ஆன்ட்டிமனி (தனிமம்) 655
மிடத்திலும், ஃபிரான்சு நாட்டில் அல்லிமோன்ட், இஸ்ரி என்னும் இடங்களிலும், பொகிமியாவில் பிரிபிராவிலும், சில்லி, போர்னியோ ஆகிய இடங் களிலும் கிடைக்கிறது. அமெரிக்காவில் கெர்ன்கோ, கலிபோர்னியாவில் தென் ஆற்றோரங்களிலும், தெற்கு ஹேம், கியூபெக், பிரின்ஸ் வில்லியம் பேரிஷ். யார்க்கோ, நியூபுரூன்ஸ்விக் ஆகிய இடங்களிலும் கிடைக்கிறது. நூலோதி இரா.ச. Ford, W.E., Dana's Textbook of Mineralogy, Fourth Edition, Wiley Eastern Ltd., New Delhi, 1985. ஆன்ட்டிமனி (தனிமம்) ஆன்ட்டிமனி, தனிம வரிசையில் VA தொகுதியான நைட்ரஜன் தொகுதியில் ஆர்சனிக் தனிமத்தை அடுத்து அமைந்துள்ளது. இதன் குறியீடு Sb; அணு எண் 51; அணு எடை 121.75. பெருமளவு உலோ கப் பண்புகளையும் சிறிதளவு அலோகப் பண்பு களையும் பெற்றுள்ளதால் ஆன்ட்டிமனி (antimony) ஓர் உலோகப் போலியாகும் (metalloid). வெள்ளீ யம், காரீயம் ஆகியவற்றுடன் ஆன்ட்டிமனியைச் சேர்த்துத் தயாரிக்கப்படும் உலோகக் கலவைகள் (alloys) மின்கலப் பகுதிகளைச் செய்யவும், அச்சு உலோகம் தயாரிக்கவும் பெருமளவு பயன்படுகின் றன. இவ்வுலோகமும் இதன் சல்ஃபைடும் கி.மு. 4000 ஆண்டுகளுக்கு முன்பே பயனில் இருந்து வந் துள்ளன. H fla 3 4 LI Be 11 12 2 lla IVa Va Via Vila He 5 6 2 8 910 B C N 0 F Ne 13 14 15 16 17 18 Na Mg 1tb IVb V6 Via Vilb Vill lb tib Al Si P SC Ar 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 K Ca Sc Ti V Cr Mn Fe Co Ni Cu Zn Ga Ge As Se Br Kr 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 Xe Rb Sr Y Zr Nb Mo Tc Ru Rh Pd Ag Cd In Sn Sb Te 55 56 57 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 Cs Ba La H Ta W Re Os Ir Pt Au Hg Tl Pb Bi Po At Rn 87 88 89 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 Fr Ra Ac RI Ha 111 AUTOM S8 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 Ganga Ce Pr Nd Pm Sm Eu Gd Tb Dy Ho Er Tm Yb Lu தொகுதி 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 Th Pa U Np Pu Am Cm Bk Cf Es Fm Md No Lr ஆன்ட்டிமனி ஆன்ட்டிமனி (தனிமம்) 655 இயற்கையில் கிடைக்கும் பல ஆன்ட்டிமனித் தாதுக் களில் மிகவும் சிறப்பானது ஸ்டிபுனைட்டு (stibnite) எனப்படும் சாம்பல் நிறமான ஆன்ட்டிமனி சல்ஃ பைடு (Sb,S,) ஆகும். காற்றில் இத்தாதுவை வறுக் கும் போது இது ஆன்ட்டிமனி நாள் ஆக்சைடாக (Sb,0,) மாறுகிறது. இவ்,ஆக்சைடைக் கரியுடன் சேர்த்து வெப்பப்படுத்தினால் ஆன்ட்டிமனி தனிம நிலையில் கிடைக்கிறது. $bgs, + 50, Sb,O, + 4 C Sb,O, + 3 SO, 2 Sb + 4 CO வேறொரு முறையில், இரும்புடன் ஸ்டிபுனைட்டு சேர்த்துக் கலக்கப்பட்டு ஓர் உலையில் உருக்கப்படு கிறது. அப்போது உண்டாகும் இரும்பு சல்ஃபைடும் ஆன்ட்டிமனியும் நீர்ம நிலையில் இருக்கும். A Sb,S, + 3 Fe 3 FeS + 2 Sb செறிவுமிகுந்த ஆன்ட்டிமனி உலையின் கீழ்ப்படல மாகத் தங்கி விடும். எனவே அதனை எளிதில் தனியே பிரித்து விடலாம். மேற்கண்ட முறைகளில் பெறப்படும் ஆன்ட்டிமனி, மின்பகுப்பு முறையில் (electrolysis) தூய்மைப்படுத்தப்படுகிறது. க பண்புகள். இது புறவேற்றுமை உருவங்களாகக் (allotropic modifications) காணப்படுகிறது; உலோக உருவம்,மஞ்சள் உருவம் (yellow form) அல்லது 00- உருவம். இதில் மஞ்சள் வடிவம் - 90°C வெப்ப நிலைக்குக் கீழ்தான் நிலைப்புத்தன்மையுடையது. இது ஸ்டில்பீனைக் (SbH,) குளோரின் அல்லது புரோ மினால் மெதுவாக ஆக்சிஜனேற்றம் செய்யும்போது உண்டாகிறது. இவ்வடிவத்தின் அடர்த்தி 5.3கி/ செ. மீ. 3. மிகக் குறைந்த அளவே இவ்வடிவத்தைப் பற்றிய செய்திகள் தெரிய வந்துள்ளன. ஆன்ட்டிமனியின் நிலைத்த வடிவம் வெள்ளி போல் பளபளப்பான உலோக உருவமாகும். இது கடினமானதும், படிக அமைப்பைக் கொண்ட தாகவும் உள்ளது. எளிதில் உடையக்கூடியது. இதன் பொதுவான சில பண்புகள் கீழே அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன. பண்பு உருகுநிலை கொதிநிலை அடர்த்தி ஆக்சிஜனேற்ற நிலைகள் எலெக்ட்ரான் அமைப்பு மதிப்பு 630°செ. 1380°செ. 6.691 A/கிகி(20° செ.இல் -3, + 3, +5 2,8,18,18,5 அல்லது (Kr) 4d¹0, 52, 5p³