உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/643

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆற்றுப்பாலை 619

நீர் ஓடும் திசை- நீரோட்டமானி வைக்கும் டங்கள் ஆற்றுப்பாலை 619 படம் 2. ஆற்றின் குறுக்குவெட்டு முகம் அளந்தறிகிறோமோ, அந்த இடத்தில நீர் ஓட்டத் தின் குறுக்குப் பரப்பைக் கணக்கிட்டு, அந்தக் குறுக் குப் பரப்பை நீர் ஓட்ட வேகத்தால் பெருக்கினால், ஓடும் நீரின் பருமனளவு கிடைக்கும் (படம் 2). சி.சொக்கலிங்கம் ஆற்றுப் பள்ளத்தாக்குத் திட்டங்கள் காண்க, பலநோக்கத் திட்டங்கள். ஆற்றுப்பாலை இது இருவித்திலைப்பிரிவிலுள்ள (dicotyledoneae) அல்லி இதழ்களற்ற (apetalous) சாலிக்கேசி(salicaceae) குடும்பத்தைச் சார்ந்தது. இதற்கு சாலிக்ஸ் டெட்ராஸ் பெர்மா (salix tetrasperma Roxb), என்று தாவரவிய லில் பெயர் உண்டு. இதற்குத் தமிழில் வாஞ்சி(vanji), நீர்வானி (nirvani), நீர்வாஞ்சி (nirvanji) என்ற மாற் றுப்பெயர்களும் உண்டு. வணிகத் துறையில் இந்திய வில்லோ.(willow), என்று இது அழைக்கப்படுகின்றது. இது இந்தியாவின் வெப்பப் (tropics) பகுதிகளிலும், இமய, உதகமண்டல மலைப்பகுதிகளில் 3500 மீ. உயரம் வரையிலும், தெற்குப் பகுதிகளிலும் சாதா ரணமாகக் காணப்படுகின்றது. இது இலங்கையில் காணப்படுவதில்லை. சுமத்ரா (Sumatra), ஜாவா (Java) ஆகிய தீவுகளிலும் பரவியிருக்கின்றது. ஆற் றங்கரை, ஓடைகளின் ஓரங்கள், சதுப்பு நிலங்கள் ஆகிய இடங்களில் பெரும்பாலும் காணப்படுகின் றது. சிறப்புப் பண்புகள். இது 7 முதல் 15 மீ. உயரம் வரை வளரக்கூடிய சிறிய அல்லது நடுத்தரமான மர மாகும்; இதன் குறுக்களவு 3 மீ வரை இருக்கும்; தலைப்பு விரிந்திருக்கும்; கிளைகள் ஏறக்குறைய செங் குத்தாக இருக்கும்; இலைகள் உதிர்ந்த பிறகு பூக்கும். இதன் பட்டை பழுப்புக் கலந்த சாம்பல் நிறமானது அல்லது உயரப்போக்கில் வெடிப்புகளைப் பெற்றுக் கருமையாக இருக்கும். இதன் மிலார்கள் பட்டுப் போன்ற கேசங்களைப் பெற்றிருக்கும். இலைகள் தனித்தவை, அகன்ற முட்டை அல்லது ஈட்டிவடி வத்திலிருப்பவை; 7.5 முதல் 20 செ.மீ. நீளமுள் ளவை; மாற்றிலை அமைவு கொண்டவை; பெரும் பாலும் பட்டுப் போன்ற கேசங்கள் உடையவை; இலையடிச்சிதல்கள் முட்டை அல்லது வட்டவடிவத் திலிருக்கும்; இலையின் கீழ்ப்பரப்பு வெண்ணிற மானது. விளிம்பு சிறுபற்களைப் போன்றிருக்கும், பூக்கள் ஒருபாலானவையாதலால் ஆண் பூக்களும், பெண் பூக்களும் வெவ்வேறு பூனைவால் மஞ்சரியில் (catkin) அமைந்திருக்கும்; பூவடிச்சிதல்கள் (bracts) தலைகீழ் முட்டைவடிவமாக இருக்கும். பூக்களுக்குப் பூவிதழ் வட்டம் கிடையாது. ஆண் கேட் நறு மணமுள்ளது; மஞ்சள் நிறமானது; 5 முதல் 10 செ.மீ. நீளமுள்ளது. மகரந்தத்தாள்கள் 5 முதல் 10 வரை