உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆய்மா 41

6 ஆய்மா 41 3 7 7. 1. மிலார் 2. பீஞ்சு 3. நிலைத்த புல்லி வட்டம் 4. விதை 8. முழுக்கனி 9. நிலைத்த சூலசுத்தண்டு சிறப்புப் பண்புகள். இது 10 முதல் 20மீ. உயரம் வரை வளரக்கூடிய பெரிய இலையுதிர் மரம் ஆகும். இலை கள் தனித்தவை, தலைகீழ் முட்டைவடிவமானவை (obovate)அல்லது நீள்சதுர வடிவமானவை (oblong); கிளைகளின் நுனியில் நெருக்கமாக அமைந்திருப் பவை. இலையினடிப்பாகம் குறுகிக்கொண்டே வந்து சிறகுடன் கூடிய (winged) இலைக் காம்பாகின்றது. விளிம்பு அரைவட்ட வெட்டுடையது (crenate). பக்க நரம்புகள் 10 முதல் 12 சோடியாகவும், எடுப்பாகவும் உள்ளவை; இலை நீளம் 20 முதல் 30 செ.மீ வரையும் அகலம் 10 முதல் 17.5 செ.மீ வரையும் மாறுபடும்; இலையடிச்சிதல்கள் (stipules) மிகச்சிறியவை; உதிரக் கூடியவை. மலர்கள் 5 முதல் 10 செ.மீ. அகலமுடை யவை; மிலார்களின் நுனியில் குறைவான எண்ணிக் கையில் ஸ்பைக் (spike) மஞ்சரியில் அமைந்திருக்கும். இவை ஒவ்வாத மணமுடையவை; வெண்மை அல்லது மஞ்சள் கலந்த வெண்ணிற முடையவை. புல்வி வட்டக் குழாய் தடிப்பாகவும், நான்கு பிளவுகளுட னும் இருக்கும். அல்லி இதழ்கள் 4, விரிந்து, 2.5 முதல் 5.0செ.மீ. அகலமாயிருக்கும். மகரந்தத் தாள்கள் எண்ணற்றவை; பலவரிசைகளில் அமைந்தவை. சூற்பை கீழ்மட்டத்திலமைந்தவை(inferior); 4 முதல் 5 அறைகளைக் கொண்டவை. சூல்கள் ஒவ்வோர் அறை ஆய்மா இலைவடு 5. மகரந்தத்தாள் 6. சுனியின் குறுக்குவெட்டுத் தோற்றம் யிலும் இருவரிசைகளில் அச்சுஓட்டிய சூலமைவில் (axile placentation) அமைந்திருக்கும். கனி, உருண்டை. வடிவான சதைப்பற்றுள்ள பெர்ரி (berry) வகையைச் சார்ந்தது; 5 முதல் 7.5 செ. மீ. அகலமுடையது: இதன் விதைகள் எண்ணற்றவை. மார்ச், ஏப்பிரல் மாதங்களில் இளந்தளிர்களுடன் மலர்களுண்டாகின்றன. கன்னியாகுமரி டக் மாவட் காடுகளில் இம்மரம் அதிகமாகக் காணப்படு கின்றது. மரத்தின் பட்டை கருமையானது; வெடிப் புக்களுடன் முதலை முதுகு போல் காணப்படும். பலநெளிவுகளையும், வளைவுகளையும் கொண்ட கிளைகளுடன் காணப்படுவதிலிருந்து இம்மரத்தை நெடுந்தொலைவிலிருந்தும் அறிந்து கொள்ளலாம். பொருளாதாரச்சிறப்பு. மரப்பட்டையிலிருந்து ஒரு வகை நார் எடுக்கப்படுகின்றது. ஆய்மாவின் மரப்பட்டை மருத்துவச் சிறப்பு வாய்ந்தது. இரு மல், குளிர் காய்ச்சல், முதலியவற்றிற்கு மருந்தாக வும், அம்மை கண்ட நேரத்தில் உடம்பின் மேல் தடவினால் இதமளிக்கும் களிம்பாகவும் பயன்படு கிறது. புல்லி வட்டத்திலிருக்கும் கோழை (mucilage) போன்ற வழுவழுப்பான பொருள் களிம்பாகப் பயன்