ஆற்றுப்பூவரசு 621
களுடன் காணப்படும். இதன் காரணமாக இந்தச் சிற்றினத்தில் பலவகைகள் தோற்றுவிக்கப்பட்ட போதிலும் அவையெல்லாம் ஒத்துக்கொள்ளக் கூடிய வையாக இல்லை. இந்த மரத்தைப் போத்துக்கள் நட்டு வளர்க்கின்றார்கள். இது வெள்ளத்தினாலும், நீரினா லும் பாதிக்கப்படாதது, மிகவேகமாக வளரக்கூடி யது. விதைகள் கேசங்களைப் பெற்றிருப்பதனாலும், இலேசாக இருப்பதனாலும், காற்றில் வெகு தூரத் திற்குப் பரப்பப்படுகின்றன. பொருளாதாரச் சிறப்பு. இதன் கட்டைப்பாகம் சிவப்பாகவும், மிருதுவாகவும், துளைகளுடனும் (porous) இருக்கும். இது வெடி மருந்துக்கான கரி தயாரிப்பதற்குப் பயன்படுகின்றது. தூண்கள், பல கைகள், கட்டட வேலைகள், கலப்பை, வளைவு நாற் காலிகள், உழவுத்தொழிலுக்கான சாதனங்கள், பெட் டிகள், தீப்பெட்டிகள், பென்சில்கள், கிரிக்கெட் ஆட் டச் சாமான்கள், பொட்டலப் பெட்டிகள் ஆகியவை செய்வதற்கு இதன் கட்டை பயன்படுத்தப்படுகின றது. இதன் பட்டை தோல் பதனிடுவதற்குப் பயன் படுகின்றது. மூட்டுவாதம் (rheumatism), வலிப்பு நோய் (epilepsy), வீக்கங்கள், மூலவியாதி (piles) பால்வினை நோய்கள் (venereal diseases), கல்லீரலி லுண்டாகும் கற்கள் (stones in gall bladder) ஆகிய வற்றைப் போக்குவதற்கு இதன் இலைப் பொடி சர்க் கரையுடன் சேர்த்துக் கொடுக்கப்படுகின்றது. மிலார் கள் மாட்டுத் தீவனமாகப் பயன்படுகின்றன. நூலோதி எ.கோ. 1. Fischer, C. E. C., Gamble's Fl. Pres. Madras, Adlard & Son, Ltd., London, 1928. 2. 3. Hooker, J.D., Hook. f. Fl. Br. Ind., 1888. The Wealth of India, CSIR Publication, New Delhi, 1984. ஆற்றுப்பூவரசு இது இருவித்திலைப் பிரிவிலுள்ள ஒருபூவிதழ் வட்ட முடைய யூஃபோர்பியேசி (euphorbiaceae) குடும் பத்தைச் சார்ந்தது. தாவரவியலில் இதற்கு டூரிவியா நூடிஃபுளோரா (trewia nudiflora Linn.) என்று பெயர் இது தமிழ்மொழியில் அன்னத்துவரை (annathu- varei), ஆற்றரசு (attarasu), காஞ்சி (kanji), ரேப்பு நுல் (raypbunul) என்று வெவ்வேறு பெயர்களில் அழைக்கப் படுகின்றது. இது ஆங்கிலத்தில் போலி வெண்தேக்குமரம் (false white teak) என்றும், வணி கத் துறையில் குட்டல் (gutel) என்றும் கூறப்படு கின்றது. இது இந்தியாவின் வெப்பமான பகுதிகளி லும், இலங்கையிலும் வளர்கின்றது. சுமத்ரா, ஜாவா தீவுகளிலும் பரவியிருக்கின்றது. இம்மரம் ஈரப்பத ஆற்றுப்பூவரசு 621 முள்ள காடுகளிலும், குறிப்பாக ஓடை ஓரங்களிலும் சதுப்பு