644 ஆறுகளின் செயல்கள்
644 ஆறுகளின் செயல்கள் ஆறுகள் தோன்றும் இடத்திலிருந்து கடலை அடையும் வரை, அவற்றின் செயல்களால், நிலத்தின் மேற்பரப்பில் பலவகை நில அமைப்புக்கள் உருவா கின்றன. அத்தகைய செயல்களை அரித்தல் (erosion), கடத்தல் (transport), படிதல் (deposition) என மூன்று வகையாகப் பிரிக்கலாம். அரித்தல் செயல். ஆறுகளின் அரிமானச் செய லால் நிலக் கோளத்தின் மேற்பரப்பில் உள்ள மண் ணும், பாறைகளும் அரிக்கப்படுவதால் பலவகை நில அமைப்புக்கள் தோன்றுகின்றன. இந்த அரிமானச் செயலை நீரோட்டச் செயல் (hydraulic action), உராய்ந்து சுரண்டல் அல்லது சிராய்த்தல் (abrasion), கரைத்தல் (dissolution), தேய்த்தல் அல்லது உரசல் (attrition) ஆகிய வகைகளில் விளக்கலாம், நீரோட்டத்தின் ஆற்றல், ஆறுகள் பாயுமிடங் களிலுள்ள மண், பாறைகள் ஆகியவற்றை விசை யோடு தாக்கி நகரச் செய்து, பெயர்த்துச் சென்று விடுகின்றது. ஆற்றோடு அடித்துச் செல்லப்படும் செல்லப்படும் கற்கள். மணல், வண்டல் முதலியன ஆற்றின் அடிப்பகுதி யையும் பக்கப் பகுதிகளையும் அரித்துச்செல்கின்றன. இச் செயலை உராய்ந்து சுரண்டல் அல்லது சிராய்த் தல் எனபர். ஆறு ஓடும் பகுதியிலுள்ள, நீரில் கரையக்கூடிய சில பாறைகள், நீரினால் கரைக்கப்பட்டு ஆற்றோடு அடித்துச் செயலைக் கரைத்தல் எனலாம். செல்லப்படுகின்றன. இச் சில சமயங்களில் ஆற்றோடு அடித்துச் செல்லப் படும் கற்கள், உருட்டப்படுவதால் மழமழப்பாகி உருண்டை வடிவம் பெறுகின்றன. சில கற்கள் ஒன்றோடு ஒன்று போதி உடைந்து, சிறிதாகி கடத் தலுக்கு ஏற்றனவாகி விடுகின்றன. இச் செயலைத் தேய்த்தல் அல்லது உரசல் எனலாம். ஆற்று நீரின் அரிப்புத்திறன், ஆற்றின் வேகம், அது எடுத்துச் செல்லும் படிவுகளின் அளவு, ஆறு செல்லும் பகுதியிலுள்ள பாறைகளின் தன்மை ஆகிய வற்றைப் பொறுத்தது. ஆற்றின் அரித்தலால் உருவாகும் நில அமைப்புகள் குடக்குழிகள். அருவிகளின் அடியிலுள்ள பக்கப் பகுதிகளிலும், நீர் விரைவுகளின் கீழ்ப்புறத்திலுள்ள பக்கங்களிலும், நீர்ச்சுழல்கள் ஏற்படுகின்றன. இச் சுழல்களில், நீருடன் உள்ள மணலும், பரல்களும் சுழன்று, அவற்றின் அடியிலுள்ள பாறைகளைத் தேய்த்து, குடைந்து குடக் குழிகள் (pot holes) உரு வாக்குகின்றன. பள்ளத்தாக்குகள். ஆறுகள் தொடர்ந்து அரித்தல் செயலை மேற் கொள்ளுவதால், நீரோட்டப் பகுதியி படம் அ. துளைப்புக்குடக்குழிகள் ஆ. அரிப்புக் குடக்குழி 1. குடக்குழிகள் (ஒளிப்படம்) அ. வடக்கு அயர்லாந்து டெர்ஷிபரி பசால்ட்டு மேட்டுநிலக் தில் துளைப்புக் குடக்குழிகள். ஆ. தெற்கு வேல்சில் உள்ள கரி இரும்புக் காவ மணற்கற்களில் உள்ள அரிப்புக் குடக்குழிகள் லுள்ள பாறைகள், அரிமானத்தால் ஆழப்படுத்தப் பட்டும், அகலப்படுத்தப்பட்டும், நீளப்படுத்தப்பட் டும் மாற்றமுறும்போது பள்ளத்தாக்குகள் (valleys} உருவாக்கப்படுகின்றன. இவ்வாறு உருவாக்கப்படும் பள்ளத்தாக்குகள் குறுக்கு வெட்டுத் தோற்றத்தில் V வடிவில் இருக்கும்.