698 இசைவற்ற உதறல்
698 இசைவற்ற உதறல் F = F. Cos(2 ft) எனக் குறிப்பிடலாம். இதனால் விளையும் இயக்கம் f என்ற அதிர்வெண் தவிரவும் அதன் மேற்சுரம் (overtones) மற்றும் அதன் துணைச் சுரங்களின் (sub harmonic) அதிர் வெண்ணாலும் ஏற்படக் கூடியதாக இருக்கும். பொதுவாக அலைவியற்றிகள் குறைந்த அலை வீச்சுக்களில் சீரிசை இயக்கத்துடன் கூடிய இசைவுறு அலைவியற்றிகளாக (harmonic oscillator) இருக் கின்றன. அலை வீச்சு வரம்பு மீறும்போது, பெரும் பாலான அலைவிகள் இசைவற்ற அலைவியற்றிகளாகி விடுகின்றன. நிலையாற்றல் இடப்பெயர்ச்சி நிலையாற்றல் இடப்பெயர்ச்சி தீண்மப் பொருள்களின் வெப்பஞ்சார்ந்த பெருக் கம் நேரியலற்ற அணுவிடை விசையினால் விளக்கப் படுகின்றது. பொதுவாகப் படிகத் தளத்தில் அணு வின் அதிர்வுகள், தாழ்ந்த வெப்பநிலைகளில் இசைவுறு அலைவியற்றிகளாலான அலைவுகளாக உள்ளன. வெப்ப நிலை அதிகமாகும்போது, வீச்சும் அதிகரித்து, இசைவற்ற அலைவுகளை ஏற்படுத்தும் அமைப்பாகிவிடுகின்றன. இசைவுறு அலைவியற்றியில், அமைப்பின் நிலையாற்றல் இடப்பெயர்ச்சியைச் சார்ந்து ஒரு பரவளையச் சார்பாக அமைந்திருக்கின்றது. மேலும் அமைப்பின் இறுதிச் சமநிலை அலைவீச்சு அதிகரிக்கும் போது வெப்பநிலை அல்லது ஆற்றல் ஆகியவற்றைப் பொறுத்து அமைந்திருப்பதில்லை (படம் 1 அ) இசையற்ற அலைவியல், அமைப்பின் நிலையாற்றல் ஆயம்(coordinate) சார்ந்த சீரற்ற காரணியாக இருக் கின்றது. அமைப்பின் இறுதிச் சமநிலை, அலைவீச்சு அதிகரிக்கும்போது வெப்பநிலை அல்லது ஆற்றலைச் சார்ந்திருக்கின்றது (படம் ) ஆ) மெ. மெய்யப்பன் இசைவற்ற உதறல் பொதுவாக இசைவற்ற உதறலை (fibrillation) இயக்குதசைகளிலும், இயங்கு தசைகளிலும் காண லாம். இயக்கு தசைகளிலிருந்து எழும் இசை வற்ற உதறல் நமது கண்களுக்குப் புலப்ப டாது, இயங்கு தசைகளான இதயத் தசைகளில் இருந்து எழும் உதறல் பல விளைவுகளைத் தரும். இதய மேலறைகளான வல், ட ஏட்ரியாக்களிலி ருந்தும் (atria), இதயக் கீழறைகளான வெண்டிரிக்கிள் களிலிருந்தும் (ventricle) இசைவற்ற உதறலைக் காண லாம். ஏட்ரியாவின் தாறுமாறான உதறல், பல சிக் கல்களையும், வெண்டிரிக்கிளிலிருந்து வரும் தாறு மாறான உதறல் மரணத்தையும் விளைவிக்கும். இதய மேலறைகளின் இசைவற்ற உதறல். இதய மின் தூண்டல்கள் (electrical stimuli) பல மித வேகமாக, சீரற்ற முறையில் இதய மேல்றைகளைத் தாக்கும். அப்பொழுது இதய மேலறைகள் முறை யாகச் சுருங்கி விரிவடைய முடியா. மேலும், மிக வேக மின் தூண்டல்கள் இதயக் கீழறைகளையும் தாக்கும். இதய மேலறைகளிலிருந்து எழும் பல நூற்றுக்கணக்கான மின் தூண்டல்கள், அடுத் துள்ள ஏ.வி. கணுவை (A. V. Node) வந்தடையும். அவற்றில் பல அலைகள் ஏ. வி. கணுவினால் தடுக்கப் பட்டுச் சுமார் ஒரு நூறு மின் அலைகள் மட்டும் இதயக் கீழறையான வெண்டிரிக்கிளை அடையும். இதய மேலறைகளிரண்டும் ஒரு நிமிடத்திற்குச் சுமார் 350 முதல் 600 வரை தாறுமாறாகச் சுருங்கி விரி வடையும். ஆனால் வெண்டிரிக்கிள்களை வந்தடை வது சுமார் 100 முதல் 150 வரைதான். அங்கு வந்து சேரும் பல மின் தூண்டல்கள் ஏ.வி. கணுவினால் தடுக்கப்பட்டு ஒரு சில மட்டும் வெண்டிரிக்கிளை அடைகின்றன. இதை மறைவான வெளிப்பாடு (con cealed conduction) எனக் குறிப்பிடுவார்கள். இதனால் இட வெண்டிரிக்கிளைச் சார்ந்திருக்கும் கைந்நாடித் துடிப்பு (radial pulse) வேகமாகவும், சீரற்ற ஒழுங் கிலாத (irregulary irregular) துடிப்பாகவும் காணப் படும். வகைகள். உதறல், அவ்வப்போது தோன்றித் தோன்றி மறையும் உதறல் (paroxysmal fibrillation), நிலையான உதறல் (persistent fibrillation), தனியான (lone) உதறல் என மூன்று வகைப்படும். அவ்வப்பொழுது தோன்றித் தோன்றி மறையும் உதறல். இவ்வகையில் உதறல் திடீரென்று தோன்றிச் சில நிமிடங்களோ, சில நாள்களோ இருந்துவிட்டுத் தானாகவே மறைந்து விடும். இது தோன்றும் சமயத் தில் பார்த்தால்தான் மருத்துவர்களுக்குத் தெரியும். மற்ற நேரத்தில் பார்த்தால் இந்நோய் இருப்பது தெரிய வாராது. எந்தவித இதயநோய் இல்லாதவர்களிடமும்