உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/713

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இகுவானா 689

என உள்ள 5 துணைக்குடும்பங்களில் இகுவானினேயும் (iguaninae) ஒன்று. இகுவானிடே குடும்பத்தைச் சேர்ந்த ஊர்வன யாவும் இகுவானிடுகள் என வழங் கப்பட்டாலும் இகுவானினே துணைக்குடும்பத்தைச் சேர்ந்தவையே இகுவானாக்கள் (iguanas) அழைக்கப்படுகின்றன. இகுவானாக்கள் பலவகைப் பட்ட வாழிடங்களில் வாழ்கின்றன. இகுவானிடு களிலே குவானாக்கள் உருவத்தில் பெரியவை. இவை மத்திய அமெரிக்காவில் மிகுதியாகவும் சில இனங்கள் வட, தென் அமெரிக்கப் பகுதிகளிலும் காணப்படுகின்றன மேலும் 2 இனங்கள் காலப் பேகோஸ் தீவிலும் ஓர் இனம் ஃபிஜி, ட்டோங்கா தீவு களிலும் காணப்படுகின்றன. வெளிர்பச்சை நிறமான பச்சை இகுவானா (common iguana or green iguana, Iguana iguana ) மெக்சிக்கோவிலிருந்து மத்திய பிரேசில் வரையுள்ள பகுதிகளிலுள்ள காடுகளில் காணப்படுகிறது; இது ஆற்றோரங்களில் நீர்ப்பரப்புக்கு மேலே நீட்டியுள்ள கிளைகளில் வாழ்கிறது. இடையூறு ஏற்பட்டால் மரக் கிளைகளிலிருந்து தண்ணீரிலோ தரையிலோ குதித்து வெகுவேகமாக நீந்தியோ ஊர்ந்தோ சென்று மறைந்துகொள்ளும். இது 2.2மீ. நீளம் வளரக்கூடியது. ஆண் இகுவானாவில் 8 செ.மீ. வரை வளரக்கூடிய வரைமுகடு (crest) காணப்படு கிறது. ஆண் இகுவானா பெண்ணைவிட உருவில் பெரியது. ஆண், பெண் ஆகிய இரண்டிலும் தொங்கு தாடையமைப்பும் (dewlap) தொடைத்துளைகளும் (femoral pores) உள்ளன. முதிர்விலங்குகள் தாவரப் பகுதிகளையும், சிறிய இகுவானாக்கள் சிறு விலங்கு களையும் உணவாகக் கொள்கின் றன. சூழ்நிலை குளிர்ச்சியடையும்போது மரத்தைவிட்டுத் தரைக்கு இறங்கிலந்து மரத்துண்டுகளுக்கடியிலும் பொந்து களிலும் பதுங்கிக்கொள்ளும். இடையூறு செய்யும் எதிரிகளை வாலைச்சுழற்றி வீசி வலுவாகத் தாக்கும். பெண் இகுவானா மணலைத்தோண்டிக் குழிகளில் இகுவானா 889 முட்டையிடும். இது ஒரு முறையில் 20-70 முட்டை களை இட்டு அவற்றை மணலைக்கொண்டு மூடி விடும். சீரான வெப்பநிலையில் 2 மாதங்களுக்குப் பின் முட்டைகள் பொரிந்து சிறு இகுவானாக்கள் வெளிவருகின்றன. பச்சை இகுவானா ஏறக்குறைய 10 ஆண்டுகள் உயிர்வாழும். கொலம்பியாவில், வறண்ட பகுதிகளில் வாழும் இகுவானாக்களுக்கு ஆண்டின் வறட்சியான பருவங்களில் போதிய தாவர உணவு கிடைப்பதில்லை. ஆகையால் முதிர்ந்த இகுவானாக் கள் எடை குறைந்து மெலிந்துவிடுகின்றன. இளைய இகுவானாக்கள் பூச்சிகளைப் பிடித்து உண்கின்றன. மழைக்காலத்தில் முதிர்ந்த இகுவானாக்கள் தாவர உணவை உண்டு, கீழ்த்தாடைப் பகுதியிலும் கழுத் துப் பகுதியிலும் கொழுப்பைச் சேமித்து வைத்து, வறண்ட பருவங்களில் பயன்படுத்திக்கொள்கின்றன. அமெரிக்கப் பகுதிகளில் பச்சை இகுவானாக்கள் மிகு தியாக வேட்டையாடப்படுகின்றன. மேற்கிந்திய இகுவானா (West Indian Iguana, Iguana delicatissi- ma) கரீபியன் தீவுகளில் காணப்படுகிறது. பச்சை இகுவானா, அண்மையில் மேற்கிந்தியத் தீவுகளுக்குப் பரவி அங்கு ஏற்கனவே வாழ்ந்துவரும் சைக்லுரா (cyclura) பொதுவினத்தைச் சேர்ந்த இகு வானாக்களைவிட மிகுதியாகப் பெருகிவிட்டன். இந்தப் பொதுவினத்தைச் சேர்ந்த இகுவானாக்கள் பெரிய, வலுவான இருபக்கமும் தட்டையான உடலையுடையவை. படம் 1. பச்சை இகுவானா அ.க. 3-44 படம் 2. காண்டாமிருக இகுவானா காண்டாமிருக இகுவானா (rhinoceros iguana, eyclura cornuta). ஹெய்ட்டியின் (haiti) வறண்ட இடங்களில் புதர்களிலும் சப்பாத்திக் கள்ளிகளுக் கிடையிலும் வாழ்கிறது. இதன் தலையின் முன்புறத் தில் 3 கொம்பு போன்ற செதில் நீட்சிகள் உள்ளன. ஃபிஜி, ட்டோங்கோ ஆகிய தீவுகளில் காணப் படும் ஃபிஜித் தீவு இகுவானா (fijian iguana, brachy-