உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/773

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடருயிர்கள்‌ 749

அவற்றின் மேல் பாக்டீரியா, டயாட்டம்,பாசி விதை கள் போன்றவை கடல்நீரில் கரைந்திருக்கும் கரிம, கனிமப் பொருள்கள், சகதி மணல் ஆகியவற்றுடன் கலந்து படிவதை முதன்மைப் படலம் (primary film) என்பர். இது இடத்தைப் பொறுத்து மாறுபடும். இந்த முதன்மைப் படலம் இடருயிர்களுக்கு மிகவும் இன்றி யமையாததாகும். சில இடருயிர்கள் முதன்மைப் படலம் உருவாகாத புதிதாக மூழ்கியிருக்கும் பரப்பு களிலும் காணப்படுகின்றன. தொடர் வரிசை. இந்த முதன்மைப் படலத்தின் மீது இடருயிர்கள் படிந்து நன்கு வளர்கின்ற றன. குறிப்பிட்ட சில இனத்தைச் சார்ந்த உயிரிகளின் வளர்ச்சி பலவகை இனங்களின் தொடர்ச்சியைத் தூண்டுகின்றன. இடருயிரி இனங்கள் ஒன்றை ஒன்று சார்ந்திருக்கும். இந்த உயிரியல் தொடர்வரிசை இடருயிர்களைப் பொறுத்தும் சூழலைப் பொறுத்தும் மாறுபடும். முதலில் படிந்து வளரும் இடருயிர்கள் பின்னர் வரும் இடருயிர்களின் வளர்ச்சிக்குப் பல வகைகளில் துணை புரிகின்றன. சிலசமயங்களில் தொடர்ச்சியாகப் பல்வேறு உயிரினங்கள் ஓர் இடத் தில் படிவதால் அவ்விடத்தில் முன்னர் படிந்திருந்த உயிரிகள் வேறு இடத்திற்கு மாறிச் செல்லுகின்றன. இது காரணமாகக் குறைந்த வளர்ச்சி வேகமும் நீண்ட ஆயுளும் கொண்ட உச்சநிலைச் சமுதாயம் தோன்ற முடிகிறது. ள சூழ்நிலைக் காரணிகள். கடல் இடருயிர்களின் அமைப்பு, அவை படியும் தன்மை, இனப்பெருக்கம், வளர்ச்சி வீதம், பிழைக்கும்திறன் போன்றவை அவை வாழும் இடத்திலுள்ள இயற்கைக் காரணிகளைப் பொறுத்து மாறுபடுகின்றன. வெப்பநிலை, உப்புத் தன்மை, நீரின் தன்மை, மாசடைதல், கலங்கல், நீரின் அசைவுகள், அடித்தளத்தின் (substratum) அமைப்பு, தன்மை, நிறம், அடித்தளத்தின் மேல்விழும் ஒளியின் அளவு போன்றவை குறிப்பிடத்தக்க முக்கியமான காரணிகளாகும். பல்வேறு இடருயிரிகளின் புவியியல் பரவலில், வெப்பநிலையின் பங்கு முக்கியமாக உள்ள காரணத் தினால் அது சூழ்நிலைக் காரணிகளுள் முதன்மை யான தாகக் கருதப்படுகிறது. இடருயிர்களின் இனப் பெருக்கச் செறிவை வெப்பநிலைக் காரணி கட்டுப் படுத்துகிறது. வெப்பமண்டலப் பகுதிகளில் வெப்ப நிலையால் இடருயிர்களின் இனப்பெருக்கம் தடைப் படுவதில்லை. இடருயிர்களின் தொடர்ச்சியான படிவு, அவற்றின் வளர்ச்சி, இனப்பெருக்கம் போன் றவை வருடம் முழுதும் தொடர்ச்சியாக அமைகின்ற உயர் வெப்ப நிலையைப் பொறுத்தே நிகழ்கின்றன. இதனால் இந்திய வெப்ப மண்டல நீர்ப்பகுதிகளில் இடருயிர்களின் தொடர்ச்சியான வளர்ச்சி நன்கு காணப்படுகின்றது. இடருயிர்களின் வளர்ச்சியில் நீரின் உப்புத்தன்மை