உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/760

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

736 இடம்‌ பெயர்ந்த எலும்புப்‌ புற்று

736 இடம் பெயர்ந்த எலும்புப் புற்று எலும்பு நுரையீரல் இதயம் மூளை சிறுநீரகம் படம் 1. இடம் பெயர்ந்த எலும்புப் புற்று எலும்பிலிருந்து சென்ற இரத்தம் இதயத்திலிருந்து முதலில் நுரையீரலுக்குச் செல்வதால் அங்கு புற்று நோய், அணுக்கள் தந்துகிகளுக்குள் மெதுவாகச் செல் லும்போது வடிகட்டப்பட்டு (first filter) அங்கேயே வளரத் தொடங்குகின்றன. குறிப்பிட்ட பருமனை அடைந்ததும் நோய்க்குறிகளை வெளிக்காட்டுகின் றன. நுரையீரல் தந்துகிகளைக் கடந்து புற்றுநோய் அணுக்கள் நுரையீரல் சிரை வழியாக இதயத்தை அடைந்துவிட்டால் மகாதமனி வழியாக உடலின் எந்த உறுப்புக்கும் செல்லலாம். அந்தந்த உறுப்பு களில் வளர்ந்து கட்டிகளாகி நோய்க்குறிகளை வெளிப்படுத்தும். எலும்பின் முதல்நிலைக் கடும்புற்றுகள் (Primary maligant tumours bone). இவை அ) எலும்பு உண் டாக்கும் புற்றுகள், ஆ) குருத்தெலும்பு உண்டாக கும் புற்றுகள் என இருவகைப்படும். முன்னதற்கு எடுத்துக் காட்டுகள் எலிங்குச் சதைப்புற்று, தசைப் புற்று, கடும் வடிநீரகப்புற்று, வடிநீரகச் சதைப்புற்று, நுண்வலைச் சதைப்புற்று என்பனவாகும். பின்ன தற்கு எடுத்துக் காட்டுகள் இரத்தக் குழல் சதைப் புற்று, நார்ச்சதைப்புற்று, கொமூப்புச் சதைப் புற்று. கடும் உட்குருத்துப் புற்று, வேறுபடுத்த இயலாத பிறபுற்றுகள், மூட்டுப்பைப் புற்று என்பனவாகும். நோய் அறிகுறிகள். மேற்குறித்த எலும்புப் புற்று நோய்க்கட்டிகள் தோன்றிய இடங்களில், வலி, வீக்கம், மூட்டு அசைவின்மை, உடல் மெலிவு, சோர்வு, இரத்தச் சோகை போன்றவை ஏற்படும். நுரையீரலில் பரவி னால் மூச்சுத்திணறல், மார்பு வலி, காய்ச்சல், இருமல், சளியில் இரத்தம் கலந்திருத்தல் போன் றவை ஏற்படும். சிறுநீரகத்திற்குப் பரவினால் வயிற்றுவலி, வீக்கம், சிறுநீரில் இரத்தம் (haematuria) போன்றவை ஏற்படும். மூளைக்குப் பரவினால் தலை வலி, வாந்தி, மயக்கம் பார்வைக்குறைவு, கை கால் போன்ற உறுப்புகள் செயலிழத்தல் போன்றவை ஏற்படும். ஆகவே இடம்பெயர்ந்த எலும்புப் புற்று எந்த உறுப்புக்கு மாறி அதில் கட்டியாக வளர்ந்து இருக்கிறதோ அந்த உறுப்பிற்கான நோய்க்குறிகளை ஏற்படுத்தும். படம் 2 இடம் பெயர்ந்த எலும்புப் புற்று எலும்பில் தோன்றி வளர்ந்த osteosercoma என்ற புற்று, நுரையீர லுக்குப் பரவியுள்ளது.