630 ஆறுகள்
630 ஆறுகள் மருங்குகள் அடிப்பகுதி வெண்மையாகவும் இருக்கும்; உடல் பக்கவாட்டில் தட்டையானது. மற்ற கெளுத்தி மீன்களைப் போன்று, இதுவும் செதில்களற்ற வழ வழப்பான தோலுடையது. அகன்ற, தட்டையான, அழுத்தமான தலையுள்ளது. தலையில் நான்கு தொட்டுணரிழைகள் (barbels) உள்ளன; அவற்றில் இரண்டு மிக நீண்டவை. வாய் சற்றே சாய்வான கோணத்தில் அமைந்துள்ளது; கீழ்த்தாடை நீண்டது; தாடைகளிலுள்ள கூர்மையான பற்கள் இரு வரிசை களாக அமைந்துள்ளன. இது ஓர் ஊனுண்ணி மீன். இதன் மலப்புழைத் துடுப்பு (anal fin) மிக நீண்டது வால் துடுப்பு:(caudel fin) இரு மடல்களாகப் (lohes) பிரிந்துள்ளது; மேற்புற மடலின் நீளம் அதிகமானது; கீழ்ப்புற மடல் இதன் மருங்குக் கோட்டு அமைப்பு உணர்வுறுப்பு lateral-line system ) சற்றுக் கீழ்ப்புறமாக வளைந்துள்ளது. அகலமானது. பகல் நேரத்தில் இம்மீன் நீர் மட்டத்திற்குச் சற் றுக் கீழே இரை தேடிக் கொண்டிருக்கும். இரையைப் பிடிக்கும் பொழுது நீர்மட்டத்திற்கு மேல் துள்ளி எழுந்து மீண்டும் நீரில் விழுவதைக் காணலாம். இது பிற சிறு மீன் கூட்டங்களை வேட்டையாடும்; இதன் உறுதியான பற்கள் வேட்டைக்குத் துணைபுரிகின் றன. இம் மீனின் தாடையெலும்பை விசாகப்பட்டி னப் பகுதியில், நயமிகக பருத்தியில் சிக்கு எடுப்பதற் குப் பயன்படுத்துகின்றனர். இம்மீனை உணவாகக் கொள்வதுண்டு. ஆற்று வாளை இந்த மீன், எலும்பு மீன்கள் (osteichthyes ) வகுப்பில், ஃபைசோஸ்ட்டோமி (physostomi) வரிசை யில் சைலூரிடே (siluidae) குடும்பத்தின் கீழ் வகைப் படுத்தப்பட்டுள்ளது. நூலோதி கெள். 1. இராணி சுந்தசுவாமி, தென்னிந்திய மீன்கள் தமிழ் நாட்டுப் பாடநூல் நிறுவனம், சென்னை, 1973. 2. Chandy M., Fishes National Book Trust, New Delhi, 1981. 3. Day, F., The Fishes of India, Today and Tomor- row, Book Society, New Delhi, 1981. 4. Day, F. The Fishes of Malabar, Bishen Singh, Mahendra Pal Singh, Dehra Dun, India, 1981. ஆறுகள் நிலக்கோளப் பரப்பிலுள்ள மலைகள், மேட்டுநிலங் கள் ஆகியவற்றின் மீது விழுந்த மழைநீர் பல சிற் றோடைகளாக ஓடிப் பல ஓடைகளை உண்டாக்கு கின்றன. ஓடைகள் ஒன்று சேர்ந்து ஆறாகப் பாய்ந் தோடி வரும். பொதுவாக, மழைப் பொழிவினின் றும், நீர் ஊற்றுக்களினின்றும், கோடைக்காலங்களில் பனி உருகுவதினின்றும் ஆறுகளுக்குத் தொடர்ந்து நீர் கிடைக்கின்றது. ஆறுகளுக்குக் கிடைக்கும் நீர் பருவத்திற்குப் பருவம் அந்த ஆறு ஓடும் இடத்தில் பொழியும் மழைப் பொழிவிற்கு ஏற்ப மாறுபடும். எடுத்துக்காட்டாக, நில நடுக்கோட்டுப் பகுதியில் அமைந்த ஆப்பிரிக்காவில் ஓடும் நைசர், காங்கோ ஆறுகளில் நீர் எப்பொழுதும் நிரம்ப ஓடிக்கொண்டே இருப்பதற்குக் காரணம், இப்பகுதியில் ஆண்டு முழு துமே வெப்பச் சுழற்சி மழை (convectional rain) பொழிவதேயாகும். தென்னிந்திய ஆறுகளான காவிரி, வடபெண்ணை, தென்பெண்ணை, வைகை, தாமிரவருணி ஆகியவற்றில் மழைக் காலங்களில் மட் டுமே மிக அதிகமான நீரோட்டத்தைப் பார்க்க முடி யும். மற்ற காலங்களில் அவை சிற்றோடைகள் போல் காட்சி அளிக்கும்; அல்லது வெறும் மணல் பரப்புகளையே அவ்வாறுகளில் காணலாம். ஆறுகள் தோன்றும் இடங்கள் சிறிய பள்ளங்களாகவோ, பெரிய ஏரிகளாகவோ இருக்கும். நைல் ஆறு, மிக உயர்ந்த மலைகளால் சூழப்பட்ட விக்டோரியா என்ற ஏரியிலிருந்து புறப்படுகிறது. இந்தியாவின் வடகோடியில் காணப்படும் பிரம்மபுத்திராப்பேராறு. இமயமலையில் உள்ள மானசரோவர் என்ற சிறிய ஏரியிலிருந்தே பெருகி வருகிறது. காவிரியாறு கரு நாடக மாநிலத்திலுள்ள குடகு மலைப் பகுதியில் ஒரு சிறிய பள்ளமான தலைக்காவிரியினின்றும் தோன்றி ஓடி வருகிறது. இயல்புகள். ஆறுகள், ஓடிவரும் நிலப்பரப்பிற்கு ஏற்பவும், நிலப்பரப்பில் அமைந்த பாறைகளின் தன் மைக்கு ஏற்பவும், சுற்றுப்புறச் சூழ்நிலைகளுக்கு ஏற் பவும், தட்ப வெப்ப நிலைகளுக்கேற்பவும் இயல்பு களில் மாறக்கூடியன. ஆறுகள் பெரும்பான்மையான நீரை மழை வாயி லாகப் பெற்றபோதிலும், அங்குப் பெய்யும் மழைப் பொழிவின் அளவிற்கும், அந்த ஆற்றில் ஓடும் நீரின்