உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/723

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இசைவற்ற உதறல்‌ 699

இவ்வாறான நிலையை அவ்வப்போது காணலாம். நிமோனியா (pneumonia) காய்ச்சல் கண்டவர்கள், வாத இதய நோய் உள்ளவர்கள் (rheumatic heart disease), கடும் இதயத்தசையிரத்தநசிவுறலால் பாதிக் கப்பட்டவர்கள் (acute myocardial infarction) ஆகி யோரிடம் உணர்விழக்கச் செய்யும் மருந்துகளா லும் இதய அறுவை சிகிச்சை செய்யும்போதும் பொட்டாசியம் சத்துக் குறைவினாலும் (potassium deficiency) டிஜிட்டாலிஸ் நச்சு அளவை எட்டிய நிலையாலும் நச்சு அளவு எட்டும் மருந்துகளை உட் கொள்வதாலும் மறக்கும் தன்னை நிலையில் சாராயம் குடிப்பதாலும் (alcohol intoxication) காஃபின் (caffine), ஆம்ஃபிட்டமின் (amphetamine) தைராக்சின் (thyroxine) முதலிய மருந்துகளை பயன்படுத்துவதாலும் இத்தகைய இதய உதறல் உண் டாகும். நிலையான மேலறை இதய உதறல். வாத இதய நோய், ஈரிதழ் வால்வு இறுக்கம் (mitral stenosis), வாத இதய அழற்சி (rheumatic carditis) இதயத் தசைகளின் நோய்கள் (myocardial disease ) வெளிப் புற இதய இறுக்க அழற்சி (constrictive pericarditis), இதயத்தமனி இதய நோய் (coronary artery heart disease), மிகை இரத்த அழுத்தம் (thypertension), தைராய்டின் மிகைஆக்கம் (thyrotoxicosis), ஏட்ரியத் தடுப்புச்சுவர்க் குறைபாடு (atrial septal defect) ஆகிய நோய்களின் அடிப்படையில் நிலையான உத றலைக் காணலாம். தனியான இதய உதறல். இது எந்தவித அடிப் படை இதய நோயும் இல்லாத முதுமை அடைந்தவர் களிடம் காணப்படும். அவர்களிடம் இதய மின் அலை முடிச்சு நோய்த்தொகை(sick sinus syndrome) அதிகம் காணப்படும். இதில் இதயத்துடிப்பு சில சமயம் மிகு வேகமாகவும் (tachycardia), சில சமயம் மிகவும் மெதுவாகவும் (bradycardia) இருக்கும். இதற்குக் காரணம் இதயத் துடிப்புக்கான இதய மின் அலைமுடிச்சு என்ற புரைக்கணு (sinus node) பழுதடைந்து பல அலைகளை உற்பத்தி செய்து கீழறைகளுக்கு அனுப்புவதேயாகும். இதய உதறல் சிற்சில சமயங்களில் வேகமாகவும், சில சமயங்களில் குறைவாகவும் காணப்படும். இதில் மிக வேகமாகத் துடிப்பிருக்கும்போது அது உதறலாக மாற வாய்ப் புண்டு. விளைவுகள். குறைந்த அளவு உதறலாக (slow fbrilllation) இருந்தால் அதன் விளைவுகள் அதிகம் இல்லை. அதிக அளவு இதயத் துடிப்பின்போது மார்பு படபடப்பாகவும், அழுத்துவது போலும் இருக்கும். இரத்த அழுத்தமும் இதய இரத்த வெளிப் பாடும் (cardial output) குறைந்தால் இதயத்தமனிக்கு இரத்தம் குறைவாகச் செல்லும். அதனால் மார்பு வலி ஏற்படும்; சக்தியின்மை, மூச்சு வாங்குதல், சைவற்ற உதறல் 699 இருமல் இம்மூன்றும் இதய அயர்வால் (cardiac fail- ure) ஏற்படும். இதயப்பழுது ஏற்படும்; நுரையீரல் வீக்கம் (pulmonary edema) ஏற்பட்டுப் பல விளைவு களைத் தரும். ஈரிதழ் வால்வுக் குறுக்கம் நோய் உள்ளவர் களுக்குக் கீழறையில் இரத்தம் வந்து சேரும் காலம் அதிகமாக இருக்கும். கீழறைகளின் இசைவற்ற உதறல் அதிகமாக இருந்தால், நுரையீரல் வீக்கம் ஏற்பட்டுப் பல விளைவுகளைத் தரும். இரத்த உறைவுகளுடன் கூடிய உள்ளெரிகை (thro- mboembolism). ஏரியாவில் ஏற்படும் இசைவற்ற உதறலினால் அங்கு வரும் இரத்தம் சிறிது நேரம் தங்கி உறைந்துவிடும். அதனால் சிறு இரத்தக் சுட்டிகள் தோன்றும். இதய இயக்கத்தினால், சிறுஇரத்தக் கட்டி கள் மூளைக்குச் செல்லும் தமனி வழியாகச் சென்று சில பாகங்களை அடைந்து செயலிழக்கச் செய்து விடும். சிறிது நேர மயக்க நிலை (syncope), பக்க வாதம், பேச்சின்மை ஆகிய விளைவுகள் இதனால் உண்டாகும். அறிகுறிகள் - கைந்நாடித் துடிப்பு. இதில் ஒழுங்கி லாச் சீரற்ற துடிப்பைக் காணலாம். இதயக் கீழறை யின் துடிப்பு ஒரு நிமிடத்திற்குச் சுமார் 100முதல்200 வரை இருக்கும். சாதாரணமாக கைந்நாடி - நேரடி இதயத்துடிப்பு அளவு குறை தல் (pulse apex deficit). இதயத் துடிப்பும் கைந்நாடித் துடிப்பும் ஒன்றாக இருக்க வேண்டும். ஆனால் இதில் இதயத் துடிப்பு அதிகமாக வும் அதே நேரத்தில் கைந்நாடித் துடிப்பு 10 முதல் 20 வரை குறைவாகவும் இருக்கும். ஜுகுலர் சிரை நாடி (jugular venous pulse). கழுத் தின் வலப் பக்கமுள்ளமிக முக்கியமான சிரைகளில் ஒன்று ஜுகுலர் சிரை. இதன் நாடியில் எ.சி.வி. (A.C.V.) என்ற அலைகள் காணப்படும். இந்த அசை வற்ற துடிப்பில் 'எ அலைகளைக் காணமுடியாது. படம் 1. இதய மேலறைகளின் தாறுமாறான உதறல்