உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/684

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

660 ஆனிக்ஸ்‌

660 ஆனிக்ஸ் ลบ ஆன்றமேடா விண்மீன் குழு மூன்று விண்மீன்களின் கூட்டு விண்மீன் ஆகும். இவ் விண்மீன் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். ஆனால் கண்களால் காண இயலாது. முன்பு ஒண்முகிற்பட லம் (nebula) என்று கருதப்பட்ட வந்த ஆன்றமேடா மண்டலம் (andromeda galaxy) இக்குழுவில் Y விண் மீனுக்கு அருகில் அமைத்துள்ளது. மேலும் இக் குழு வில் பல ஒளிரும் விண்மீன்களும் (ccpheid), மாறும் விண்மீன்களும் (variable stars), கோள் ஒண்முகிற்பட லம் (planetary nebula) NGC 7662 உம் அமைந் துள்ளன. காண்க. உத்திரட்டாதி, ஆன்றமேடா மண்டலம். ஆனிக்ஸ் பெ.வ. வரி அமைப்புடைய சால்சிடொனி எனப்படும் குவார்ட்ஸ் (quartz SiO,) கனிம வகையிலுள்ள வரி கள் அகேட்டில் (agate) உள்ளதுபோல் வளைந்தவாறு இல்லாமல் நேர் இணைகோடுகளாக அமையும்போது அதற்கு ஆனிக்ஸ் (onyx) என்று பெயர். ஆனால் மணிக்கல் வணிகத்தில் சாம்பல் நிற சால்சிடொனி கல்லுக்குக் கறுப்பு, நீலம், பச்சை முதலிய பல நிறங் களைச் செயற்கை முறையில் ஊட்டி அதை ஆனிக்ஸ் என்று கூறி விற்கிறார்கள். அந்த நிறங்கள் கெட்டி யாக மாறாத தன்மையுடன் இருப்பதால் நிற மூட்டப் பட்டன என்பதையே தெரிவிப்பதில்லை. இயற்கையில் ஆனிக்ஸ் வெள்ளையுடன் பழுப்பு, சிவப்பு நிறங்கள் கலந்தும், எப்போ தாவது வெள்ளை யுடன் கறுப்பு நிறம் கலந்தும் இருக்கும். செம்பழுப் புடன் வெள்ளை அல்லது கறுப்பு வரிகளைக் கொண்ட வகைக்குச் சார்டானிக்ஸ் (sardonyx) எனப்பெயர் உண்டு. இது கார்னீலியன்சார்டு (carneliansard) எனப்படும் சிவப்புச் சால்சிடொனி கனிமப் படலங் களைக் கொண்டது. இதுவே பெயர் பெற்றமணிக் கல் வகையாகும், புடைப்பான உருவம் செதுக்கப் பட்ட மணிக்கல் பதக்கம் (cames) அல்லது குடை வான உருவம் செதுக்கப்பட்ட மணிக்கல் பதக்கம் (intaglio) ஆகியவை ஆனிக்ஸ் கற்களில் செதுக்கப் படுகின்றன. ஆனிக்ஸ் பளிங்கு (onyx-marble) எனப்படும் வகைச் சுண்ணப்படலப் படிவுக் கல்லாகும். இது குகைகளில் ஊறும் சுண்ணச் சத்துள்ள நீர் ஆவியா வதால் படியும் வண்ணப் படலங்களைக் கொண்ட கேல்சியம் கார்பொனேட்டாலான கல்புற்றுப் போன்ற கூரைப் படிவுக் கூம்பு வடிவக் (stalagmite) கனிம வளர்ச்சி உடையதாகும். நூலோதி ம.ச.ஆனந்த் 1. Ford, W.E., Dana's Textbook of Mineralogy, Fourth Edition, Wiley Eastern Limited, New Delhi, 1985. ஆனைக் குண்டுமணி ஆனைக்குண்டுமணி அல்லி இணையா (polypetalous ) இருவிதையிலைக் குடும்பங்களில் ஒன்றான மைமோ சேசியைச் (mimosaceae) சார்ந்ததாகும். தாவர வியலில் இதற்கு அடினாந்தீரா பவோனினா (adenan- thera pavonina linn.) என்று பெயர். அந்தமான், தென்னிந்தியா, மேற்குத் தொடர்ச்சி மலைக் காடு கள், பர்மா, கிழக்கு இமாசலப் பிரதேசம் ஆகிய இடங்களில் காணப்படுகின்றது. தோட்டங்களிலும், சாலை ஓரங்களிலும் கூடப் பயிரிடப்படுகிறது. சிறப்புப்பண்புகள். இது 20முதல் 30மீ. வரை வளரக் கூடிய நடுத்தர உயரமான இலையுதிர் மரம். 2 முதல் 3 மீ. பருமன் வரை பருக்கக்கூடியது. இதன் இரட் டித்த சிறகமைப்புக் கூட்டிலைகள் (bipinnately com- pound leaves ) எதிரடுக்கில் அமைந்தவை; சிற்றிலை கள் (leaflets) பல மாற்றடுக்கில் காணப்படும்; இவை காம்புகளற்றவை. இலையடிச்சிதல்கள் சிறியவை; இலைகள் முதிரும் முன்னரே உதிரக்கூடியவை.. மலர்கள் மஞ்சள் நிறமானவை; கூட்டுப்பூத்திரள் கதிர்வகை (panicle raceme) மஞ்சரியில் அமைந்தவை; நறுமணமுள்ளவை. மஞ்சரி இலைக்கோணங்களிலோ மிலாரின் நுனியிலோ காணப்படும். பூவடிச்சிதல்கள் (bracts) மிகச் சிறியவை. புல்லி வட்டம் சிறியது. அல்லி இதழ்கள் 5, அடியில் இணைந்தவை; தொடு இதழமைவில் (valvate aestivation) இருக்கும். மகரந்