உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/667

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆறுகளின்‌ செயல்கள 643

ஆறுக களின் செயல்கள 643 I 2 3 5 6 7 8 10 11 12 டொக்கான்ட்டின்ஸ் 350 906 0.6 1,000 1,610 360 10 I 1.1 1.03 .0112 டான்யூபு 315 816 0.6 1,770 2,850 254 7 1 0.8 0.81 .0088 கொலம்பியா 258 668 0.5 1,210 1,950 247 7 0.7 0.96 .0104 ரியோ கிராண்டே 172 445 0.4 1,885 3,040 3 0.08 0.01 0.02 .0001 ரைன் 62 160 0.1 820 1,220 78 2 0.2 1.26 .0137 ரோன் 37 96 500 800 60 2 0.2 1.62 .0177 தேம்ஸ் 4 10 210 340 3 0.08 0.01 0.75 .0082 இவை நீளம் குறைந்தவை. பல நீர்வீழ்ச்சிகள் உள் ளன. எனவே, நீர் மின்சாரம் எடுக்க முடிகின்றது. இவை நீர்ப்பாசனத்திற்கும் பயன்படுகின்றன. காவிரி. இது 760 கி.மீ. நீளமுடையது. குடகு மாவட்டத்தில் தலைக்காவிரியில் தோன்றிக் கருநாடக மாநிலத்தில் பாயும்போது கண்ணம்பாடி என்னும் இடத்தில் கிருஷ்ணராஜசாகர் என்ற ஓர் அணை இந்த ஆற்றின் குறுக்கே காட்டப்பட்டுள்ளது. இந்த ஆறு சிவசமுத்திரம், ஓகனேக்கல் என்னும் இடங்க ளில் நீர்வீழ்ச்சிகளை உண்டாக்கியுள்ளது. சேலம் மாவட்டத்தில் இந்த ஆற்றின் குறுக்கே மேட்டூர் அணை கட்டப்பட்டுள்ளது. பவானி, நொய்யல் மணிமுத்தாறு, அமராவதி என்னும் துணை ஆறுகள் காவிரியுடன் கலக்கின்றன. இவை தவிர மேலணை, கல்லணை என இரு அணைகள் கொள்ளிடத்தின் கிளை ஆற்றின் மேல் கட்டப்பட்டுள்ளன. தஞ்சை மாவட்டத்தில் காவிரி பல கிளை ஆறுகளாகப் பிரிந்து குடமுருட்டி, வெட்டாறு, அரசிலாறு, வீரசோழன் ஆறு, திருமலைராசன் ஆறு என்ற பெயர்களுடன் ஓடித் தரங்கம்பாடி என்னும் ஊருக்கு வடக்கே பூம்பு கார் என்னுமிடத்தில் வங்காள விரிகுடாவில் கலக் கிறது. பாலாறு. இது 290 கி.மீ. நீளமுடையது. இது கருநாடகத்தில் நந்தி மலையில் தோன்றி ஆந்திரம் வழியாக வந்து தமிழ்நாட்டில் வட, தென் ஆற்காடு, செங்கல்பட்டு மாவட்டங்களில் பாய்ந்து, சதுரங்கப் பட்டினத்திற்கருகே வங்காள விரிகுடாவில் கலக் கிறது. செய்யாறு, வேகவதி ஆகியன இதன் துணை ஆறுகள். தென்பெண்ணை. இது 420 கி மீ.நீளமுடையது. வட ஆர்க்காடு மாவட்டத்தில் சாத்தனூரில் இந்த ஆற்றின் குறுக்கே இரு அணைகள் கட்டப்பட்டுள்ளன. இது கருநாடகத்தில் சென்னை கேசவ மலையில் தோன்றிப் பின் சேலம், வட, தென் ஆர்க்காடு மாவட்டங்களில் பாய்ந்து கடலூரில் வங்காள விரிகுடாவில் கலக்கிறது. வைகை. இது மேற்குத் தொடர்ச்சி மலையில் ஏல மலையின் கிழக்குப் பகுதியில் தோன்றி, மதுரை அ. க. 3-41 அ இராமநாதபுரம் மாவட்டங்களில் பாய்ந்து, மன்னார் வளைகுடாவில் கலக்கிறது. மதுரைக்கருகே இந்த ஆற்றின் மீது வைகை அணை கட்டப்பட்டுள்ளது. தாமிரவருணி இது 120 கி.மீ. நீளமுடையது. இது மேற்குத் தொடர்ச்சி மலையில் அகத்திய மலையில் தோன்றி, திருநெல்வேலி மாவட்டத்தில் பாய்ந்து மன்னார் வளைகுடாவில் கலக்கின்றது. இது பாப நாசம் என்னுமிடத்தில் ஒரு நீர்வீழ்ச்சியை உண்டாக்கு கின்றது. இதன் துணை ஆறுகள் மணிமுத்தாறு, சிற்றாறு என்பன. சிற்றாறு குற்றாலம் என்னும் இடத்தில் நீர்வீழ்ச்சியை உண்டாக்குகின்றன. கோதையாறு. இது கன்னியாகுமரி மாவட்டத்தில் பாய்கின்றது. இது மகேந்திரகிரி மலையில் தோன்றி விளவங்கோடு, கல்குளம் ஊர்களின் வழியாகப் பாய்ந்து இறுதியில் அரபிக் கடலில் கலக்கின்றது. மேற்கூறியவை தவிர மேற்குத் தொடர்ச்சி மலை யில் தோன்றி அரபிக் கடலில் கலக்கும் சிறிய ஆறு கள் பல உள் அவற்றுள் பெரியாறு, ஷாராவதி, நேத்திராவதி, பொன்னாறு, ஆழியாறு முக்கியமான வையாகும். இந்திய ஆறுகளின் மேல் கட்டப்பட் டுள்ள நீர்மின் திட்டங்கள் அட்டவணை 3 (பக்கம் 641) இலும் ஆற்று முக்கிய உலக ஆற்று முக்கிய உலக வடிநிலங்கள் அட்டவணை 4 இலும் (பக்கங்கள், 643) உள்ளன. க.மணிமேகலை ஆறுகளின் செயல்கள் நிலக்கோளத்தின் மேற்பரப்பில் பெய்யும் மழை நீரில் ஒரு பகுதி நிலத்தின் சரிவுக்கேற்றவாறு நிலப் பரப்பில் ஓடத் தொடங்குகிறது. இவ்வாறு ஓடும் நீர் சில திசைகளில் சேர்ந்து பாய்ந்து சிறு சிறு ஓடைகளைத் தோற்றுவிக்கின்றது. சிற்றோடைகள், பல சேர்ந்து பெரிய ஆறுகளாக உருவாகின்றன. உருகும் பனி மலைகளும், தாழ்வான நிலப் பகுதி யிலிருந்து வெளியேறும் நிலத்தடி நீரும், சிறிய அள வில் ஆறுகளைத் தோற்றுவிக்கின்றன. .