இடப்பெயர்ச்சியும் இயக்க உறுப்புகளும் 731
கோமியர்கள் (sarcome res) எனப்படும் தசைநார்க் கண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. சார்க்கோ மியரில் ஆக்ட்டின் (actin) இழைகளும் மையோசின் (myosin) இழைகளும் உள்ளன. சார்க்கோமியர் தசைச் சுருக்கத்தின் அடிப்படை அமைப்பாக விளங்குகிறது. இதன் இருபுறங்களிலும் Z சவ்வுகள் (Z membrane) காணப்படுகின்றன. 7. 2.5 μ | 1 அ ஆ படம் 6. தசைகளின் உள்ளமைப்பு 1.2μ சார்க்கோமியர் 2. ஆக்ட்டின் பீ. மையோசின் 7 சவ்வு 5. கருப்புப்பட்டைகளுக்கிடையேயுள்ள வெண்பகுதி தசைநாரின் ஓய்வு நிலை ஆ. தசைநாரின் சுருக்க நிலை. ஆக்ட்டின் இழைகள் 50 A° (ஓர் ஆங்ஸ்ட்ராம் A என்பது மில்லி மீட்டரின் மில்லியனில் ஒரு பங்கு) விட்டமுடைய நீண்ட மெல்லிய இழைகளா கவும், மையோசின் இழைகள் 150 A° விட்டமுடைய தடித்த குட்டை இழைகளாகவும் இருக்கின்றன. அதாவது, ஒரு சார்க்கோமியரின் ஆக்ட்டின் இழை யும், மற்றொரு சார்க்கோமியரின் ஆக்ட்டின் இழை யும் Z கோட்டில் இணைந்து நிற்கின்றன. ஒரு சார்க் கோமியரிலுள்ள ஆகட்டின் இழைகள் நடுவில் ஒன் றோடொன்று சேராமல் இருப்பதால் அப்பகுதி வெள்ளையான H பகுதியாகக் (H zone) காணப் படுகிறது. எனவே, இப்பகுதியில் ஆக்ட்டின் இழை கள் இல்லை. இடப்பெயர்ச்சியும் இயக்க உறுப்புகளும் 731 இத்தகைய அமைப்புடன் கூடிய தசைநார்கள் சுருங்கும்போது, ஆக்ட்டின் இழைகள் மையோசின் இழைகளுக்கிடையிலுள்ள வெற்றிடத்தினுள் நுழை கின்றன. இதனால், வெள்ளைப் பகுதி குறுகுகின் றது. இதுபோலவே H பகுதியும் குறுகுகின்றது. இயங்கு தசைகள். உடல் உள்ளுறுப்புகளான இரைப்பை, இரத்தக் குழாய்கள் போன்ற உறுப்பு களில் மென்தசைகள் (smooth muscles) எனப்படும் இயங்கு தசைகள் காணப்படுகின்றன. இவை விலங்குகளின் இச்சைக்கு ஏற்பச் செயல்படுவன அல்ல. இத்தசைகளில் நீளவாட்ட வரிகள் மட்டும் காணப்படுகின்றன; குறுக்கு வரிகள் இல்லை. இருப் பினும் இயங்கு தசையாகிய இதயத்தசைகளில் மட் டும் குறுக்கு வரிகளும் காணப்படுகின்றன. எனவே. இதயத் தசைகளை மட்டும் தனியே வகைப்படுத்தி யுள்ளனர். மென்தசை, மென்தசைச் செல்களாலானது. இத்தசைச் செல்கள் நீண்டும், நடுவில் உட்கருவைக் கொண்டும் ஓட வடிவில், 20 முதல் 40 மைக்ரான் வரை நீளமுடையவையாகக் காணப்படுகின்றன. இத்தசை நாரிலும் தசை நுண்நார் இழைகள் உள்ளன. இத்தசைகள் பரிவு நரம்பு மண்டலம், மருங்கு நரம்பு மண்டலம் ஆகியவற்றின் நரம்பு களைக் கொண்டுள்ளன. தசைகளின் முக்கிய தன்மைகள் தசை தூண்டல் தன்மை (excitability). இயக்குத்தசை இயங்கு தசை இதயத் தசை ஆகிய மூன்று களும் ஒரு குறிப்பிட்ட அளவுடைய தூண்டுதல் மூலம் தூண்டப்படக் கூடியவை. இருப்பினும், இயங்கு தசைகள் மட்டும் அதிக அளவில் தூண்டப் பட வேண்டியவையாக மனித இருக்கின்றன. எலும்புத் தசைகள் தூண்டப்பட்டதிலிருந்து 0.03 வினாடியிலிருந்து 0.04 வினாடிக்குள் சுருங்கும் ஆற்றல் உடையன; தவளையின் வயிற்றுத் தசை 5 வினாடிக்குள் சுருங்கும் ஆற்றல் உடையது. கடத்தும் தன்மை (condactivity). ஒரு தூண்டு தல் தேவையான அளவு திறனுடையதாக இருப்பின் அது, தசைநாரினைத் தூண்டிவிடுகின்றது. தூண்டப் பட்ட இடத்திலிருந்து அந்நாரின் மற்ற இடங்களுக்கு அது பரவுகின்றது. இதுவே, கடத்தும் தன்மை எனப் படுகின்றது. மற்றதசைகளைவிட இயக்கு தசையில் இது மிகுதியாகக் காணப்படுகிறது. தவளையின் இயக்குதசையில் ஒரு வினாடிக்கு 3 மீ. முதல் 4 மீ. இது தூண்டுதல்கள் கடத்தப்படுகின்றன; மாறா வெப்பக்குருதி விலங்குகளில் 6 முதல் 12 மீட்டராகக் காணப்படுகின்றது. வரை சுருங்கும் தன்மை (contractility). மூன்று விதமான தசைகளும் தூண்டப்படும்போது சுருங்கும் ஆற்றல் பெற்றுள்ளன. இது இயக்கு தசையில் மற்ற தசைகளைவிட அதிகமாகக் காணப்படுகிறது. .