நிலங்களிலும் காணப்படுகின்றது. தமிழ் நாட்டிலுள்ள மேற்குத் தொடர்ச்சிமலைக் காடுகளில் நேரான அடிமரத்தைப் பெற்று மிக உயரமாக வளர் கின்றது. வட ஆந்திரப் பிரதேச மலைகளில் 1000மீ உயரப் பகுதிகளில் வளர்கிறது. ஆ சிறப்புப் பண்புகள். இது ஏறக்குறைய 25மீ. உயரத் தையும், 3 மீ. குறுக்களவையும் பெற்று வளரக்கூடிய இலையுதிர் மரமாகும். மிலார்கள், இலைகள் மஞ்சரி ஆகியவை பஞ்சு போன்ற கேசங்களைப் பொது வாகப் பெற்றிருக்கும். இதன் பட்டை சாம்பல் அல்லது மஞ்சள் கலந்த பழுப்பு நிறத்துடன் காணப் படும்; இது மெல்லிய பட்டைத் துண்டுகளாக உரியக் கூடியது. இலைகள் அகன்ற முட்டை இதய வடி வானவை 15-23× 11-18 செ.மீ.; அளவுடையவை. இலைக்காம்பு (petiole) 2.5 முதல் 7.5 செ.மீ. நீள முடையது. பூக்கள் ஒருபாலானவை ஆண் பூக்கள் கதிர்வகை (raceme) மஞ்சரியிலமைந்திருக்கும்; மஞ்சள் நிறமானவை; பெண் பூக்கள் இலைக்கோணங்களில் காணப்படும். பூவிதழ்கள் 3-4, குவிந்து அல்லது பெரும்பாலும் பின்னோக்கிச் சுருண்டிருக்கும். மகரந் தத்தாள்கள் எண்ணற்றவை; இணையாதவை; மகரந்தப் பை நீள்சதுரமாக இணைப் போக்கிலமைந் திருக்கும். ஆண்பூக்களில் மலட்டுச் சூலகம் (pistillode) கிடையாது. பெண் பூக்களில் பூவிதழ்கள் அகல மானவை; ஒழுங்கற்ற திருகுமுறையில் அமைந்தவை, உதிரக்கூடியவை. சூற்பை அடர்த்தியான கேசங்க ளுடையது; 2 முதல் 4 அறைகளைக் கொண்டது; சூலகத்தண்டு நீண்டு, கேசங்களைப் பெற்றிருக்கும்; சூல்கள் ஒவ்வோர் அறையிலும் ஒன்றுதானிருக்கும். கனி ஏறக்குறைய கட்டைபோன்று கெட்டியானது. வெளிர்பச்சை நிறமானது; ஓட்டுச் சதைக் கனி அல் வது கற்கனி வகையைச் சார்ந்தது, ஏறக்குறைய நான்கு பக்கங்களுடைது. 2.5 முதல் 3.8 செ.மீ. வரை குறுக்களவுடையது. விதை கருமை நிறமானது, மஞ் சள் நிறச் சதைப்பற்றுள்ள ஏரில் (aril) என்ற உறை யினால் மூடப்பட்டிருக்கும். ஒவ்வொரு கனியிலும் 2 முதல் 5 விதைகளுண்டு; பெரும்பாலும் 4 விதை களே காணப்படும். குறிப்பு வெட்டுண்ட அடிமரத்திலிருந்து புதுக் கிளைகள் விரைவாக வளர்கின்றன. மேலும் வேர் களிலிருந்து வேர்க்கன்றுகள் (root suckers) தோன்று கின்றன. பெண் மரங்கள் குட்டையாகவும், எல்லாப் பக்கங்களிலும் பரவுகின்ற கிளைகளைப் பெற்றும் இருப்பதால் இவை ஆண் மரங்கள் போன்று அழகா கக் காணப்படுவதில்லை. பயிரிடும் முறை. வெவ்வேறு பருவக் காலங்களில், வளர் இடங்களைப் பொறுத்து அந்தந்த இடங்களி லேயே கனிகள் விழுந்து முளைக்கின்றன அல்லது அவை நீர் மூலம் வேற்றிடங்களுக்கு எடுத்துச்செல்லப்