இடம் பெயர்ந்த எலும்புப் புற்று 735
A/ R R மனிதனின் கால்களின் படம். 12. இடப்பெயர்ச்சியில் அசைவுகள். அம்புக்குறி இடப்பெயர்ச்சித் திசையைக் குறிக்கிறது. அசைத்துக் காற்றில் பறப்பதாகும். பின்னதில் ஆற் றல் செலவிடப்படுகிறது. பறவைகளின் உடலமைப்பு, சிறகுகளின் அமைப்பு, எலும்புகளின் அமைப்பு ஆகி யவை பறத்தலில் முக்கிய பங்கு கொள்கின்றன. ந. இராமலிங்கம் நூலோதி 1. Bourne, G. H., The of Muscles, Vol. 1-6, York, 1960. Structure & Functions Academic press, New 2.Bykov, K.M., Text book of physiology, Mir Publishers. Moscow, 1970. 3. Gordon, M.S., Animal Function: principles & adaptations, Macmillan, New York, 1968. 4. Gray, J., Animal Locomotion, Nicolson, London, 1968. Weidenfeld & 5. Hugh Devson., Text book of Generapl hysiology, 4th edition, J.&A. Churchill, London, 1970. 6. Hurkeat, P.C., Mathur. P.N., A Text book of Animal physiology, S.Chand & Co., New Delhi, 1976. 7. Siegh, M. A., The Biology of Cilia & Flagella, pargamon, Oxford, London, 1962. இடம் பெயர்ந்த எலும்புப் புற்று உடலுக்கு உருவத்தையும் உறுதியையும் கொடுக்கின்ற எலும்பு, இரும்புக் குழாய் அல்லது தகடு போன்ற உயிரற்ற பருப்பொருள் போலத் தோன்றினாலும் இடம் பெயர்ந்த எலும்புப் புற்று 735 உயிருள்ள உறுதியான திசுவாகும். எலும்பு உயிரணுக்களாலும் (bone cells) இ ணைப்புத் திசுக் களாலும் (connective tissues )ஆக்கப்பட்டிருக்கிறது. மற்ற திசுக்களைப் போல் இதில் இரத்த ஓட்டமும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. உடலில் மற்ற திசுக்களில் ஏற்படுவது போல், எலும்பிலும் கட்டிகள் ஏற்படலாம். இவை உயி ருக்குக் கேடு விளைவிக்காத கட்டிகள் (benign tum- ours) என்றும் உயிருக்குக் கேடு விளைவிக்கும் கடும் கட்டிகள் (malignant tumours) என்றும் இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன. முதல் வகையில், எலும்பில் குறிப்பிட்ட பகுதியில் கட்டி ஏற்பட்டு, அரிப்பை உண்டாக்கும். ஆனால் மற்ற இடங்களுக் குப் பரவாது. இரண்டாம் வகை மீண்டும் இரு பிரி வுகளாகப் பிரிக்கப்படுகின்றது. எலும்பிலுள்ள பல் வேறு உயிரணுக்களில் தோன்றுகின்ற முதன்மை அல் லது முதல் நிலைக் கட்டிகள் (primary tumours ) அல் லது முதல் நிலைப்புற்று (primary cancer) என்பது ஒரு பிரிவாகும். மற்றொரு பிரிவு, உடலின் மற்றபாகங் களில் ஏற்படும் புற்றுநோய் இரத்தக் குழாய் வழியாக எலும்பை அடைந்து அவ்விடத்தில் புற்று நோயாக வளர்வதாகும். இது இரண்டாம் நிலைப்புற்று (secondary deposit) எனக் குறிப்பிடப்படுகிறது. முதல்நிலைப் புற்று. இவை எலும்பில் வளர்ந்து இரத்தக் குழாய் மூலமாக உடலின் மற்ற உறுப்பு களுக்குச் சென்று அங்கே வளர்ச்சியடைந்து, அவ்வு றுப்புகளின் பாகங்களை அழித்து உயிருக்குக் கேடு விளைவிக்கும். இவ்வாறு எலும்புத் திசுக்களில் தோன்றி வளர்ந்து, இடம் மாறி மற்ற உறுப்புகளுக் குச் சென்று அங்கு வளர்ச்சியடைவது இடம் பெயர்ந்த எலும்புப் புற்று (metastatic tumours of the bone) அல்லது மாற்றிட எலும்புப்புற்று என்று குறிக்கப்படுகிறது. முதன்மைப் புற்று குழந்தைகளுக்கும் இளம் வய தினர்களுக்கும் அதிகமாகக் காணப்படுகின்றது. எலும்பு அணுக்கள், குருத்தெலும்பு அணுக்கள், எலும்பு மஜ்ஜை அணுக்கள் (bone marrow cells), இரத்தக் குழாய் அணுக்கள், இணைப்புத் திசு அணுக் கள் (நார்த்திசு, கொழுப்பு அணுக்கள்) போன்ற பல திசுக்கள் எலும்பில் உள்ளன. இவற்றில் ஏற்படும் புற்றுநோய் அணுக்கள் (can- cer cells), இரத்தக் குழாய் வழியாக இதயத்தை அடைகின்றன. அங்கிருந்து முதலில் நுரையீரலுக்கு இரத்தம் செல்கிறது. நுரையீரல் தமனி (pulmonary artery) பல பிரிவுகளாகப் பிரிந்து, தந்துகிகளாகப் பிரிந்து நுரையீரலில் இரத்தத்திலுள்ள அசுத்தம் நீக் கப்பட்டுச் சுத்தமடைந்த பின்னர் நுரையீரல் சிரை (pulmonary vein) வழியாக மீண்டும் இதயத்தை அடைகிறது. அங்கிருந்து மகாதமனி (2orta) மூலமாக உடலின் மற்ற எல்லா உறுப்புகளுக்கும் செல்கின்றது.