ஆற்றுப்பொறியியல் 627
மாக நேரும். ஓர் ஆற்றில் கடலின் ஏற்றம் நிகழும் போது அதில் உள்ள வளைவுகளும் மணல் திட்டுக் களும் அதைத் தடை செய்தால், நீரோட்டம் செங்குத் தாக மேலெழுந்து, நீர்மட்டத்தில் திடீரென மாறு தலைத் தோற்றுவிக்கும். போக்குவரத்திற்குப் பெருந் தடையான இவ்விளைவு ஒரு பெரிய அலை போல் பாய்வதால் அலையேற்றம் எனப்படும். ஹூக்ளி நதி யில் இத்தகைய அலையேற்றங்கள் மிக இயல்பாகத் தோன்றும். ஆற்றில் உள்ள தடைகளை நீக்கியும், அதன் போக்கைச் சீராக்கியும் இவற்றைக் குறைக்க லாம். ஆறுகளின் போக்கை, ஓதி மாற்றவோ, ஆழமாக்கவோ, மற்ற ஆறுகளில் கையாளப்படும் முறைகளையே பயன்படுத்தலாம். தூர் எடுக்கும் முறையையும் கையாளலாம். ஓதங்கள் நதியின் பாதையிலுள்ள வண்டலை அடித்துச்சென்று பாதையைச் சீராக்குவதால் அவற்றின் போக்கிற்குத் தடைவாராத வகையில் இதற்கான அமைப்புக்களைக் கட்ட வேண்டும். இல்லையேல் ஆற்றில் வண்டல் படிதல்போன்ற தொல்லைகள் நேரும். கலிங்குகளும் பாலங்களும் இவ்வகையில் ஒதத்தைத் தடுத்துத் தொல்லை விளைவிக்கக்கூடும். ஆற்றின் கூடல்முகம் கழிமுகமாயின் நிலைமை வேறாக இருக்கும். இதில் ஆற்றின் சரிவு குறைவாக இருக்கும். இதனால் கடலின் ஏற்றம் இன்னும் அதிக மான தூரம் செல்லும். ஆனால் இத்தகைய வடி வு ள்ள கழிமுகங்களில் ஏற்றமும் வற்றமும் வெவ்வே றான பாதைகளில் நிகழலாம். இவற்றைத் தடுத்துக் கழிமுகத்தின் புனல் போன்ற வடிவத்தை மட்டும் மாற்றாது, சுவர்கள் கட்டி, அதன் அகலத்தைக் குறைத்து, ஏற்றத்தின் ஆழத்தை அதிகமாக்கி, அது வண்டல் படிவுகளை அடித்துச் செல்லுமாறு செய்து நீரோட்டத்தைச் சீர்படுத்தலாம். மிகவும் அகல்மான கழிமுகங்களை இத்தகைய முறைகளால் குறுகலாக்கு வது இன்னும் அவசியமாகும். ஆற்றில் வண்டற் படிவு அதிகமாக இருந்தால் அதை அடிக்கடித் தூர் எடுக்கவேண்டும். தங்கள் துறைமுகத்தினருகே ஐரா வதி நதியின் கழிமுகத்தில் இத்தகைய சுவர்கள் 10 இலட்சம் பவுன் செலவில் கட்டப்பட்டுள்ளன. இத னால் ஆற்றின் போக்குவரத்து வசதி பெருகி,ரங், கூன் துறைமுகத்தின் பயன் அதிகமாகி உள்ளது. . வெள்ளப் பெருக்கினைக் கட்டுப்படுத்த சுரைகளை கரைகட்குக் வலியவாகக் கட்டல் முதற்கொண்டு கற்பாவுதல், சிமிட்டிப் பலகைகளால் தளம் அமைத் தல், கரைகள், தளம் இவற்றின் அரிப்பதைத் தடுத்தல், ஒரு கரையையே ஒட்டு ஓடி அரிப்பதைத் தடுத்தல், வளைந்து வளைந்து ஓடி அனைத்து இடங்களையும் பற்றிப் பரவலைத் தடுத்தல் பாலங்களை ஒட்டிய பகுதிகளைப் பாதுகாத்தல், ஆற்றுப்படுகைகளின் அரிப்பைத் தடுத்தல், நிலத்தைக் கரைத்து லைக் கடத்துவதைத் தடுத்தல், படகு, அ.