உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/751

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடப்பெயர்ச்சியும்‌ இயக்க உறுப்புகளும்‌ 727

எனவே, இடப்பெயர்ச்சி மின்னோட்டம் என்ற கருத்து இங்கு பொருத்தமாகவே அமைகிறது. மேக்சுவெல் ஈத்தர் என்ற ஊடகம் மின் முனைமை (polarity) அடைவதாகக் கருதியதால் வெற்றிடத்துக்கும் இக் கருத்தைப் பொருத்திப் பயன் படுத்தினார். காண்க, ஈத்தர் கருதுகோள்; மேக்சு வெல் சமன்பாடுகள். i என்ற மின்னோட்டத்தைக் காந்தப்புலம் H இன் சுரிப்பாக (curl) வரையறுத்தால், √ H. ds = Is dD (i >. nds (1) dt dD என்ற சமன்பாடு கிடைக்கும். இங்கு என்ற dt கோவையை S என்ற பரப்புக்குச் செங்குத்தாக உள்ள n என்ற ஒற்றைச் செங்குத்துத் திசையினால் புள் ளிப் பெருக்கல் (dot product) செய்ய, இடப்பெயர்ச்சி மின்னோட்டம் கிடைக்கும். இக்கருத்து அருகிய மின்னோட்டம் பாயும் மின் காப்பிகளுக்கும் வெற்றிடத்துக்கும் மிகவும் பொருந் தும். ஆனால் கடத்திகளில் இம்மின்னோட்டம் மிக வும் தள்ளத்தக்க அளவுடையதாக இருக்கும். காண்சு, ஆம்பியர் விதி.வெற்றிடத்திலோ மின்காப்பியிலோ இடப்பெயர்ச்சி மின்னோட்டக் கோவை தேவைப் படுவதைக் கீழ்வருமாறு நிறுவலாம். ஒரு மாறுமின் னோட்டச் சுற்று வழியில் மின்னூட்டப்படும் இணை நிலைத்தட்டுகளுடைய மின்கொண்மியைக் கருது வோம். அதிலுள்ள இரண்டு பரப்புகளையும் இணைக் கும் என்ற மூடிய வளைவு மின்னோட்டமுடைய கம்பி களில் ஒன்றைச் சூழ்ந்து அமையும். அப்போது அது கொண்மி இடைவெளியைக் கடந்து மின்னோட்டக் கம்பி வெட்டும் S, என்ற பரப்பையும் கடக்கும். காஸ் (gauss) மின்பெருக்குத் தோற்றத்தின்படி, கம்பிக்கும் தட்டுக்கும் இடையே அமையும் Q என்ற சமன்பாடு (2) ஆல் கீழ்க்காணும் மின்னூட்டம், தரப்படும். Q = √s, D. n d s − S1 - Ss. D. n ds (2) ஒற்றைச் செங்குத்துத் திசையன் 1, மின்னோட் டத்தின் திசையில் அமையும். இது S, S, என்ற இரு பரப்புகளுக்குப் பொருந்தும். I என்ற மின்னோட்டம் S u ds, dQ dt என்பதற்குச் சமமாகும். இதிலி ருந்து கீழ்க்காணும் சமன்பாடு (3) ஐப் பெறலாம். fs. dD dt nds = fs, (i dD nds 3. dt ds (3) இடப்பெயர்ச்சியும் இயக்க உறுப்புகளும் 727 எனவே,s என்ற பரப்பால் சூழப்பட்ட s என்ற பரப்புக்கும் சமன்பாடு (1) சரியாக அமைய இடப் பெயர்ச்சி மின்னோட்டத்தை மின்னோட்ட அடர்த் தியுடன் உள்ளிணைக்க வேண்டிய தேவை ஏற்படு கிறது. உலோ.செ. இடப்பெயர்ச்சியும் இயக்க உறுப்புகளும் விலங்குகள் பல்வேறு இயக்க உறுப்புகளால் (locomo tory organelles) இடப்பெயர்ச்சி (locomotion) செய் கின்றன. அமீபா, போலிக்கால்களின் (pseudopodia) உதவியாலும்,பரமேசியம் (paramaecium) குற்றிழை களின் (cilia) உதவியாலும் இடப்பெயர்ச்சி செய் கின்றன. இவற்றில் செல்லினுடைய ஒரு பகுதியே இயக்க நுண்ணுறுப்பாகப் பயன்படுவதைக் காண லாம். முதுகெலும்புடைய உயர்விலங்குகளில் தனிப் பட்ட இயக்க உறுப்புகள் தோன்றியிருப்பதைக் காண்கிறோம். மீன்களில் துடுப்புகளும் (fins) இரு வாழ்விகளில் சவ்வுடைய விரல்களைக் கொண்ட கால்களும், ஊர்வனவற்றில் விரலுடைய நீண்ட கால்களும், பறவைகளில் இறக்கைகளும், பாலூட்டி களில் தகுந்த தகவமைப்புப் பெற்றுள்ள உறுதியான கால்களும் டப்பெயர்ச்சி உறுப்புக்களாகப் பயன் படுகின்றன. எனவே, இடப்பெயர்ச்சி உறுப்பு பரிணாமத்தில் செல்லின் ஒரு பகுதியிலிருந்து தொடங்கித் தனி உறுப்பாகிய கால்கள் வரை படிமலர்ச்சி மாற்றங்கள் பெற்றுள்ளதைக் காணலாம். விலங்குகளில் காணப்படும் இயக்கங்கள் அமீப இயக்கம் (amoeboid movement). முன்னுயி ரிகள் (protozoa) தொகுதியைச் சேர்ந்த விலங்குகளில் இவ்வகை இயக்கம் காணப்படுகிறது. இத் தொகு தியைச் அமீபா சேர்ந்த புரோட்டியஸ், (amoeba proteus) போலிக்கால்களால் இடப்பெயர்ச்சி செய் கிறது. போலிக்கால்கள் தோன்றும்போது அந்த இடத்திற்குப் புரோட்டாப்பிளாசம் செல்கிறது; இது வெளிப்புறத்தில் புறப் பிளாசமாகவும் (ectolasm), உட்புறத்தில் அகப்பிளாசமாகவும் (endoplasm) அமைந்துள்ளது. புறப்பிளாசம் போலிக்காலாக வடி வெடுக்கும்போது அவ்விடத்திற்கு அகப்பிளாசம் செல்கின்றது. இந்தப் புதிய போலிக்கால் தோற்றத் தினால் பழைய போலிக்கால்கள் மறையத் தொடங்கு கின்றன. இத்தகைய செயற்பாடுகளால் அமீபா தன் உருவையும், இடத்தையும் மாற்றிக் கொள்கின்றது. அமீபாவில் நிகழும் அமீப இயக்கத்தை விளக் கொள்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. கப் பல சுருக்கக்கொள்கை (contraction theory). இ கொள்கையின்படி அமீபாவின் இயக்கம் அதனுடைய