உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/714

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

690 இகுவானோடான்‌

690 இகுவானோடான் opnus fasciatus), 90 செ.மீ. நீளமானது. பெண் இகுவானா பச்சை நிறமானது; ஆணின் உடலில் வெளிர் நிறப்பட்டைகளும் கழுத்துப் பகுதியில் வெளிறிய புள்ளிகளும் காணப்படுகின்றன. இந்த இனமும் தாவரவுண்ணியே. இந்தத் தீவுகளில் மரங் கள் அழிக்கப்பட்டு வருவதால் இவற்றின் எண் ணிக்கை குறைந்து வருகிறது, அமெரிக்கப் பகுதிகளில் ட்டீனோசாரியா (cteno- sauria) பொதுவினத்தைச் சேர்ந்த ஏறக்குறைய 10 இனக் கருப்பு இகுவானாக்கள் காணப்படுகின்றன. வை 1 மீட்டர் நீளம்வரை வளரக்கூடியவை. இள மையில் பச்சை நிறமாகவும், முழு வளர்ச்சியடைந்த பின் கருநிறத்துடனும் காணப்படுகின்றன. இவை பக்கங்களில் தட்டையான உடலுடையவை. முட் செதில் வளையங்களைக் கொண்ட வால், வலுவான தற்காப்புக் கருவியாகப் பயன்படுகிறது. இவை தாவ ரங்களையும் விலங்குகளையும் உணவாகக் கொள்கின்றன. சிறு பாலைவன குவானா (desert iguana, diplo- Saurus donsalis) தென்மேற்கு அமெரிக்காவின் வறண்ட பகுதிகளில் மணல்சார்ந்த, கற்கள் சார்ந்த, களிமண்ணுள்ள டங்களில் காணப்படுகிறது. இதன் உருளை வடிவ, வெளிர்சாம்பல் நிற உடலில் பழுப்பு நிறக் குறுக்குக் கோடுகள் உள்ளன. இடை யூறு நேரும்போது பேரோசை எழுப்பிக்கொண்டு மணிக்கு 25 கி.மீ. வேகத்தில் ஓடும். தரையில் பள் ளம் தோண்டியோ, தரை அணில்கள் தோண்டும் பள்ளத்திலோ பதுங்கிக்கொள்ளும். சக்வாலா (chuckwallia, sauronalus ater), தென் மேற்கு அமெரிக்காவில் பரவியுள்ளது. இதன் அகன்ற, தட்டையான உடலின் கழுத்துப் பகுதியிலிருந்து வாலின் அடிப்பகுதி வரை இரு பக்கங்களிலும் தோல் மடிப்புகள் உள்ளன. இளைய, பெண் இகுவானாக் கள் அடர்ந்து நிறக் குறுக்குப் பட்டைகளுடன் கூடிய மஞ்சள் அல்லது பசுமையோடு கூடிய சாம்பல்நிற உட லுடையவை. ஆண் சக்வாலாவின் உடலின் முன்பகு. தியும் கால்களும் கறுப்பாகவும் உடலின் நடுப்பகுதி வெளிர்சாம்பல் அல்லது சிவப்பு நிறமாகவும், வால் வெளிர்மஞ்சள் நிறமாகவும் உள்ளது. இடையூறு நேரும்போது பாறை இடுக்குகளில் நுழைந்து உடலை நீட்டிப் பாறையோடு பிரித்தெடுக்க முடியாதவாறு அழுத்தமாக ஒட்டிக்கொள்கிறது. காலப்பேகோஸ் தீவுகளில் 2 பெரிய இகுவானா இனங்கள் காணப்படுகின்றன. ஒன்று நிலவாழ் இகு வானா (land iguana, conolophus Subcristatus), மற் றொன்று கடல் இகுவானா (marine iguana, ambly- rhynchus cristatus) நில இகுவானா, 1 மீ. நீளமுள் ளது; திண்மையான உருளைவடிவ, மஞ்சள் அல்லது பழுப்பு நிறமான உடலுடையது. 1835 ஆம் ஆண்டு டார்வின் காலப்பேகோஸ் தீவுகளுக்கு வந்தபோது அங்கு கூட்டங்கூட்டமாகக் காணப்பட்ட இந்த நில இகுவானாக்கள் தற்போது பல தீவுகளில் அற்றுப் போய்விட்டன. பேரிங்கட்டன் தீவில் (Barrington island) அண்மைக்காலமாக முதிர்ந்த இகுவானாக்கள் மட்டுமே காணப்படுகின்றன. இளம் இகுவானாக் களைப் பருந்துகள் விடுகின்றன. வேட்டையாடி இவற்றின் அழிவுக்கு மறைவிடங்கள் அழிக்கப்பட் டதே காரணமாகும். படம் 3. கடல் இகுவாளா கடல் இகுவானா, பாறைகளில் படிந்துள்ள பாசி களையும் தாவரங்களையும் உண்டு வாழ்கிறது. இதனால் உடலினுள் செல்லும் அதிகப்படியான உப்பு நாசித் துளைகளிலுள்ள சுரப்பிகள் வழியாக வெளியேற்றப்படுகின்றது. நீரில் கால்களைப் பயன் படுத்தாமல் உடலையும் வாலையும் பாம்புபோல் வளைத்து, எளிதாகவும் விரைவாகவும் நீந்திச்செல் லும். கடல் இகுவானா இனத்தைச் சேர்ந்த 7 உள்ளி னங்கள் வெவ்வேறு தீவுகளில் வாழ்கின்றன. மனிதர் களின் குடியிருப்புகளின் அருகில் கடல் இகுவானாக் களின் எண்ணிக்கை மிகவேகமாகக் குறைந்து வருகிறது. கௌ.ஜெ. இகுவானோடான் இடைஉயிர் ஊழிக் காலத்தில் (mesozoic era) வாழ்ந்து அற்றுப்போன பெரிய உருவமுள்ள டைனோசார்கள் (dinosaurs ) எனப்படும் பெரும் பல்லி இனங்களுள் இகுவானோடானும் (iguanodon) ஒன்றாகும். இதன் புதைபடிவங்கள் (fossils) பின் ஜூராசிக் (late jurassic) மற்றும் முன் கிரெட்டே ஷியஸ் (early cretaceous) காலப்படிவுப் பாறைகளில் ஐரோப்பா, வட ஆப்பிரிக்கா, மற்றும் கிழக்கு ஆசியப் பகுதிகளில் கிடைக்கின்றன. இதன் உடல் 10 மீ. நீள மிருந்தது; தலை தரையிலிருந்து 4 மீ. உயரத்தில்