க. 3-40அ மண கப்பல் ஆற்றுப்பொறியியல் 627. போக்குவரத்திற்காக நீர் ஆழத்தைக் கட்டுப்படுத்து தல், ஆற்றின் கூடல் முகத்தைத் திறந்தேவைத்துத் தண்ணீரைத் தொடர்ந்து கடலில் சென்று விழச் செய்தல் (சென்னை மாநகரின் கூவம் ஆற்றில் இந்தப் பிரச்சினைதான் நம் தீராத பிரச்சினையாக இருந்து வருகிறது) ஆகிய பல பணிகள் ஆற்றுப் பொறியியல் கருத்துப்படியே வடிவமைக்கப்பட்டுச் செயலாக்கப்படுகின்றன. இப்பணிகட்கு ஆற்றுப் படுகைஇயல் (potomology) எனப்படும். ஆற்றின் அடியில் உள்ள மணல், மற்றும் கூழாங்கற்கள் அடங் கிய தளத்தின் அசையும் தன்மையையும் அரிபடும் தன்மையையும் விளக்கும் இயல் மிகவும் துணை செய்கின்றது. ஆற்றுப் பாதுகாப்புக் கட்டுமானங்கள். பொதுவாக வழிகாட்டு கரைகள் (guide bank), அடைகரை (em- barkment); சிற்றணை (dikes, eevees) ஆகிய பல தரப்பட்ட கரைகள் மண் அரிப்பு, கரை அரிப்பு, பாலங்களின் ஓரங்கள் ஆகிய இடங்களில் அமைக்கப் படுகின்றன. கொம்பணை (groin) அல்லது கிளை மேடுகள் (spurs) எனப்படும் கொம்பணைகள் ஆற்றின் உள்ளே நீர்ப்போக்கினூடே துருத்திக் கொண்டும் போக்கை நோக்கி எதிர்த்தும் கட்டப் படுகின்றன. பெரும்பாலும் இரண்டிரண்டாகக் கட்டப்படுகின்றன. அடிக்கடி வெள்ளத்தினால் பாதிக்கப்படும் காவிரி, வைகை மற்றும் வெள்ளாறு போன்ற ஆறுகளின் குறுக்கே இத்தகைய கொம் பணைகள் கட்டப்பட்டு ஆற்று வெள்ளம் கட்டுப் படுத்தப்பட்டுள்ளது. இத்தகைய கொம்பணைகள் பெரும்பாலும் இணை இணையாகத்தான் கட்டப்பட வேண்டும். மேலும் இக்கொம்பணைகள் ஈர்ப்பு வகை, திருப்பு வகை என இரு வகையாகப் பிரிக்கப் படும். கரைகளை நோக்கி வரும் தண்ணீரை ஆற் றின் போக்கிலேயே செல்லும்படிச் செய்து, ஆற்றின் குறுக்கே, ஆனால் தேவைக்கேற்பச் சிறிது சாய்வாக வடிவமைத்துக் கட்டப்படுவது திருப்பும் (deflecting) கொம்பணை ஆகும். வேகமாகத் தூர விலகிப் போகும் தண்ணீர்ப் போக்கை அருகே கொணர்ந்து திசை திருப்பும் அமைப்பு அழைக்கும் கொம்பணை ஆகும் இத்தகைய கொம்பணைகள் தேவைக்கேற்ற படித் தண்ணீர் மட்டத்திற்குக் கீழேயும், அல்லது மேலேயும் அமைக்கப்படும். தண்ணீரை இடையே ஊடுருவவிடுவதால் இசையும் கொம்பணை எனப் படும். T வடிவக் கொம்பணைகளும் உண்டு. வெள்ளப் பெருக்கினால் கொண்டுவரப்படும் மண் ணைத் தடுத்து விழச்செய்து கரையைப் பெரிதாக்கி, நீரின் போக்கை மாற்றுவது, வண்டற்பொறிக் கொம் பணை (sitting groin) எனப்படும். இதன் வடிவமைப் புகள் ஆற்றின் தரைமட்டச் சரிவையும் தரைமட்டத்தி லுள்ள மண் அல்லது கல் அளவையும் பொறுத்தன வாகும். உயர், இடை, தாழ்நீர் மட்ட அளவுகளைப் வெள்ள அளவு, பொறுத்தும் வேகம். ஆற்றின்