உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/756

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

732 இடப்பெயர்ச்சியும்‌ இயக்க உறுப்புகளும்‌

732 இடப்பெயர்ச்சியும் இயக்க உறுப்புகளும் சுருங்கி நிற்கும் ஆற்றல் (tonicity). மூன்று விதத் தசைகளும் தூண்டப்பட்டுச் சுருங்கிய பிறகு அந் நிலையிலேயே சற்று நேரம் இருக்கக்கூடிய ஆற்றல் பெற்றிருக்கின்றன. இவ்வாற்றல் இயக்கு தசையில் மிகுதியாக உள்ளது. இவ்வாற்றல் தசையுடன் நரம்பு அமைப்பைப் பொறுத்து வேறுபடுகிறது. இயக்குதசையில் வெளிச்செலுத்து நரம்பு (efferent nerve or motor nerve) துண்டிக்கப்பட்டால் இவ்வாற்றல் மறைகிறது. எனவே, இது ஓர் அனிச் சைச் செயலாகவும் (reflex process) அதனுடைய மையம் தண்டுவடத்திலிருப்பதாகவும் கருதப்படு கிறது. நீள்தன்மை (elasticity). மூன்று தசைகளும் நீளக் கூடிய ஆற்றல் பெற்றுள்ளன. ஒரு குறிப்பிட்ட அளவிற்கு அவை நீள்கின்றன. பிறகு மீண்டும் அவை தங்களுடைய இயல்பான அளவினை அடைகின்றன. விலக்கக் காலம் (refractory period). ஒரு தசை யானது, தூண்டப்பட்டுச் செயல்பட்ட பின்னர் மீண்டும் மற்றொரு தூண்டுதலால் ஒரு குறிப்பிட்ட காலம் வரை அதன் தூண்டப்படு தன்மையை இழக் கிறது. இக்காலத்தினைச் செயல் விலக்கக் காலம் என்பர். இயக்கு தசையில் இது குறைவாகவும், இயங்கு தசையில் குறிப்பாக, இதயத் தசையில் இது மிகுதியாகவும் காணப்படுகின்றது. அனைத்தும் அல்லது ஏதுமிலாநிலை (all or none Iaw). இதயத்தசைகள் தனித்துக் காணப்படாமல் ஒன்றோடொன்று சேர்ந்து ஓர் இணையமாக (syncy- tium) அமைந்திருப்பதால், ஒரு குறிப்பிட்ட திறனு டைய தூண்டுதல் கிடைக்கும்வரை அது இயங்குவ தில்லை. இதிலிருந்து, இதயத் தசை தூண்டப்படும் போது தூண்டுதலின் திறன் குறைவாக இருப்பின், தயத் தசை முழுமையாக இயங்காது என்பதும் புலனாகின்றது. இந்தப் பண்பு மற்ற தசைகளுக்கு இல்லை. ஆனால் மற்ற தசைகளின் செல்கள் இந்த நியதிக்கு உட்பட்டு இயங்குகின்றன. பல்வேறு விலங்குகளின் இடப்பெயர்ச்சியும் இயக்க உறுப்புகளும் முன்னுயிரிகள் (protozoa).அமீபாவில் போலிக் கால்கள் மூலம் அமீப இயக்கமும், பரமேசியத்தில் குற்றிழைகள் மூலம் குற்றிழை இயக்கமும், யூக்ளினா (euglena) போன்றவற்றில் நீளிழை இயக்கமும் நடை பெறுவது பற்றிக் கண்டோம். புரையுடலிகள் (porifera). புரையுடலிகளிலுள்ள பலவிதச் செல்களில் குவளைச் செல்கள் (choanocy- tes) என்பன ஒரு வகையாகும். இச்செல்களில் நீளி ழைகள் உள்ளன. இவ்விழைகள் அசைவதால் புரை யுடலிகளின் கால்வாய்களில் (canals) நீரோட்டம் ஏற்படுகின்றது. இவ்வியக்கம் உணவூட்டத்திற்கும் சுவாசத்திற்கும் பயன்படுகிறது. இவை பெரும்பாலும் கடல் நீரில் பாறைகளில் ஒட்டிக்கொண்டு (sessile) இடப்பெயர்ச்சி செய்யாமல் வாழும் விலங்குகளாகும். ஆயினும் புரையுடலிகளின் கருவளர்ச்சியின் (deve- lopment) போது காணப்படும் ஆம்ஃபிபிளாஸ்டுலா இளவுயிரி (amphiblastula larva) நீளிழைகளின் உதவியால் நீந்திச் செல்கிறது. படம் 7.ஆம்ஃபிபிளாஸ்டுலா லார்வா 1.குவளைச் செல் 2 புறப்படை குழியுடலிகள் (coelenterata). ஹைடிரா (hydra) போன்ற குழியுடலிகளில் இயக்கம் அதன் உடவை வளைப்பதாலும், உணர்நீட்சிகளை (tentacles) அசைப்பதாலும் ஏற்படுகிறது. உடலிலும், உணர் நீட்சிகளிலும் புறப்படை (ectoderm), அகப்படை (endoderm) என இரு அடுக்குச் செல்கள் காணப் படுகின்றன. இத் திசுக்களில் ஏற்படும் சுருக்கமே உடல் வளைவிற்குக் காரணமாகின்றது. சில யங்களில் ஹைட்ராவின் அடிப்பகுதி தரையினின்று விடுபட்டு, அடிவட்டத்துடன் இணைந்துள்ள காற் றுக் குமிழ் மூலம் தண்ணீரில் மிதந்து செல்வதும் உண்டு. சம படம் 8. ஹைடிாக உடலை வளைத்தும் நீட்சிகளைப் பயன் படுத்தியும் இடப்பெயர்ச்சி செய்தல். தட்டைப்புழுக்கள் (platyhelminthes). பிளனேரியா (planaria) போன்றவற்றில் உடலில் புறத்தோல் அடுக்கும் (epidermis), வளைத்தசைகளும் (circular muscles), சாய்தசைகளும் oblique muscles);