, நிலக்கரி, எண்ணெய், இயற்கை வளி மம் முதலியன எரியும்போது அவற்றில் அடங்கிய வேதியியல் ஆற்றல் வெப்ப ஆற்றலாகக் (heat energy) கிடைக்கிறது. வெப்ப ஆற்றலைக் கொண்டு நீராவி யைப் பெறலாம். நீராவியைக் கொண்டு பல வகை யான எந்திரங்களை இயக்கலாம். புகைவண்டியைச் செலுத்துவதும், மின்நிலையங்களில் உள்ள சுழலி களை இயக்குவதும் இந்த நீராவியே, மின் நிலையங் களில் நீராவியைக் கொண்டு மின் ஆற்றல் (electric energy) பெறப்படுகின்றது. நீர்வீழ்ச்சிகளின் மேல்மட்டத்தில் உள்ள நீரை அணைக்கட்டு ஆற்றலும் வேலையும் 613 களில் தேக்கி மின் ஆற்றலைப் பெறுகிறோம். இங்கு நீரின் நிலையாற்றல் மின்னாற்றலாக மாற்றப்படு கின்றது. மின்னாற்றலைக் கொண்டு மின்சாரத்தால் இயங்கும் பொறிகளை இயக்கிட் பல வேலைகளைச் செய்ய முடியும். வீடுகளிலும், தொழிற் சாலைகளி லும் மின்சாரம் ஆற்றிடும் வேலைகள் கணக்கில் டங்கா. ஒரு பொருள் தன் இயக்கத்தால் பெறும் ஆற்றலை இயக்க ஆற்றல் (kinetic energy) என்பர். ஆற்றலை ஒலியாகவும் (sound) ஒளியாகவும் (light) பெறலாம். பொருள்களில் அவற்றின் பொருண்மைக்கு (mass) ஈடான ஆற்றல் உறைந்துள்ளது என்பது நிறுவப்பட்டுள்ளது. அணுக்கருப் பிளப்பு (nuclear fission) ஏற்படும்போது ஆற்றல் வெளிப்படுவதால் அதனை அணுக்கரு ஆற்றல் (nuclear energy) என் பர். அணுக்கரு உலைகளில் (nulear recctor) கிடைக் கும் அணுக்கரு ஆற்றலைக் கொண்டு மின்னாற்றல் பெறப்படுகிறது. ஒரு விசையின் (force) தாக்கத்தால் ஒரு பொரு ளுக்கு இடப்பயிற்சி (displacement) ஏற்படின், விசை யின் அளவு மற்றும் விசையின் திசையில் அப்பொரு ளின் இடப்பெயர்ச்சி ஆகியவற்றின் பெருக்குத் தொகை அவ்விசையால் செய்யப்பட்ட வேலை எனப் படும். வேலையின் அலகு (unit) ஜூல் (joule) ஆகும். ஒரு நியூட்டன் (newton) அளவு விசை தன்னுடைய திசையில் ஒரு பொருளை ஒரு மீட்டர் தொலைவு நகர்த்துவதால் நிகழும் வேலையே ஒரு ஜூல் ஆகும். எர்க் (erg), பவுண்டல், (poundal), பவுண்டு-எடை (pound - weight) முதலியன வேலையின் வேறு சில அலகுகளாகும். எவ்வித வேலைக்கும் ஆற்றல் தேவை யானதால், ஆற்றலை அதனால் அடையும் வேலை யைக் கொண்டு அளவிடலாம். செய்ய இயலும் வேலையின் மொத்த மதிப்பு ஆற்றலாகக் கொள்ளப் படுகின்றது. பொருளின் இயக்க ஆற்றல் அதன் நிறையையும் அதன் வேகத்தையும் பொறுத்தது. m கிலோகிராம் பொருண்மையுள்ள பொருள் நொடிக்கு V மீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்தால் அதன் இயக்க ஆற்றல் mv ஜூல் ஆகும். இது போல m கிலோ கிராம் பொருண்மை யுள்ள பொருள் மீட்டர் உயரத்திலிருப்பின் அதன் நிலை ஆற்றல் mgh ஜூல் அதிகரிக்கின்றது. இங்கு g புவி ஈர்ப்பு முடுக்கமாகும் acceleration due to gravity). இயக்க ஆற்றலையும் நிலை ஆற்றலையும் எந்திர ஆற்றல் (mechanical energy) என்றும் கூறுவர். 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரை வெப் பம் ஒரு பாய்மப் பொருளாகக்(fluid) கருதப்பட்டது. ரம்ஃபோர்டு (rumford), ஜுல் முதலியவர்கள் தங்க ளின் ஆய்வுகளால் வெப்பம் ஒரு வகை ஆற்றல் என் பதையும், வெப்பத்தை எந்திர ஆற்றலாகவோ இயந்திர ஆற்றலை வெப்பமாகவோ மாற்ற முடியும்.