உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/724

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

700 இசைவற்ற உதறல்‌

700 இசைவற்ற உதறல் இதய ஒலிகள் (heart sounds). இதயத்தின் முத லாவது ஒலி (first heart sound) மாறுபட்ட ஓசையு டன் கேட்கும். இரண்டாம் ஒலி ( second sound ) சில சமயம் கேட்காமல் இருக்கும். இதற்குக் காரணம் இதய உதறலினால் இதயக் கீழறைகள் மிகவும் சோர் வுற்ற நிலையிலிருப்பதேயாகும். இந்நிலையில் இரண் டாம் ஒலியின் அடிப்படையான அரை நிலா வடிவ வால்வுகள் திறக்க முடியாமல் போய்விடும். ஆய்வுக்கூடச் சோதனைகள். இதய மின் வரை படம் (electro cardiograph) மூலம் கண்டுபிடிக்க லாம். ஒரு நிமிட நேரத்திற்கு 350 முதல் 600 வரை துடிப்பு இருக்கும். விட (V,) என்ற இடத்தில் தாறு மாறான உதறல் அலைகள் காணலாம். எப்பொழுது மிருக்கும் 'பி' அலைகள் (P waves) இரா. இதய எதிரொளி வரைவு. இதில் மேலறையான ஏட்ரியா மிகவும் விரிந்து காணப்படும். அதனு டைய விட்ட அளவு 4.5 செ.மீ. தாண்டிவிட்டால் ஒழுங்கற்ற உதறலை ஒழுங்கான துடிப்பாக (Sinus rhythm) மாற்ற முடியாது. மருந்துகளுக்கும் கட்டுப் படாது. சிகிச்சை முறைகள். முதலாவதாக இசைவற்ற உதறலுக்கு உண்டான காரணங்களை அறிந்து சிகிச்சை செய்ய வேண்டும். உடலின் பொது நிலைமை நன்றாக இருந்தால், மின் சிகிச்சை முறை யான கார்டியோவெர்ஷன் (electrical cardioversion) சாலச் சிறந்தது. உடலின் பொது நிலைமை நன்றாக இராவிட் டால் முதல் வேலையாக வெண்டிரிக்கிளின் அதிக அளவுத் துடிப்பைக் குறைக்க வேண்டும். டிஜிடா லிஸ் (digitalis), கால்சியம் சேனல் எதிர்ப்பிகள் (calcium channel antagonists), பீடா அட்ரினர்ஜிக் தடுப்பிகள் (beta adrenergic blockers) ஆகிய மருந்து களை உபயோகிக்கலாம். இரண்டாவதாக ஒழுங்கற்ற உதறலை ஒழுங்கான துடிப்பாக மாற்றவேண்டும். குனினிடின் (quinidine), புரோக்கைனமைடு (procai- namide), டைசோபைரமைடு (disopyramide) ஆகிய மருந்துகளை உபயோகிக்கலாம். இம்மருந்துகள் பயன் தாராவிட்டால், அடுத்து மின்சாரக் கார்டியோவர்ஷன் முறையைக் கையாள லாம். இம்முறையில் மின்சக்தி 100 வ.செ. வரை கொடுக்கலாம். இம்மின்சாரச் சிகிச்சைக்குப் பின்போ முன்போ சுமார் இரண்டு வார காலத்திற்கு இரத்த உறைவைத் தடுக்கும் (anti coagulants) மருந்துகளை அவசியம் கொடுக்க வேண்டும். பக்க விளைவுகளான இரத்தப் படிவங்களுடன் கூடிய உள்ளெரிகையை இம் மருந்துகள் வாராமல் தடுக்கும். ஒழுங்கான துடிப்பு வந்தவுடன் குனினிடின் முதலிய மருந்துகள் மூலம் இசைவற்ற