உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/708

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

684 ஆஷ்மரம்‌

684 ஆஷ்மரம் வளரக்கூடியது. பொதுவாக இம்மீன் உலகில் வெப்ப, குறை வெப்பக் கடல்களில் பரவலாகக் காணப்படு கின்றது. இம்மீன்களின் கடினமான, பெட்டி போன்ற புறப்போர்வையைக் கொண்டு இவற்றை எளிதில் இனங்கண்டறிய இயலும். இம்மீனின் ஓடு மூன்று விளிம்புக் கோடுகளையு டையது. இவற்றுள் முதுகுப் பக்கத்தில் நடுக்கோட் டில் உள்ளது உயர்த்தப்பட்டும், மேல் பக்கத்தில் ஒரு கூர்மையான, முக்கோண வடிவமுள்ளதாக அழுத்த முற்றும் காணப்படும். இம்மீனின் உச்சிப்பகுதி முது குப் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது. கண் குழியின் மேல்புறம் பொதுவாக ஒரு முள் காணப்படும். இம் முள் மேல்நோக்கியோ சற்றுப் பின்னோக்கியோ வளைந்திருக்கும். ஏறக்குறைய முக்கோண வடிவத் தையுடைய இம்மீனின் மேல்தாடையில் 12 பற்களும், கீழ்த்தாடையில் 8 பற்களும் உள்ளன. வால் துடுப்பு வட்ட வடிவமாகவோ மொட்டையாகவோ இருக்கும். ஆஸ்டிரேஷியன் மீன் பொதுவாகப் பொன் பழுப்பு நிறத்தைக் கொண்டிருக்கும். வயிற்றுப்பகுதி யில் மூன்று அடர்ந்த நிறமுடைய பட்டைகளும், முதுகுத் துடுப்பின் தொடக்கத்தில் ஒரு பட்டையும் காணப்படும். இம்மீன் ஓட்டின் ஒவ்வொரு தகட்டின் மையத்திலும் வெளிர் நீலநிறப்புள்ளி ஒன்று காணப் படும். இது மட்டுமின்றி வாய்த் துடுப்பின் மேல் செங்குத்தாக இரு பட்டைகள் காணப்படும். இம் மீனின் துடுப்புகள் பொன் நிறத்தைக் கொண்டிருக் கும். இளம் ஆஸ்டிரேஷியன் மீனின் உடலின் மேல், நிறத் திட்டுகளும், பட்டைகளும் காணப்படும். மேலும் இதன் கண் குழியினின்று வாலின் முதுகுப் பக்கம் வரை ஒரு விளிம்புக்கோடு காணப்படும். ஆஷ்டிரேஷியன் நேசஸ் (O. nasus) எனும் இனம் ஏறத்தாழ 22 செ.மீ. வரை வளர்ந்து காணப்படு கிறது. ஆஸ்டிரேஷியன் கார்னூட்டஸ் (0. carnutus) போன்ற இனமும் இந்தியக் கடல்களில் காணப்படு கிறது. ஆஷ்மரம் ம.அ.மோ. இது அல்லி இணைந்த (gamopetalae) இருவிதை யிலைக் குடும்பமாகிய ஒலியேசியையும் (oleaceae) ஃபிராக்சினஸ் (fraxinus) என்ற பேரினத்தையும் 3 5 ஆஷ்மரம் 1. பூ 2. மகரந்தத்தாள் சூலகமுடி 1. கனி 5. விதை 6. கூட்டிலை 7. காய்களின் கொத்து (சாவிகள்)