உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/686

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

662 ஆனை நெருஞ்சி

662 ஆனை நெருஞ்சி மேசை, நாற்காலி முதலியவைகள் செய்வதற்கும் பயன்படுகின்றது. இதன் வைரக் கட்டை (heart wood) சிவப்பாக இருப்பதால், இதனை உண்மை யான சிவப்புச் சந்தன மரத்தின் கட்டைக்குப் (red sanders; pterocarous santalinus) பதிலாகப் பயன் படுத்துகிறார்கள். நூலோதி பா. அண்ணாதுரை 1. Brandis, D., Indian Trees, Constable & Co., Ltd., London, 1921. 2. Gamble, J.S., Fl. Pres. Madras, Adlard & Son, Ltd,, London, 1918. 3. The Wealth of India, CSIR Publication, New, Delhi, 1984. ஆனை நெருஞ்சி தாவரவியலில் பெடாலியம் மூரக்ஸ் (pedalium murex Linn). என்று கூறப்படுவது ஆனை நெருஞ்சி ஆகும். தமிழில் இதற்குப் பெரு நெருஞ்சி என்ற மற் றொரு பெயருமுண்டு. இருவித்திலைப்பிரிவில் (dic- otyledoneae) அல்லி இணைந்த (camopetalous) பெடாலியேசிக் (pedaliaccae) குடும்பத்தைச் சார்ந்த தாகும். இது களைச்செடியாகத் தக்காணத்திலும் (deccan), குறிப்பாகக் கடற்கரைப் பகுதிகளிலும் இலங்கையிலும் பொதுவாகக் காணப்படுகின்றது. வெப்பமண்டல் ஆப்பிரிக்காவிலும் பரவியிருக் கின் றது. சிறப்புப்பண்புகள். இது ஏறக்குறைய சதைப்பற் றுள்ளது; பலகிளைகளுடன் பலபக்கங்களில் பரவி வளரக்கூடிய குறுங் களைச்செடியாகும். இதற்கு அழுகிய மாமிசத்தின் மணம் உண்டு. செடி முழுதும் வழவழப்பான மூசிலேஜை (mucilage) உண்டாக்கக் கூடிய மிகச் சிறிய சுரப்பிகளுண்டு இலைகள் முட்டை வடிவான (ovate); ஏறக்குறைய பிளவுகளுடைய (lobed) அல்லது ஒழுங்கற்ற முறை யிலமைந்துள்ள பற்கள் போன்ற விளிம்புகளையும், வெளிர்பசுமை நிறத்தையும் பெற்றிருக்கும். பெரும் பாலும் எதிரடுக்கிலும் (opposite phyllotaxy), 5முதல்10 10 7. ஆனை நெருஞ்சி 1. முழுக்கனி நிலைத்த புல்லிவட்டம் 3. முள் 4. பூவின் விரிப்புத்தோற்றம் 5.மகரந்தத்தாள் ( இரு அளவுகளில் காண்க) 6. சூலகமுடி மகரந்தத்தாளின் சுரக்கும் கேசங்கள் 8. மகரந்தப்பை நுனியில் உள்ள சுரப்பி 9. சூற்பையின் நீள் வெட்டுத் தோற்றம் 10. குல் 11.முழுச் செடி.