உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/699

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆஸ்பராகஸ்‌ 675

படும். அவை சுவாசக் குழல் தசை இளக்கிகள broncho dilators); ஒல்லாமை எதிர்ப்பிகள் (anti allergics), கார்டிகோஸ்டிராய்டு மருந்துகள் (corticosterids) என்பனவாகும். சுவாசக்குழல் தசை இளக்கிகள் என்பன அட்ரி னலின் (adrenalin), எபிடிரின் (ephedreine), சால்பு டமால் (salbutamol) அமைனோபைலின் (amino philline) ஆகியவையாகும். இவை மாத்திரையாகவோ, ஊசி மருந்தாகவோ உள்மூச்சுவழியாகவோ (inhal- ers) பயன்படுத்தப்படுகின்றன. சோடியம் க்ரோமோக்ளை கேட்டு (sodium cromoglycate, என்னும் மருந்து மாஸ்ட் செல்கள் உடைவதையும், அதனால் ஏற்படும் விளைவுகளையும் தடுக்கிறது. பிரட்னில்சோல் போன்ற கார்டிகோஸ் டிராய்டு மருந்துகளும் பயன்படுகின்றன. இம் மருந்துகளினால் நோய் கட்டுப்படாமல் போனால் மருத்துவமனையில் அவசர சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். பிராணாயாமம், யோக சிகிச்சை முதலி யவை மூலம் நோயைக் கட்டுப்படுத்தலாம். இறுதியாக ஆஸ்ததுமாலைப் பற்றி மனத்தில் பயமோ, அசட்டையே கொள்ளாமல் முறையான சிகிச்சையளித்தால் நோயாளி நல்ல பலனடைவார். சி.நடராசன் ஆஸ்பராகஸ் தண்ணீர் I(வி)ட்டான் கிழங்கு என்று கூறப்படும் ஆஸ்பராகஸ் ரெசிமோசஸ் (asparagus racemosus willd) ஒருவிதையிலைக் குடும்பங்களில் ஒன்றான லிலியேசியைச் (liliaceae) சார்ந்தது. ஆ.புளுமோசஸ் (A. plumosus ) ஆ. அஃபிசினாலிஸ் (A. officinalis) ஆ. ஸ்பரங்கரி (A. sprengeri) ஆ. அஸ்பராகாய்ட்ஸ் (A. asparagoids) அகியவை அதிகமாகப் பரவியுள்ள சிற்றினங்களாகும். பொதுவாக, இது ஈரப்பதம் அதிகமாக உள்ள பகுதிகளிலும் மிதவெப்ப (tempe- rate) நாடுகளிலும் செழித்து வளரும். இதனுடைய தாயகம் இங்கிலாந்து என்று கருதப்படுகிறது. ஆனால் தமிழ் நாட்டில் இது சில மலைப் பகுதிகளில் இயற்கையாகத் தானாகவே வளரக்கூடிய காட்டுத் தாவரமாகக் காணப்படுகின்றது. உதகமண்டலம், ஆனைமலை, பழனிமலைப் பகுதிகளில் சுமார் 1200 முதல் 2400 மீ. உயரம் வரை இது காணப்படுகிறது உயரம் வரை சிறப்புப்பண்புகள். இது முள்ளுடன் கூடிய தொற் றிப் படரக்கூடிய பலபருவக் (perennial) கொடியா கும். தண்டுகள் ஓரிரண்டு மீட்டர் வளர்ந்து கிளைகளைத் தோற்றுவிக்கின்றன. இந்தப் பேரினத்திற்கே உரித்தானமுறையில் இதில் அல்லது அரிவாள் போன்ற 2 முதல் 6 இலை ஒத்த தண்டுகள் (cladophylls) ஒவ்வொரு கணுவிலும் அ.