இடருயிர்கள் 749 பெரும்பங்கு வகிக்கிறது. இடருயிர்களின் எண் ணிக்கை அவை வாழும் நீரின் உப்புத் தன்மையைப் பொறுத்தும் மாறுபடும். நீரின் உப்புத்தன்மை மிகக் குறையும் போது எண்ணற்ற இடருயிர்களும் அலசி களும் இறந்து விடுகின்றன. சிலசமயங்களில் இடம் பெயர்ந்து செல்லும் இடருயிர்களின் வளர்ச்சி வீதத் தையும், அவற்றின் இனப்பெருக்கத்தையும் நீரின் உப்புத் தன்மை பெரிதளவில் பாதிக்கின்றது. னால் குறைந்த உப்புத்தன்மை உள்ள இடங்களில் இடருயிர்களின் அடர்த்திக் குறைவாக இருக்கும். டைருயிர்களைத் தாக்கும் காரணிகளில் மாசடை தல் (pollution) இன்றியமையாததாகும். துறைமுகம் போன்ற அடைபட்ட இட நீர்ப்பரப்புகளில் மாசடை தல் காரணமாக இடருயிர்களின் வளர்ச்சி பெருமள வில் தடைப்படுகின்றது. கப்பல்கள், நிலத்திலிருந்து வடியும் கழிவுப் பொருள்கள், எண்ணெய், தொழிலகக் கழிவுகள் போன்றவை நீரின் தன்மையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. சேறு, கழிவுகள், சிதைவுக் கூளங்கள் போன்றவை இந்தப் பகுதியில் உள்ள நீரில் கலந்திருப்பதால் அவை இடருயிர்களின் மூச்சுறுப்புகளுக்கு (respiratory organs) தீங்கை ஏற் படுத்துகின்றன. மேலும் நீரில் கரைந்துள்ள பொருள் கள் மேலிருந்து வரும் ஒலியைக் குறைப்பதால் அவை பச்சைத் தாவரங்களின் வளர்ச்சியைத் தடுக்கின்றன. . கடலலைகள், ஓதங்கள், நீரோட்டங்கள் போன்ற வற்றால் ஏற்படும் நீரின் அசைவுகளும் இடருயிர் களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துகின்றன. இவ் வாறு ஏற்படும் நீரின் அசைவுகளை இடருயிர்கள். தங்கள் உணவுக்காகவும் கழிப்புப் பொருள்களை வெளியேற்றவும் பயன்படுத்திக் கொள்கின்றன. மேலும் இளம் உயிரிகள் (larvae) நீரால் வெவ்வேறு இடங்களுக்கு எடுத்துச் செல்லப்படுவதால் ஆங் காங்கே இடருயிர்கள் தோன்ற வழி செய்யப்படு கிறது. ஒரே இடத்தில் அடர்த்தியின் காரணமாக ஏற்படும் நெருக்கடி நிலையும் தவிர்க்கப்படுகின்றது. சிலசமயங்களில் நீரசைவுகள் இளம் உயிரிகள் தங்கு வதற்கு வசதியற்ற நடுக்கடல் பகுதியை நோக்கி அடித்துச் செல்வதால் அவற்றிற்குத் தீங்கையும் ஏற் டுத்துகின்றன. இடருயிர்கள் ஒட்டி வாழும் பரப்பின் தன்மையும் அவற்றின் வாழ்க்கையைப் பாதிக்கக் கூடிய காரணி களில் ஒன்றாகும். அலசிகளின் இளம் உயிரிகளில் சில ஒளியை விரும்பக் கூடியவையாகும். சில ஒளி யைத் தவிர்க்கக் கூடியனவாகவும் காணப்படுகின்றன. நீரில் கரைந்துள்ள ஆக்சிஜன், கார்பன் டை ஆக்சைடு போன்ற வளிமங்களும் ஃபாஸ்ஃபேட், நைட்ரேட்டு போன்ற ஊட்ட உப்புகளும் இடருயிர் களின் வளர்ச்சியில் பெரும்பங்கு வகிக்கின்றன. தடுக்கும் முறை. அலசிகள் கப்பலின் அடிப்பாகத் தில் அடர்த்தியாக வளருவதால் உராய்வுத் தடை