உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/678

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

654 ஆன்ட்டிமனி (கனிமம்‌)

654 ஆன்ட்டிமனி (கனிமம்) நிலத்தின் அடியில் உள்ள பாறைகளையும், அவற்றின் அமைப்புக்களையும் பொறுத்திருக்கும். இவற்றில் பலவகை இருப்பினும் சிறப்பாக இரண்டு வகை களைக் குறிப்பிடலாம். அவை மரமும் கிளைகளும் போன்ற வடிகால் அமைப்பு (dendritic drainage pattern), கொடிப்பின்னல் வடிகால் அமைப்பு (trellis drainage pattern) LIGHT QUIT (SIL, படம் 14. மரமும் கிளையும் போன்ற வடிகால் அமைப்பு. மரமும் கிளையும் போன்ற வடிகால் அமைப்பு. நிலத் தின் அடியில் உள்ள பாறைகள் ஒரே தன்மையுடன் பரந்து அமைந்தால், அப்பகுதியில் ஓடும் ஆறுகளின் அரிமானச் செயல் எவ்விதக் கட்டுப்பாட்டிற்கும் உட்படாமல் ஓடைகளும், கிளை ஆறுகளும், ஆறு களும் ஒன்றோடொன்று ஒழுங்கற்ற முறையில் இணைந்து மரமும் கிளைகளும் (dendritic) போன்ற வடிகால் அமைப்புக்களை உருவாக்கின்றன. படம் 15. கொடிப்பின்னல் போன்ற வடிகால் அமைப்பு 1. கடினப்பாறை 2. மென்பாறை கொடிப்பின்னல் போன்ற அமைப்பு. நிலத்தின் அடியில், அடுத்தடுத்துக் கடினமாகவும், மென்மை யாகவும், சிறிது சாய்வுடனும் உள்ள பாறைகள் இருப்பின், அப்பகுதியில் ஓடும் ஆறுகளின் அரிமானத் திறன் இடத்திற்கு இடம் மாறுபடுகின்றது. அரிமா னம் கடினப்பாறைகள் உள்ள இடத்தில் குறைவாக வும், மென்மையான பாறைகள் உள்ள இடத்தில் அதிகமாக இருந்து, ஓடைகள், கிளை ஆறுகள், ஆறுகள் ஆகியவற்றின் ஓட்டங்கள் கட்டுப்படுத்தப் பட்டு, அவை இணையும் அமைப்பு ஒரு ஒழுங்கோடு கொடிப்பின்னல்(trellis) போன்ற அமைப்பை உடை யனவாய் இருக்கும். அதனால் அதனால் இது கொடிப்பின் னல் அமைப்புடைய வடிகால் எனப்படும். இவ்வாறாக, ஆறுகள் மேட்டு நிலங்களில் உரு வாகி, சமவெளிகளில் பாய்ந்து, கடலை அடையும் வரை நிலப்பரப்பின் மேல் பரப்பில் பல வகைப் பட்ட நில அமைப்புக்களைத் தோற்றுவித்த வண் ணம் தொடர்ந்து செயலாற்றிக் கொண்டே இருக் கின்றன. நூலோதி ம.ச. செகதீசன் 1.Holmes, A., Holmes D. L., Holmes Principles of Physical Geology, ELBS, Great Britain, 1978. 2. Gorshkov, G., Ukaushova, A., Physical Geo logy, Mir Publishers, Moscow, 1967. ஆன்ட்டிமனி (கனிமம்) இது சாய்சதுரப் பட்டகத் தொகுதியில் படிக மாகிறது. பொதுவாக தாள் படல் வடிவிலும் திண்ணிய நிலையிலும், மணியாகவும், தெளிவான பிளவுடனும், கதிர்வீச்சு உடையதாகவும் காணப்படு கிறது. படிகத்தின் 0112 பக்கத்தில் பல்லுறுப்பாக்க இரட்டுறல் (polysynthetic twinning) நிகழ்கிறது. படிகத்தின் 0001 பக்கத்தில் ஒழுங்கான பிளவு உள்ளது. மற்ற பிளவுகளும் உள்ளன. இதன் முறிவு சீரற்றது; உடையும் இயல்புடையது; கடினத் தன்மை 3 முதல் 3.5 வரை மாறுபடும்; அடர்த்திஎண் 6 முதல் 7வரை மாறுபடும். உலோக மிளிர்வு பெற்றுள்ளது. உராய்வுத் துகள் காரீய வெண்மை நிறம் பெற் றுள்ளது. ஆன்டிமனியில் வெள்ளி, இரும்பு, ஆர்செனிக். முதலியவை சில சமயங்களில் கலந்துள்ளன, கிடைக்கும் இடங்கள். வெள்ளி, ஆன்ட்டிமனி, ஆர்செனிக் போன்ற தாதுப் பொருள்களுடனும், ஸ்ட்டிபுனைட்டு (stibnite) போன்ற கனிமங்களுடனும் சேர்ந்து கிடைக்கிறது. ஸ்வீடனில் 'சாலா' (Sala) என்னுமிடத்திலும், ஜெர்மனியில் ஹார்ட்ஸ் (Hartz) மலையில் ஆன்டிரஸ்பொகு (Andreasberg) என்னு