க. 3-43அ ஊசி ஆஸ்பராகஸ் 675 உண்மை இலைகளுக்குப்பதிலாகக் கொத்தாக அமைந் திருக்கின்றன. இவை இலைக் கோணக்கிளைகளின் மாற்று உறுப்புகளாகத் தோன்றி இலைகளின் தொழி லைச் செய்கின்றன. உண்மையான இலைகள் சிறிய சிதல் இலைகளாகக் குறைக்கப்பட்டுள்ளன. மஞ்சரி தனித்தோ, 3 மஞ்சரிகள் ஒன்று சேர்ந்தோ காணப் படும். ஓராண்டில் இருமுறை பூக்கக்கூடியது. மலர் வெண்மை அல்லது பசுமை கலந்த மஞ்சள் நிறமுடை யது; புனுகுஒத்த நறுமணமுடையது. மலரிதழ்கள் (petals)6(3 + 3).மகரந்தத் தாள்கள் 6%(3+3 ) சூற்பை 3அறைகளைக் கொண்டது; ஒவ்வோர் அறையிலும் 2 சூல்கள் உள்ளன; சூல்கள் அச்சுச் சூலமைவு முறையில்(axile placentation) அமைந்துள்ளன;கனிகள் உருண்டையானவை; சிவப்பு நிறம் உடையவை. பொருளாதாரச் சிறப்பு. ஆஸ்பராகஸ் ஏறத்தாழ 2,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கிழங்கு களுக்காகப் பயிரிடப்பட்டு வந்திருக்கிறது என்பதற்கு வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. ரோமானியர் காலந்தொட்டே இதன் கிழங்குகள் சிறந்த உணவா கப் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கின்றன. உலக நாடு களில் அமெரிக்கா ஆஸ்பராகஸ் விளைச்சலில் முன்ன ணியில் நிற்கிறது. கலிஃபோர்னியா மாநிலத்தில் மட்டும் மொத்த விளைச்சலில் 50 விழுக்காடுக்கு மேலாக விளைவிக்கப்படுகிறது. அமெரிக்காவிலுள்ள வாஷிங்டன், நியூஜெர்ஸி ஆகியஇடங்களிலும் அதிக மாகப்பயிராகிறது. அமெரிக்காவில் ஆண்டிற்குச் சுமார் 150, 000 ஏக்கருக்கும் மேலான பரப்பில் ஆஸ்பராகஸ் பயிரிடப்படுகிறது. இவற்றி லிருந்து ஏறத்தாழ 175,000 டன்கிழங்குகள் கிடைக்கின்றன. இதன் கிழங்கு பச்சையாக வோ, பதப்படுத்தப்பட்டோ உணவாக நிலப் உட் கொள்ளப்படுகின்றது. மேலும்ஆஸ்பராகஸ் கிழங்குகள் குளிர்பதனச் சேமிப்பு முறையில் பதப்படுத்தப்பட்டு டப்பாக்களில் அடைக்கப்பட்டு அயல்நாடுகளுக்கு அனுப்பப்படுகின்றன. இதன் ஊட்டச்சத்து மதிப்பு மிகவும் குறைவாகும். இதில் 94% நீர்ச்சத்து இருக்கிறது. ஆனால் மற்ற காய்கறிகளை விட து அதிகமான அளவு புரதச் சத்தைப் பெற்றி ருக்கிறது. இதன் இலைகளிலிருந்து தூக்க மருத்தும், தயத்திற்கு ஊக்கம் தரும் மருந்துகளும் தயாரிக்கப் படுகின்றன. இலைச் சாறு பசும்பாலுடன் கலந்து மேகவெட்டை நோய்க்கு (gonorrhoea) பருந்தாகக் கொடுக்கப்படுகின்றது. தமிழில் தண்ணீர் மி(வி)ட் டான் கிழங்கு என்று அழைக்கப்படும் ஆஸ்பராகஸ் சித்த மருத்துவத்தில் ஆண் மலட்டுத் தன்மையை நீக் கத் (impotency) தலை சிறந்த மருந்தாகும். இதனு டைய வேர் ஊட்ட நீர்மமாகவும் (tonic), சிறுநீர்க் கழிவினைத் தூண்டுவதற்கும், பால் சுரப்பியாகவும் பயன்படுகின்றது. வேரின் சாற்றைத் தேனுடன் கலந்து செரிமானத்தைத் தூண்டுவதற்குக் கொடுக்