ஆஸ்டிரேஷிய மீன் 683
உள்ள ஆஸ்மியம் டை ஆக்சைடு மீது ஃபுளுரினைச் செலுத்தி ஆஸ்மியம் ஆக்சோபென்டாஃபுளுரைடு பெறப்படுகிறது. இதன் வடிவம் யுரேனியம் ஹெக் சாஃபுளுரைடு (UF) அமைப்பைப் போன்றது. OsF சேர்மத்தைத் தயாரிக்கும்போதே ஆஸ்மியத்தின் (VI) சேர்மமான OSOF-ம் கிடைக்கின்றது. 8 சேர்மம் காந்த விலக்கத் (diamagnetic) தன்மையுள் ளது. இதை ஒத்த OsCடிக்கும் காந்தவிலக்கத் தன்மையுள்ளது. 400°C அளவிற்கு வெப்பப்படுத்தப் பட்ட ஆஸ்மியத்தின் மீது குளோரின்-ஆக்சிஜன் கலந்த கலவையைச் செலுத்திப் பெறப்படுகிறது. ஆஸ்மியம் ஹைட்ராக்சோ டிரைகுளோரைடு (Os (OH) CI), ஆஸ்மியம் ஹைட்ராக்சோடிரைபுரோ மைடு (Os(OH)Br,) முதலியன ஆஸ்மியத்தின் ஹைட் ராக்சோ ஹாலைடுச் சேர்மங்களாகும். ஹைட் ரோகுளோரிக் அமிலத்தில் கரைக்கப்பட்ட 0s0, கரைசலில் 4 ஹைட்ரஜன் குளோரைடு வாயுவைச் செலுத்தி ஆஸ்மியம் ஹைட்ராக்சோபென்டாகுளோ (Os(OH)CI,) பெறப்படுகிறது. இச்சேர்மம் நீரை உறிஞ்சும் தன்மையுடையது. 0s0, கரைச் லுடன் ஹைட்ரோ புரோமிக் அமிலத்தைச் சேர்ப்ப தால் ஆஸ்மியம் ஹைட்ராக்சோபுரோமைடு கிடைக் கிறது. ஆழ்ந்த சிவப்பு நிறமுடைய படிகத்திண்ம மான இச்சேர்மம், நீரிலும், ஆல்கஹாலிலும் அதிக அளவு கரையக்கூடியது. கார்போனைல் சேர்மங்கள். ஆஸ்மியம் பென்டா கார்போ பானைல் (Os(CO)) டிரைடு ஆஸ்மியம் டெக்கா கார்போனைல் (Os (CO)டி) என்ற இரண்டு கார்போனைல் சேர்மங்கள் மட்டுமே அறியப்பட் டுள்ளன. 150°C - 300°C வெப்பநிலையில், 200 - 300 வளிமண்டல அழுத்தத்தில், Osi, மீது கார்பன் மோனாக்சைடு (CO) வாயுவைச் செலுத்தி வினை புரியச் செய்தால் Os(CO), உண்டாகிறது. இருப் பினும் இதே வெப்ப, அழுத்த நிலையில் உலர்ந்த 030, மீது CO வாயுவைச் செலுத்தி ஆக்சிஜன் ஒடுக் கம் அடையச் செய்து பெறுவதே சிறந்த முறை யாகக் கருதப்படுகிறது. ஆஸ்மியம் பென்டாகார்போ னைல் நிறமற்ற நீர்மம் (உருகுநிலை 15°C); மும் முக இரட்டைப் பிரமிடு (triagone bipyramid) வடிவம் கொண்டது. 175°C வெப்பத்தில் சைலீன் (xylene) ஊடகத்தில் வைக்கப்பட்ட OsO4 மீது 120 வளிமண்டல அழுத்தத்தில் CO ஐச் செலுத்தி வினைபுரியச் செய்வதனால் Os (CO), கிடைக்கின் றது. இச்சேர்மம் மஞ்சள் நிறத் திண்மம், உருகுநிலை 224°C ஹைட்ரோகார்பன் கரைப்பான்களில் நன்கு கரையும். அணைவு வகைச்சேர்மங்கள். NH,, CN, CO, PR, போன்ற வழங்கிகள் (donors) உடன் ஏராளமான அணைவுச் சேர்மங்களை (coordination compounds) ஆஸ்மியம் கொடுக்கின்றது. ஆக்சிஜனேற்ற நிலை ஆஸ்டிரேஷிய மீன் 683 பூஜ்யம் முதல் எட்டு முடிய உள்ள எல்லா நிலைகளி லும் அணைவுச் சேர்மங்கள் உண்டாகின்றன. பயன்கள். ஆஸ்மியம் மந்தமான (inert), ஆனால் மிகவும் கெட்டியான உலோகம். இதன் பயன் மிகக் குறைவு. இருப்பினும் இதன் உலோகக்கலவை (alloy பெரிதும் பயன்படுகிறது. ஆஸ்மியம் - இரிடியம் (osmium-iridium) உலோகக் கலவை, பேனாமுள் போன்ற கெட்டியான பொருள்கள் செய்யவும், விளக்குகளில் எரியும் மெல்லிய கம்பிகள் செய்யவும் பயன்படுகிறது.60% ஆஸ்மியம் உள்ள உலோகக் கலவை கெட்டியான அச்சுகள் செய்யப் பயன்படு கிறது. அடைபடாச் சேர்மங்களை (unsaturated compounds) ஹைட்ராக்சில் ஏற்றம் செய்வதற்கு ஆஸ்மியம் டெட்ராக்சைடு பயன்படுகிறது. முக்கிய மாக இவ்வினை கார்டிசோன் (cortisone) போன்ற ஹார்மோன்கள் (hormones) தயாரிக்க மிகவும் பய னுள்ளதாக இருக்கிறது. ஆஸ்மியமும் அதன் உலோ கக் கலவைகளும் உராய்வு எதிர்ப்பிகளாக (wear resistants) உள்ளன. எம். நல்லு. நூலோதி 1. Satya Prakash, Advanced Chemistry of Rare Elements, S. Chand and Company Ltd, New Delhi, 1982. wilkinson, 2. Cotton, Albert F., Geoffrey, Advanced Inorganic Chemistry, Third Edition, Wiley Eastern Ltd, New Delhi, 1984. ஆஸ்டிரேஷிய மீன் இந்தியக் கடல்களில் காணப்படும் ஆஸ்டிரேஷிய மீன் (ostracion) சென்னைக் கடற்கரையிலும் காணப் படுகிறது. ஆஸ்ட்ரேஷிய கியூபிக்கஸ் (O. cubicus) ஆ. டர்ரிட்டஸ் (0. turritus) போன்ற இனங்களும் இந்தியக் கடல்களில் காணப்படும். மற்ற வகை களாகும். இம்மீன் ஏறத்தாழ 11 அடி நீளம் வரை ஆஸ்டிரேஷிய மீன்