உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/653

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆற்று வாளை 629

மட்டும் கட்டுப்படுத்துகின்றன. முக்கியமாகக் கூடல் முகநிலப்பரப்புப் (delta) பகுதிகளில் இவை அவசிய மாகக் கட்டப்படுகின்றன. ஆற்றிலிருந்து தண்ணீரை நேரடியாகப் பாசனத் திற்கு எடுத்துச் செல்ல உதவும் கால்வாய்களில் ஏரா ளமான மணல் படிந்து உட்புகுந்து விடுவதால், கால் வாயின் செலுத்தத்திறன் குறைவதுடன் வயல்களி லும் மணல் படிந்து வயல்களைப் பாழாக்குவதை யும் தடுக்க, ஆற்றின் கரையிலுள்ள மதகுகளை ஒட்டி ஆற்றுப்பொறியியல் கருத்துக்களைப் பயன்படுத்தி மணல் நீக்கிகள் (ejectors), மணல் தடுப்பான்கள், மணல் உறிஞ்சிகள் (excluder), மணல் திருப்பிகள் (deflectors) ஆகியவை அமைக்க வடிவமைப்பு செய் யப்படுகின்றன. இத்தகைய அமைப்புகள் காவிரிப் பேரணைக் கால்வாய், மண்ணியார் கால்வாய், சேத் தியாதோப்பு அணை ஆகிய பகுதிகளில் உள்ளன. காவிரிப் படுகையில் உள்ள கோரையாறு, பாமி னியாறு போன்ற பல ஆறுகள் கடலில் கலக்கும் இடத்து வளைந்து வளைந்து பரவி ஏராளமான வெள்ளக் கேடுகளை ஏற்படுத்திக் கொண்டிருந்த போது நேர்வெட்டு (straight cut) என வழங்கப் படும் வெட்டும் பணிகளைச் செய்தும் கொம்பணை கள் (groin) அமைத்தும் ஆறுகளின் போக்கு, கட் டுப்படுத்தப்பட்டது. ஆற்றுப்போக்குவரத்துக் கட்டுமானங்கள். ஆற்றுப் போக்குவரத்திற்குப் போக்குவரத்து நீர்ப்பட்டிகள் (navigation lock) பயன்படுகின்றன நீர்ப்பட்டி என் பது செவ்வகப் பெட்டி வடிவக் கட்டகமாகும் (str- ucture). இதனுள் கப்பல் நுழைந்து வெளியேறலாம். இதன் நுழையும் வழியிலும், வெளியேறும் வழியி லும் மதகுக் கதவுகள் அமைந்துள்ளன. இந்த நீர்ப் பட்டிகளில் உள்ள நீர் மட்டத்தை உயர்த்தலாம் அல் லது தாழ்த்தலாம். ஒரு கப்பலை நீர்ப்பட்டியில் கட் டும் முறையைப் பின்வரும் நிகழ்ச்சிகளின் வரிசை விளக்கும். ஒரு கப்பல் ஆற்றின் போக்கில் செல்வ தால் நீர்பட்டியில் உள்ள நீர்மட்டம் ஆற்றின் மேற் பக்கத்திற்குச் சமமாக இருப்பதாகவும் கொண்டால் முதலில் பட்டியின் அறைக்குள் உள்ள கதவுகளைக் கீழே இறக்கவேண்டும். முழுதுமாக அவற்றைக் கீழே இறக்கியதும் மேல்புறக் கதவை முழுதுமாகத் திறக்க வேண்டும். அப்பொழுது கப்பல் உள்ளே நுழையும். நுழைந்ததும் கப்பலைக் கட்டிக் கீழ்ப்புறக் கதவைத் திறந்து அறையில் உள்ள நீரை வெளியேற்றிவிட வேண்டும். கீழ்ப்புற ஆற்றின் நீர்மட்டத்திற்கு அறை யின் நீர்மட்டம் வரும்வரையில் இது நிகழும். பிறகு கீழ்ப்புறக் கதவுகளைத் திறந்து கப்பலை ஆற்றின் கீழ்ப்புற ஓட்டத்தில் விட்டு விடலாம். இதேபோல ஆற்றின் போக்குக்கு எதிராகச் செல்லும் கப்பலை மேற்கூறிய நிகழ்ச்சிகளை எதிர் வரிசையில் நிகழ்த்தி ஆற்றின் கீழ்ப்புறத்திலிருந்து ஆற்று வாளை 629 படம் 5. நீர் அடைப்பிதழ் (ஒளிப்படம்). நீர்ப்பட்டி வழியாக ஆற்றின் மேற்புறத்திற்குக் கப் பலைக் கொண்டு செல்லலாம். ஆற்றுப் பொறியியல் சோதனைகள். படிமங்களின் (models) உதவியால் ஓர் ஆற்றில் உள்ள நிலைமை யைச் செயற்கையில் அமைத்துக் குறிப்பிட்டதொரு வேலையினால் அதில் நிகழும் மாறுதல்களையும், விளையும் பயன்களையும், நேரும் கேடுகளையும் ஆராய்ந்து முக்கியமான பல உண்மைகளை அறிய லாம். இத்தகைய சோதனைகளால் ஒவ்வொரு பிரச் சினையையும் தீர்க்கும் வழியைப் பலவாறு ஆராய்ந்து காண முடிகிறது. காண்க, அணைகள்; கால்வாய்கள்: நீர்த் தேக்கங்கள்; நீர்ப் பாசனம்; வெள்ளக் கட்டுப் பாடு. நூலோதி மு. தீனதயாளன். 1. R.K. Linsley, Jr., M.A. Kohler, J.L.H. Paulhus, Hydrology for Engineers, McGraw-Hill Inter- national Book Company, New Delhi, London 1982. Handbook of Applied Hydraulics, McGraw-Hill Book Company, New York, 1970. ஆற்று வாளை இது நன்னீரில் வாழும் ஒரு வகைக் கெளுத்தி மீன். இதனை நன்னீர்ச் சுறா (fresh water shark) என்றும் அழைப்பர். இது இந்தியா, பர்மா, மலேசியா, சிங்கப் பூர் போன்ற நாடுகளின் ஆறுகளில் பரவலாகவும், சேறு மிகுந்த பகுதிகளில் சற்று அதிகமாகவும் காணப் படுகிறது. ஆற்று வாளை (wallago attu) பொதுவாக 30-100 செ.மீ. நீளமிருந்தாலும், 3 மீ. நீளம் வரை வளரக்கூடியது. உடலின் மேற்புறம் பசுமையாகவும்,