உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/752

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

728 இடப்பெயர்ச்சியும்‌ இயக்க உறுப்புகளும்‌

728 இடப்பெயர்ச்சியும் இயக்க உறுப்புகளும் புரோட்டோப்பிளாசம் சுருங்குவதால் ஏற்படும் நீரோட்டம் போன்ற அசைவினால் நிகழ்வதாக ஜென்னிங்ஸ் (Gennings) என்பவர் கருதுகிறார். ஜெல் சால் கொள்கை (gel sol theory). அமீபா வில் புரோட்டோப்பிளாசம் இளகிய நிலையிலும் (plasmosol) சற்று இறுகிய நிலையிலுமாக (plasmo- gel) இரு நிலைகளில் காணப்படுகிறது. போலிக் கால் உருவாகும் போது இளகிய புறப்பிளாசக் குழல் முன்புறம் தோன்ற, பின்புறத்திலுள்ள புறப்பிளாசம். அகப்பிளாசமாக மாறுகின்றது. இதனால் இயக்கம் ஏற்படுகின்றது. உதவுகிறது. இக்கொள்கைகளிலிருந்து, போலிக்கால் களில் புரோட்டோப்பிளாசம் நீரோட்டம் போன்று இயங்குவதால் அமீப இயக்கம் நிகழ்வதை உணர லாம். இத்தகைய இயக்கம், இரத்த வெள்ளணுக்களி லும் சிவப்பணுக்களிலும் நிகழ்கிறது. இந்த இயக்கம் நடைபெறுவதற்கு முன்பு, இயக்கம் நடைபெறவிருக் கும் செல்லின் சவ்வில் (cell membrane) மின் வேதி யல் மாற்றங்கள் நிகழ்ந்து செயல்திறனைத் (action potential) தோற்றுவிக்கின்றன. குற்றிழை இயக்கம் (ciliary motion). பரமேசியம் போன்ற நுண்ணுயிரிகளில் சிலியா எனப்படும் குற் றிழைகள் மூலம் இடப்பெயர்ச்சி நிகழ்கிறது. இவை முன்புறமும் பின்புறமும் சீராக வளைந்து நிமிர்வ தால் உயிரியால் முன்புறமாகவோ பின்புறமாகவோ நீந்த முடிகிறது. குற்றிழைகளின் உந்து இயக்கத்தை யும், மீட்பு இயக்கத்தையும் வரைபடத்தில் காண லாம். ஆ அ அ 22 படம் 1.அமீபாவின் ஒரு பகுதியில் புரோட்டோப்பிளாசத்தின் இயக்கம் 1. பிளாஸ்மோசால் 2. பிளாஸ்மோஜெல் பாகுத்தன்மை மாற்றக் கொள்கை (change of vis- coslty theory). இக்கொள்கையின்படி புரோட்டோப் பிளாசத்தின் பாகுநிலை மாறி இயக்கத்தை ஏற் படுத்துகிறது. அதாவது, போலிக்கால் குழல் தோன் றும்போது அதன் முன்பகுதியில் இறுகிய பிளாசம் இளகிய நிலையடைந்து, பின்பகுதியில் இளகிய பிளாசம் சற்று இறுகிய பிளாசமாக மாறுகிறது. மூலக்கூற்றுச் சுருக்கக் கொள்கை (foundation zone theory). ஆலன் (Allen) என்பவரின் கருத்துப்படி, அமீப இயக்கத்திற்குக் காரணம் அமீபாவின் உடலி லுள்ள அகப்பிளாசப் புரத மூலக்கூறுகள் முன்பகு தியில் சுருங்கி, அங்குள்ள இளகிய பிளாசம் இறு கிய பிளாசமாக மாறுவதேயாகும். இந்த இறுகிய பிளாசம் முன்பகுதியில் போலிக்காலாகத் தோன்ற படம் 2. குற்றிழைகளின் பல்வேறு அசைவுகள் உந்துவேகம் 1. குற்றிழைகளின் முன்புற அசைவினால் உண்டாகிறது.2. அவற்றின் முன்புற அசைவிற்குப் பிறகு பின்புற அசைவு ஏற்படுகின்றது. குற்றிழைகள் வளைந்திருக்கும் தன்மையை நோக்குக 3. குற்றிழைகள் தொடர்ந்து அசைவதால் ஏற்படும் தோற்றம். அம்புக்குறி உயிரி செல்லும் திசையைக் குறிக்கிறது. குற்றிழைகள், புரோட்டோப்பிளாசத்திலிருந்து தோன்றிய மிக நுண்ணிய இழைகளேயாகும். இவை