உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/671

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆறுகளின்‌ செயல்கள்‌ 647

பாறை முகடுகள். அடுத்தடுத்துக் கடினமான பாறைகளும், மென்மையான பாறைகளும் அமைந் திருக்கும் இடங்களில் ஆறுகளின் அரிப்பினால் மென்மையான பாறைகள் சிதைக்கப்பட்டு அரிக்கப் படுகின்றன. கடினப் பாறைகள் அவற்றின் கடினத் தன்மையால் அரிமானத்திற்கு உட்படாமல் மென் பாறைகளினின்றும் உயர்ந்து நின்று பாறை முகடு களைத் (escarpments) தோற்றுவிக்கின்றன (படம் 3) அகன்ற திண்ணை மேடு. கடினப் பாறைகளும், மென்பாறைகளும், அடுத்தடுத்துப் படுக்கைவசமாக அமைந்திருப்பின், பக்கவாட்டில் மென்பாறைகள் ஆறுகளால் அரிக்கப்பட்டு மேலே உள்ள கடினப் பாறைகள் அரிமானத்திற்கு உட்படாமல் அகன்ற திண்ணை போன்ற அமைப்பைப் பெறுகின்றன (படம் 3). இவற்றை அகன்ற திண்ணை மேடுகள் (mesa) எனலாம். இத்தகைய திண்ணை போன்ற அமைப்பு மிகக் குறைந்த பரப்பளவில் இருக்குமா னால் இதனைச் சிறுதிண்ணைமேடு (butte) எனலாம் (படம் 3). அதிகச் சாய்வு மேடுகள். அடுத்தடுத்துள்ள கடின, மென்பாறைகள், மிகுந்த சாய்வை (dip) உடையன வாக இருப்பின் மென்பாறைகள் ஆற்றினால் அரிக் கப்பட்டு, கடினப் பாறைகள் மட்டும் அரிக்கப்படா மல் அதிகம் சாய்வு மேடுகளாக (hog back) நிற் கின்றன. குறைந்த சாய்வு மேடுகள். அடுத்தடுத்துள்ள கடின மென் பாறைகள் குறைந்த சாய்வுகளை உடையன வாக இருப்பின், மென்பாறைகள் ஆற்றினால் அரிக் கப்பட்டு, கடினப் பாறைகள் மட்டும் அரிக்கப்ப டாமல் குறைந்த சாய்வுமேடுகளாக (cuesta) நிற்கின்றன. அருவிகள். ஆற்றோட்டப் பகுதியில், நிலத்தில் சரிவு திடீரென அதிகமாகிச் செங்குத்தாக இருந்தால் ஆற்றுநீர் மேட்டுப் பகுதியிலிருந்து தாழ்ந்த பகுதியை நோக்கி விழுந்து அருவிகளை (water falls) உருவாக் ம். இத்தகைய அருவிகள், கிடைநிலையில் அடுத் தடுத்து உள்ள கடின, மென்பாறைகள் ஆறுகளின் அரிமானத்திற்கு உட்படும்பொழுது,மென் பாறைகள் மிக அதிகமாகவும், கடினமான பாறைகள் மிகக் குறைவாகவும் அரிக்கப்படுகின்றன, அரிக்கப்படுகின்றன, அப்பொழுது கீழ்ப் பகுதியிலுள்ள மென்மையான பாறைகள் அதி கமாக அரிக்கப்பட்டுச் செங்குத்துப் பள்ளங்களைத் தோற்றுவித்து அருவிகள் உருவாகக் காரணமாகின் றன. பெயர்ச்சிப் பிளவு (faults) உள்ள இடங்களும் மலை முகடுகளும் அருவிகள் உருவாவதற்கான அமைப்பை உடையன. காண்க, அருவிகள். ஆற்றுத்தளங்கள். பள்ளத்தாக்குகளின் கரைகள், ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு, வெவ்வேறு உயரங் களில் தளம் (river terrace) போன்ற அமைப்பை ஆறுகளின் செயல்கள் 647 உடையனவாகின்றன. இவற்றை ஆற்றுத் தளங்கள் எனலாம்.(படம் 5). படம் 5.ஆற்றுத்தளங்கள் 1. ஆறு, 2. ஆற்றுத்தளங்கள். கடத்தல் செயல். ஆற்று நீரினால் அரிக்கப்பட்ட பொருள்களும், அதில் கரைந்துள்ள பொருள்களும் படிவுகளாக க (sediments) ஆற்றோட்டத்தால் கடத்திச் (transport) transport) செல்லப்படுகின்றன. நீரின் ஓட்டம் ஒரே சீராக இல்லாமல் அதில் குறுக்கோட் டங்களும் சுழல்களும் இருப்பதால் படிவுகள் கடத் தப் படுவதும் ஒரே சீராக இருப்பதும் இல்லை. அரி மானத்துக்குட்பட்ட சிறிய, எடை குறைந்த பொருள் கள் அதிக தூரம் கடத்தப்படுவதில்லை. இதனால் ஆற்றுப் படுகை, தொடக்கத்தில் கற்கள் நிறைந்த தாகவும், இடையில் மணலுடன் கூடியதாகவும் கழி முகம் வண்டல் நிறைந்ததாகவும் இருக்கும். ஆறுகளின் கடத்தும் திறன் நீரோட்டத்தின் வேகத்தையும் நிலத்தின் சாய்வுத் தன்மையையும் ஆற்றுநீரில் கலந்தும் கரைந்தும் உள்ள படிவுகளின் அளவையும் பொறுத்திருக்கும். ஆறுகளை, அவற் றின் கடத்தும் திறனைப் பொறுத்து மூன்று வகை யாகப் பிரிக்கலாம். ஒன்று, ஆற்றின் கடத்தும் திறன், படிவுகளைக் கடத்துவதற்குத் தேவையான அளவைக் காட்டிலும் அதிகமிருந்தால், அந்த எஞ்சிய ஆற்றல் அதன் போக்கின் குறுக்கே உள்ள பொருள்களை மேலும் அரிப்பதற்குப் பயன்படும். இத்தகைய படிவு களில் பளுகுறைந்திருப்பதால், அரிக்கும் ஆற்றல் பெற்றிருக்கும் ஆறுகளை அழிவு வேலை (degrading streams) ஆறுகள் எனலாம். இரண்டு, ஆற்றின் வேகம், படிவுகளைக் கட த்துவதற்கு மட்டும் போதுமானதாக இருப்பின் அதனைச் சமநிலை (graded stream) ஆறு எனலாம். மூன்று, ஆற்றின் வேகம் பளு மிகுந்த படிவுகளைக் கடத்துவதற்குத் தேவையான ஆற்ற லைக் காட்டிலும் குறைவாக இருப்பின், கடத்தப் படும் படிவுகளில் ஒரு பகுதி படியத் தொடங்கும். இத்தகைய ஆறுகளை ஆக்க வேலை (agraded streams) எனலாம். ஆறுகள்