உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/672

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

648 ஆறுகளின்‌ செயல்கள்‌

648 ஆறுகளின் செயல்கள் அரிசோனா வில்லைகள் கொலராடோ கிளையாறுகளில் உள்ள ஆற்றுப்பள்ளத்தாக்கு (ஒளிப்படம்) ஆறுகளில் படிவுகள் படிதல். ஆற்றின்வேகம் பல்வேறு காரணங்களால் தடைப்படும்பொழுது அதன் கடத்தும் திறன் குறைத்து, கடத்தப் படும். படிவுகள் படியத் (deposit) தொடங்கு கின்றன. ஆற்றின் அமைப்பு ஒழுங்கற்று இருப்பின், அதன் வேகம் தடைப்படும். நிலத்தின் சரிவு குறைந்து கொண்டே வந்தாலும் ஆற்றின் வேகம் தடைப்படும்.ஆறுகள் அரித்துக் கடத்திச் செல்லும் படிவுகளின் பளு அளவுக்கு அதிகமானாலும் ஆற்றின் வேகம் தடைப்படும். இவ்வாறு ஆற்றின் வேகம் தடைப்படும்பொழுது, கடத்திச் செல்லப் படும் படிவுகள் ஆற்றில் படியத் துவங்குகின்றன. அத்தகைய படிவுகள் எந்தச் சூழ்நிலையில் படியத் துவங்குகின்றனவோ அவற்றைப் பொறுத்து, பல வகையான நில அமைப்புகள் உருவாகின்றன. படிதல் செயலால் உருவாகும் நில அமைப்புகள் ஆற்று நீர் அரித்துக் கடத்துவதால் படியும் படிவுகளை ஆற்றுப் படிவுகள் (fluviatile deposits) அல்லது வண்டல் படிவுகள் (alluvial deposits) எனக் குறிப்பிடலாம். இப்படிவுகள், இவற்றின் அளவு களாலும், அமைப்புக்களாலும் படியும் முறைகளா லும் பல வகையாகப் பிரிக்கப்படுகின்றன. வண்டல் விசிறிகளும், வண்டல் கூம்புகளும், மலைப் பாங்கான பகுதிகளிலிருந்து, சமவெளிப் பகுதிகளில் ஆறுகள் பாயும்பொழுது, ஆற்றுப் போக்கு ஒடுங்கிய நிலையிலிருந்து விரிவடைவதால், ஆற்றின் வேகம் தடைப்பட்டுக் கடத்தப்படும் படிவுகள் படிகின்றன. அத்தகைய இடங்களில் மலைப்பாங்கான பகுதி உயர்ந்தும், சமவெளிப்பகுதி தாழ்ந்தும் இருந்தால், படிவுகள் மலைப்பகுதிக்கருகில் உயர்ந்தும் ஒடுங்கியும், சமவெளிப்பகுதியில் தாழ்ந்தும் விரிந்தும் ஒரு கூம்பு போன்ற அமைப்புடன் இருக்கும். இவை வண்டல் கூம்புகள் (alluvial cones) எனப்படும். இவ்வாறல் லாது மலைப்பகுதியும், சமவெளிப்பகுதியும் ஒரே மட்டத்தில் இருந்தால், படியும் படிவுகள் மலைப் பகுதிக்கருகில் ஒடுங்கியும், சமவெளிப் பகுதியில் விரிந்தும் ஒரு விசிறி போன்ற அமைப்புடன் இருக்கும். இவை வண்டல் விசிறிகள் (alluvial fans ) எனப்படும். வெள்ளச் சமவெளிப் படிவுகள். வெள்ளப் பெருக் கின்போது, வெள்ளம் ஆற்றின் கரையைக் கடந்து அதை அடுத்துள்ள நிலப்பகுதியை' அடைகின்றது. அத்தகைய சமதளமான நிலத்தில் வெள்ளம் பரவும் போது அதன் வேகம் தடைப்பட்டு வெள்ள நீரில் உள்ள பொருள்கள் ஆற்றின் இருபுறங்களிலும் உள்ள சமதளப்பகுதியில் படிகின்றன. இவ்வாறு வெள்ளத்தால் உருவாக்கப்படும் பள்ளத்தாக்கு