உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 ஆய்க்ரைட்டு

40 ஆய்க்ரைட்டு கடிவாயில் பூச,விடம் இறங்கும் என்றும் மேலே பூசத் தொண்டை வலி நீங்கும் என்றும் கூறப்பட் டுள்ளது. இரத்தம். ஆமையின் இரத்தத்தை அருந்துவதால் நுரையீரல் தொடர்பான நோய்கள் நீங்கும். ஊன். இதனைச் சமைத்துண்ண அரோசகம், உள் மூலம், உட்சூடு, இரத்தாதி சாரம், சீதக்கிராணி, மலபேதி நீங்கும். மேலும் பசி, வீரியம், அழகு இவற் றைத் தரும். கரியுடன் சீந்திலுப்புக் கூட்டிச் சமைத்து உண்ண உடலில் உண்டாகின்ற காயங் கள் விரைவில் குணமாகும். ஆமை லேகியம். வெந்நீரில் அலித்து எடுத்த உரித்த பூண்டு, ஆமை இறைச்சி, வெங்காயம், கிராம்பு, பட்டை சோம்பு, மல்லி, சாதிக்காய், சாதிப்பத்திரி, கறி மஞ்சள் ஆகியவற்றுடன் நெய் போதிய அளவு விட்டு, முறைப்படி லேகியம் கிளறி வைத்துக் கொண்டு முழுப் பாக்களவு காலை, மாலை நாகபஸ்பத்துடன் கொள்ள மூலம் சரியாகும். தாதுவும் விருத்தியாகும். ஆய்க்ரைட்டு சே.பிரேமா ஆய்க்ரைட்டு (euchroite) என்பது ஒரு நீர்மச் செம்பு ஆர்செனேட்டு ஆக்சைடு, இது செஞ்சாய்சதுரப் படிகத் தொகுதியில் படிகமாகிறது. இதன் வேதி யியல் உட்கூறு Cu,As,O, Cu(OH), 6H,O. அல்லது 3Cu0 AsO, Cu(OH), 6H,O. இதில் ஆர்செனிக் பென் டாக்சைடு 34.2 விழுக்காடும் குப்பிரிக் ஆக்சைடு 47.1 விழுக்காடும் நீர் 18.7 விழுக்காடும் உள்ளன. இவை பட்டக வகைப் (110) படிகமாகவும் செஞ்சாய் சதுர இரட்டை ஸ்பினாய்டுகளாகவும் orthorhombic di-sphenoidal) கிடைக்கின்றன. இது இருவிதப் பட்டகப் பிளவுகள் கொண்டது.(110), (011) பக்கப் பிளவுகள், சிறிய சங்கு முறிவிலிருந்து சீரான முறிவு வரை கொண்டது, நொறுங்கும் தன்மையுடையது. குறுஇணை வடிவப் பக்கத்திற்கு (010) ணையாக நெடுக்கு வரிகளையுடையது. பளிங்கு மிளிர்வை உடையது. மரகதப் பச்சை நிற முடையது. இதன் கடினத்தன்மை 3.5 முதல் 4 வரையிலும் அடர்த்திஎண் 3.39 ஆகவும் உள்ளது. எளிதில் உருகக் கூடியது. இதன் உருகுநிலை 2 முதல் 2.5 வரை மாறும்.அடர் நைட்ரிக் அமிலத்தில் கரையும். இதன் கனிமச் சீவல் தெளிவான நீலப் பச்சை நிறமுடையது. ஒளியியல் அச்சுத்தளம் செல் விணை வடிவப் பக்கத்திற்கு (100) இணையாக உளது. அல்லது இதன் ஒளியியல் அச்சுத்தளம் அடி யிணை வடிவப் பக்கமாகும் (001). இது ஒளியியலாக நேர்மறைக் கனிமம். இதன் ஒளியியல் ஒளியியல் அச்சுக் வரை கோணம் (optical axial angle) 20. இது ஒளி ஊடு ருவும் தன்மை முதல் ஒளிக்கசிவுத்தன்மை மாறுபடுகிறது. இதன் ஒளிவிலகல் எண் (refractive index) விரைஒளித் திசையில் (y) 1.733 ஆகவும் மெது ஒளித்திசையில் (a) 1.695 ஆகவும், இடை யொளித்திசையில் (b) 1.698 ஆகவும் உள்ளது. இது ஒளிவிரவலில் மிதமானது. நீல ஒளி அச்சை விடச் (v) சிவப்பொளி அச்சின் நீளம் (y) அதிகம். இயற்கையில் குவார்ட்சோஸ் அபிரகக் களிமட் பாறைகளில் (quartzose mica slate) டயாப்ட்டசை (diaptase) ஒத்த படிகங்களாகக் கிடைக்கிறது. ஹங் கேரியில் (Hungary) உள்ள லிபிதென் (Libethen) என்ற இடத்தில் களிமட்(slate) பாறைகளில் கிடைக்கிறது. மேலும் செலோவிக்கியாவுக்கு அருகில் நியூசோல் (Neusohi) என்ற இடத்திலும் கிடைக்கிறது. இது அதிக அளவில் கிடைத்தால் செம்பின் முக்கியத் தாதுவாகப் பயன்படும். நூலோதி சு. ச. 1. Dana, E.S., Ford, W.E., Dana's Text Book of Mineralogy, Wiley Eastern Limited, New Delhi, 1985. 2. Winchell, A.N., Winchell, H., Elements of Optical Mineralogy, Wiley Eastern Private Limited, New Delhi. 1968. ஆய்மா இடங் இருவிதையிலை அல்லி இணையாக் (polypetaoles) குடும்பமாகிய மிர்த்தேசியிலிருந்து (myrtaceae) நீக்கப்பட்டு, தற்பொழுது லெசித்திடேசி (lecythi- daceae) அல்லது பாரிங்டோனியசியில் (barringtoni- aceae)வகைப்படுத்தப்பட்டுள்ள ஆய்மாவுக்குத் தாவர வியலில் கேரியா ஆர்போரியா (Careya arborea Roxb) என்று பெயர். உத்தரப் பிரதேசம், மகாராட்டிரம், வங்காளம், அசாம், மத்திய மாநிலங்கள், தமிழ் நாடு, பர்மாவின் மலைக்காடுகள் ஆகிய களில் 1300 மீ. உயரம் வரை ஆய்மா வளருகிறது. மரத்தின் அளவு இடத்திற்குத் தக்கவாறு வேறுபடு கிறது; எடுத்துக்காட்டாக, பர்மா, வங்காளம், அசாம், மேற்குக் கடற்கரைப் பகுதிகளின் ஈரக் காட்டுப் பகுதிகளில் 2 முதல் 2.5 மீ. பருமனிலும், 5 முதல் 6.5 மீ. உயரத்திலும் காணப்படுகிறது. உத்தரப் பிரதேசத்தில் 1.2 முதல் 2 மீ. பருமனிலும் 4 முதல் 5.5 மீ. உயரத்திலும் உள்ளது. மத்திய பிரதேசம், பஞ்சாப், தக்காணம், கருநாடக மாநிலங் களில் 0.65 முதல் 1.2 மீ. பருமனில் துவளர் கின்றது.