உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/677

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆறுகளின்‌ செயல்கள்‌ 653

முதுமை ஆகிய மூன்று பருவங்களில் நடைபெறு கின்றன. இளமைப் பருவ நிலையில் (youthful stage) ஆறு கள் மேட்டு நிலங்களையும், மலைப்பகுதிகளையும் கூறுபடுத்தத் (dissection) தொடங்கி, நீரோட்டமுள்ள பகுதிகளை ஆழப்படுத்திப் பள்ளத்தாக்குகளையும், மலையிடுக்குகளையும் உருவாக்குகின்றன. இப்பருவ நிலையில் அருவிகளும், விரைவோட்டங்களும்(rapids) அதிகமாக இருக்கும். ஆறுகளின் முதிர்நிலைப் (mature stage) பருவத் தில் அகலமடைந்து, வெள்ளச் சமவெளிகளும் நெளி யாறுகளும் உருவாகின்றன. அகல முதுமைப்பருவ (old age) நிலையின் தொடர்ச்சி யில் இளமையில் காணப்படும் மேடுகளும், முதிர்ச்சி யில் உருவாக்கப்பட்ட நில அமைப்புக்களும், மான சமவெளிகளாக ஆக்கப்படுகின்றன. இப் டொழுது அந்நிலப்பரப்பு, தேய்ந்த நிலப்பரப்பாக (peneplains) ஆகிவிடும். கடினமான பாறைகள் அரி மானத்திற்கு உட்படாமல்தனித்த திட்டுகளாகவும் குன்றுகளாகவும் (monodnocks) அச்சமவெளிப் பகுதியில் உயர்ந்து நிற்கும். புதுவளம் பெறல் (rejuvination). நிலவியல் இயக் கங்களால் குறிப்பிட்ட நிலப்பகுதி உயர்த்தப்படும் பொழுது, அங்குள்ள முதிர்ந்த, முதுமை நிலைமை யில் உள்ள ஆறுகளின் அரிமானத்திறன் அதிகமாக் கப்பட்டு மறுபடியும் புதுவள நிலையை அடைகின். றன. இதனால் ஆழமான மலையிடுக்குகளும், ஆழ் பள்ளத்தாக்குகளும் உருவாகின்றன. முன்தோன்றிய ஆறுகள் (antecedent drainage). நில வியக்கங்களால் படிப்படியாகவும் மெதுவாகவும் நிலப்பகுதி அப்பகுதியில் உயர்த்தப்படுமானால், ஓடும் ஆறுகள் அவற்றின் அடிப்புறத்தை அரிக்கின் றன. இத்தகைய உயர்வால் ஏற்படும் தடைகளை, ஆற்று நீர் அரித்துத் தன் போக்கில், ஏதும் மாற்ற மில்லாமல் சென்று கொண்டே இருக்கும். காலப் போக்கில், அந்த ஆற்றின் சுற்றுப்புற நில அமைப் பில் எத்தகைய மாற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும், ஆறு தனது போக்கில் எத்தகைய மாற்றமுமில்லாமல் பழைய வழியிலேயே போய்க்கொண்டிருத்தலால், இத்தகைய ஆறுகள் முன்தோன்றிய ஆறுகள் எனப் படும். குறை பாலை நிலப்பகுதியில் உள்ள ஆறுகள், வான மழை காரணமாக, மேலே குறிப்பிட்ட மூன்று நிலைகளை அடைவதில்லை. மாறாக, பாலை நிலங் களின் நடுவில் அகலமாகவும் சமதளமாகவும் உள்ள தாழ்ந்த பகுதியை அடைவதால் பாலைவன ஏரிகள் (playas) தோற்றுவிக்கப்படுகின்றன. ஆற்று வடிகால் அமைப்புகள். ஆற்று அமைப்புகள் (stream pattern). நிலத்தின் சாய்வுக் கேற்றவாறு மழைநீர் ஓடத்துவங்கி, ஆறு ஆறுகளின் செயல்கள் 653 களைத் தோற்றுவிக்கின்றன என்பதை அறிந்தோம். ஆறுகள் ஓடும் திசைக்கும் நிலப்பரப்பின் சாய்விற் கும் உள்ள பொருத்தங்களைக் கொண்டு, ஆறுகளின் அமைப்புகளைக்கீழ்க்காணும் வகைகளில் பிரிக்கலாம். சாய்வோடு செல்லும் ஆறு (consequent streams). ஆற்றின் ஓட்டமும், நிலப்பரப்பின் சாய்வும் ஒரே திசையில் இருந்தால் அந்த ஆறு சாய்வோடு செல் லும் ஆறு எனப்படும். 1. படம் 13. ஆறுகளின் அமைப்புகள் 5. நிலத்தின் சாய்வு 2.சாய்வோடு செல்லும் ஆறு 3. குறுக்கே செல்லும் ஆறு 4. சாய்விற்கு எதிர்செல்லும் ஆறு சாய்வோடு செல்லும் கிளை ஆறு 6. மென் பாறை 7.கடி எப் பாறை. குறுக்கே செல்லும் ஆறு (subseqaent streams). நிலப்பகுதியின் கீழே உள்ள பாறைகளும், அவற்றின் அமைப்பும், ஆற்றின் ஓட்டத்தைக் கட்டுப்படுத்துமா னால், சில ஆறுகள், சாய்விற்குக் குறுக்குத் திசையில் ஓடும். வை குறுக்கே செல்லும் ஆறுகள் எனப் படும். சாய்விற்கு எதிர்செல்லும் ஆறு (obsequent streams) பாறைகளும் அவற்றின் அமைப்பும் ஆற்றோட் டத்தைக் கட்டுப்படுத்தும்பொழுது சாய்விற்கு எதிர்த் திசையில் செல்லும் கிளை ஆறுகள் தோற்றுவிக்கப் படுகின்றன. இவை சாய்விற்கு எதிர்செல்லும் ஆறு கள் எனப்படும். இத்தகைய கிளை ஆறுகளின் எதிர்ப்புறத்தில் ஓடும் கிளை ஆறுகள் சாய்வின் திசையிலேயே செல்லும். இவை சாய்வோடு செல் லும் கிளை ஆறுகள் (resequent streams ) எனப்படும். சாய்வுக்குட்படா ஆறு. நிலப்பரப்பின் நிலப்பரப்பின் சாய்விற் கும், ஆற்றின் ஓட்டத்திற்கும், சம்பந்தமில்லாத ஒழுங்கற்ற முறையில் ஓடும் ஆறுகள் சாய்வுக்குட் படா ஆறுகள் (insequent streams) எனப்படும். வடிகால் அமைப்புக்கள். நிலப்பகுதியின் மேல் பரப்பில் உள்ள ஓடைகள், கிளை ஆறுகள், ஆறுகள் இவை ஒன்றோடு ஒன்று இணையும் அமைப்புக்கள்