652 ஆறுகளின். செயல்கள்
652 ஆறுகளின் செயல்கள் படம் 12. நெளி ஆறுகள் ஆழமான நெளி ஆறுகள் (incised or entrenched meanders). நெளி ஆறுகள் அமைந்துள்ள பகுதி களில், அடிப்புறத்தில் கடின, மென் பாறைகள் இருப் பின் கரைப்பகுதியில் கடினப் பாறைகள் வரும் பொழுது அவை குறைவாக அரிக்கப்பட்டு ஒடுக்க மாகவும், அடிப்பகுதியில் மென்பாறைகள் இருக் கின்ற காரணத்தால் அவை எளிதாகவும் மிக ஆழ மாகவும் அரிக்கப்படுகின்றன. இதன்மூலம் ஆற்றின் போக்கில் எவ்வித மாறுதலும் இல்லாமல் ஆழம் மட்டும் அதிகமாகிக் கொண்டே போகும். இதனால் ஆழமான நெளி ஆறுகள் உருவாகின்றன. ஆறு கவர்தல். (river piracy). சாய்வான நிலப் பரப்பில் ஓடும் பெரிய ஆறுகள், ஆழமாக அரிக்கப் படும்பொழுது, சாய்வின் குறுக்கு வாட்டத்தில் கிளை ஆறுகள் உருவாகின்றன. அடுத்தடுத்து இருக்கும் பெரிய ஆறுகளின் கிளை ஆறுகளில் ஒன்று அதன் தலைப்புறம் அதிகமாக அரிக்கப்படுமானால், நாள டைவில் அது நீளமாகி எதிர்ப்புறமுள்ள கிளை ஆற்றுடன் இணைந்து, நீரோட்டம் நீண்ட கிளை ஆற்றின் போக்கில் ஓடத் தொடங்குகின்றது. இவ்வாறு இணைந்த கிளை ஆறுகள் மேலும் அரிக் கப்பட்டுப், பெரிய ஆறுகளில் ஒன்றின் போக்கினைத் தன் பக்கம் திருப்பி அடுத்த பெரிய ஆற்றுடன் ஓட வைக்கின்றது. இந்தச் செயல் ஆறுகவர்தல் எனப் படும். அரிமானச் சுழற்சி (erosional cycle). போதிய நீர் வசதியுள்ள பகுதிகளில் உள்ள ஆறுகள் அரித்தல், கடத்தல் மற்றும் படிதல் ஆகிய செயல்களால், நிலத் தின் மேற்புறத் தோற்றம் மாறிய வண்ணம் இருக் கும். இச்செயல்கள் ஆறுகளின் இளமை, முதிர்நிலை,