உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/715

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இசைக்கருவிகள்‌ 691

இகுவானோடான் இருந்தது. இருகால் நடைப் பழக்கம் (bipedality) பெற்றிருந்த இவ்விலங்கின் பின்னங்கால்கள் நன்கு வளர்ச்சியுற்றிருந்தன. நீண்ட உறுதியான வாலைத் தரையில் ஊன்றிக்கொள்ளவும் உடலைத் தரையில் நிலைப்படுத்தவும் இவை துணையாக அமைந்தி ருந்தன. முன்னங்கால்களின் கூர்மையான பெருவிரல் மற்ற விரல்களுக்குச் செங்குத்தாக அமைந்திருந்தது. இகுவானோடான் ஒரு தாவரவுண்ணி; பற்களின் விளிம்புகள் கூர்மையாக இருந்தன. முதன்முதல் கண்டுபிடிக்கப்பட்டு நன்கு ஆய்வு செய்யப்பட்ட டைனோசார்களில் இகுலானோடானும் ஒன்று. இவற்றின் புதைபடிவங்கள் சில, ஒரே இடத்தில் கூட்டமாகக் கிடைக்கின்ற நிலை, இவை மந்தை யாக வாழ்ந்ததைக் காட்டுகிறது. இவை நீர்நிலை களையடுத்து வாழ்ந்திருக்கலாம்; இடையூறு ஏற்படும் நேரங்களில் ஓடைகளிலோ ஏரிகளிலோ பாய்ந்து சென்று தப்பித்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இசைக்கருவிகள் கௌ. ஜெ. இசையை உலகப் பொதுமொழி என்று கூறலாம். இசையொலியைஅதன் இனிமையினாலும் தனிப்பட்ட அளவீட்டு முறையினாலும் மற்ற ஒலியிலிருத்து எளி தாகப் பிரித்து அறியலாம். இசையொலியானது ஒரே சீரான தனியலை உள்ள சுரமுடையதாகவோ பல அதிர் வெண்கள் கலந்த இசையலைகள் உள்ள சுரக் கலவையாகவோ அமையும். இசையானது அன்றாட வாழ்க்கையில் நமக்குப் பல விதங்களில் இன்றியமை யாதது. இசைச் சுரங்களின் பகுப்பாய்வில் சுருதி (tone), அ. க. 3-44அ இசைக்கருவிகள் 691 செறிவு (pitcher), சுரப்பண் பு(timber) ஆகிய மூன்றும் முக்கிய பங்கு வகிக்கின்றன. சுருதி சுரத்தின் கீச்சொலி யைக் குறிக்கிறது. சுருதியானது சுரத்தின்(note) அதிர் வெண்களைப் பொறுத்து அமையும். செறிவு அல்லது உரப்பு, சுரத்தின் சுருதிப் பருமனைப் பொறுத்து அமைகிறது. மேலும் செறிவு என்பது இசைக் கருவியின் அதிர்வு வீச்சைப் பொறுத்தது. இசையொலியானது ஒரே சீரான சுருதியிலும் செறிவிலும் இருப்பின், சுரப் பண்பின் மூலம் சுரங்களைப் பிரித்து அறியலாம். மேலும் சுரப்பண்பானது இசைக் கருவியைப் பொறுத் தும் அதைக் கையாளக்கூடிய விதத்தைப் பொறுத்தும் ஏற்படுகின்ற அதிர்வைப் பொறுத்தும் மாறுபடும். ஒலியில் உரப்பெல்லாம் பெரும்பாலும் கருதியையே சாரும். பலவகைப் பிரிவுகள். சரியான முறையில், குறிப்பிட்ட சுரவரிசைகளில் ஒலியினை எழுப்பிக் கேட்பவருக்கு இனிமையை அளிக்கும் ஒலிக்கருவிகள் சைக்கருவிகள் (musical instruments) எனப்படும் இசைக்கருவியின் முக்கிய பகுதிகளையும், அதன் பிரிவுகளையும் இயற்பியல் கண்ணோட்டத்தில் வரை யறை செய்யலாம். ஒவ்வொரு இசைக்கருவியின் முக்கிய பகுதியா வன், இயக்கி (இது ஒலியை எழுப்புகிறது) அதிரும் பகுதி, கையாளப்படும் எந்திர நுட்பம் (இதனால் வேண்டிய இசைச் சுரங்களை வேண்டும்- போது ஏற்படுத்தலாம்.) என்பனவாகும். இசைக்கருவிகளைப் பிரித்தறிய ஒருசில தனிப் பண்புகள் உள்ளன. அவை, கருவி எழுப்பக்கூடிய அதிர்வெண்களின் நெருக்கம் அல்லது கருவியின் வரம்பு, கருவியின் சுர வரிசை, கருவி எழுப்பும் சுரங்களின் நயம் சுரங்களின் தொடக்கத்திலும், முடி விலும் எழும் இரைச்சல்கள், தேவைக்கேற்பச் சுரம் நீடிக்கும் காலத்தில் உண்டாகும் தவிர்க்க முடியாத செறிவு மாற்றங்கள், சுரங்களின் பண்புகள், ஒரு சுரத்தை அல்லது ஒரே சமயத்தில் பல சுரங்களை எழுப்புவதற்கான கருவியின் திறமை முதலிய னவாகும். சொல்லப்பட்ட மேலே தனிப்பண்புகளைக் கொண்டு இசைக்கருவிகளை மூன்று வகையாகப் பிரிக்கலாம். அவை நரம்பு அல்லது கம்பி இசைக் கருவிகள் (stringed instruments }, காற்று இசைக் கருவிகள் (wind instruments), தோல் இசைக்கருவி கள் (percussion instruments) என்பனவாகும். நரம்பு அல்லது கம்பி இசைக்கருவிகள். நரம்பு இசைக்கருவிகளை இயக்கும் முறையைக் கொண்டு, அதனை மூன்று வகையாகப் பிரிக்கலாம். அவை மீட்டப்படும் கம்பி இசைக்கருவிகள் (plucked string instruments), வில்லதிர்வுக் இசைக்கருவி கள் (bowed string instruments), தட்டப்படும் சும்பி