உதறல் வாராமல் கொள்ளலாம். பார்த்துக் மின் சிகிச்சையான கார்டியோவர்ஷன் பலன ளிக்காவிட்டால், டிஜிடாலிஸ், வேரபமில் (verapamil) பீட்டா தடுப்பு (beta blockers) மருந்துகள் மூலம் சிகிச்சை செய்யவேண்டும். மேலும் அவர்கள் இரத் தம் உறையாமல் செய்யும் மருந்துகளையும் உபயோ கித்து வந்தால் பக்க விளைவுகள் பல நிறுத்தப்படும். இதயக் கீழ்றைகளில் இசைவற்ற உதறல். உடலின் பல பாகங்களுக்குச் செல்லும் இரத்த ஓட்டம், இத யக் கீழறைகளின் சீரான, ஒழுங்கான துடிப்பைச் சார்ந்திருக்கிறது. இசைவற்ற உதறல் ஏற்பட்டால் இரத்த ஓட்டம் திடீரென்று தடைப்பட்டுப்போகும். இதய உதறல் ஒரு சில நொடிகளோ, நிமிடங்களோ காணப்படும். அந்தக் குறித்த நேரத்தில் உதறலைக் கண்டுபிடித்துச் சிகிச்சை அளிக்காவிட்டால், திடீர் மரணம் ஏற்படும். இதற்குக் காரணம் இதயக் கீழ றைகளின் நின்றுவிட்ட நிலையும் (asystale) அதனால் இரத்த ஓட்டம் திடீரென்று தடைப்பட்டுப் பல பாகங்களுக்கு இரத்த ஓட்டம் இல்லாமையும் ஆகும். -> காரணங்கள். ஸ்டோக்ஸ் ஆடம் ஒத்திசைவு (Stokes - Adam syndrome); மாரடைப்பு நோய் (myo- cardial infarction); ஈரிதழ் வால்வு வெளித் தள்ளு தல் (mitral valve prolapse); மின்சாரத் தாக்குதலி னால் O-T நீட்டிப்பு ஏற்படுதல்; பாரம்பரிய நிலை (hereditary Q-T prolongation time); உடல் வெப்ப நிலை குறைதல்; பினோதயசின் மருந்து நச்சு அளவு எட்டிய நிலை (pheno thiazine toxicity); குனினிடின் மருந்தினால் ஏற்படும் தற்காலிக மயக்க நிலை (quinidine syncope) ஆகியன காரணங்களா கும். அறிகுறிகள். இதயக் கீழறைகளில் தாறுமாறான உதறல் ஏற்பட்டவுடன், திடீரென்று மயக்கம் வந்து சுய நினைவில்லாத நிலை ஏற்படும் (sudden loss of consciousnees); உடல் பூராவும் நீலம் பூத்துவிடும் (central cyanosis); கைந்நாடித்துடிப்பு, கழுத்து நாடித் துடிப்பு,தொடை நாடித்துடிப்பு, (femoral pulse) ஆகியவற்றின்மூலம் வெண்டிரிக்கிளின் தாறுமாறான உதறலை அறிய முடியும். இந்தத் தாறுமாறான உதறலின் இறுதிக்கட்ட விளைவு இதயம் நின்று விடுதலும் (cardiac arrest) மரணமும் ஆகும். சிகிச்சை முறைகள். நின்ற இதயத்தைத் திரும்ப இயங்கச் செய்யவும், மிக முக்கியமான மூளை, இத யம், தசைகள் இவற்றிற்கு உடனடியாக ஆக்சிஜன் கலந்த இரத்த ஓட்டத்தைத் திரும்பப் பெறவும் சிகிச்சை செய்யவேண்டும். முதலில் நோயாளியின் இரு கால்களையும 90% உயரே தூக்கி வைக்க வேண்டும்; இறுக்கமான உடைகளைக் களைய வேண்டும்; ஆக்சிஜன் செலுத்த வேண்டும்; இடப் பக்க மார்புப் புறத்தில் கைவிரல் களை மடக்கிக் கொண்டு வேகமாக ஒரு குத்து விட