750 இடவலச் சமச்சீர்
750 இடவலச்சமச்சீர் ஏற்பட்டுக் கப்பலின் அசைவைப் பாதிக்கும். கப்பல் களின் அடிப்பகுதியில் உண்டாகும் இடருயிர்களின் அடர்த்தி,கப்பல்களின் வேகத்தைப் பெருமளவில் பாதிப்பதோடல்லாமல் எரிபொருள் செலவையும் அதிகப்படுத்துகின்றன. இவ்வாறு ஏற்படாத வண் ணம் பாதுகாக்கக் கப்பலின் அடிப்பகுதியில் இதற்குத் தகுந்த பூச்சுகளைப் பயன்படுத்துகின்றனர். 1930 ஆம் ஆண்டில் இவ்வாறு இடருயிர்கள் கப்பலைத் தாக்கா தவாறு மெர்க்குரிக் ஆக்சைடு, குப்ரிக் ஆக்சைடு போன்ற நச்சுப் பொருட்கள் கலக்கப்பட்ட அரக்கும் தார்களும் பூசப்பட்டன. இந்தப்பூச்சானது ஏறத்தாழ ஆறு மாதங்கள் கப்பலின அடிப்பகுதியில் தங்க வரும் இளம் உயிரிகளை அண்டாது பாதுகாக்கும். ஆனால் அதற்குப் பிறகு நச்சுத்தன்மை நீர்த்துப் போவதன் காரணமாகப் பயனற்றுப் போய்விடும். எனவே பின்னர் பாதரசம், செம்பு அல்லது ஆர் செனிக் போன்ற நச்சுப் பொருள்கள் கலந்த பூச்சுகள் தயாரிக்கப்பட்டன. செம்பும் செம்புக் கலப்பு உலோகங்களும் இடருயிர்களின் தாக்குதலை ஓரளவு எதிர்த்துத் தாங்கும் ஆற்றல் கொண்டவை. மிகை அதிர்வு ஒளி அதிர்வுகளைக் கொண்டு அதிர்ச்சி ஏற்படுத்தி இடருயிர்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதில் வெற்றியைக் காணமுடியும். அண்மையில் பரவலாக நெகிழி நெய்வனங்களைப் (plastic paints) பயன்படுத்துகின்றனர். அவற்றில் பாலி ஐசோ பியுட்லீன், வினைல் பசை, இப்ரஸ் ஆக்சைடு என்ற நச்சுப் பொருளும் அடங்கியுள்ளன. இவற்றைக் கொண்டு கப்பலின் அடிப்பகுதியைக் குறைந்தது நான்கு ஆண்டுகளுக்கு இடருயிர்கள் தாக்காத வண்ணம் தூய்மையாக வைத்திருக்க முடியும். இடவலச் சமச்சீர் சி. அந்தோணி பெர்னான்டோ ஒப்புமை அழிவின்மை விதி என்பது இயல்பு மாறாத எதிர்பலிப்பு (reflection invariance) எனப் படும் கணிதவியல் விதிமுறையாகும். சீரமைவுத் தத்துவத்தின் எதிர்பலிப்பு மாறாக் கொள்கைப்படி எந்தவொரு இயற்பியல் நிகழ்ச்சியின் ஆடிப் படிம மும் (image) அவ் இயற்பியல் நிகழ்ச்சி போன்றே உண்மையானதாகும். ஆடி வழியே தாம் பார்த்துக் கொண்டிருக்கும் உண்மையை அறியாத ஒருவர், எந்தவோர் இயற்பியல் ஆய்வையும் 'காண்பராயின்' ஆய்வின் முடிவில் இருந்து, தாம் ஆடியில் நிகழ்ந்த எதிர்பலிப்பையே பார்ததுக்கொண்டிருந்த அவ் வுண்மையை உணர்ந்து கூறுவதற்கு வழியே இல்லை, தனையே வேறு வகையாகவும் கூறலாம். அதா வது இடக்கை வகை ஆயத்தொலைவு முறையைப் (lelt-handed co-ordinates system) பயன்படுத்தினா லும், வலக்கை வகை ஆயத் தொலைவு முறையைப் பயன்படுத்தினாலும், அடிப்படை இயற்பியல் விதி கள் யாவும் அதே கணிதவியல் வடிவைப் பெற் றிருக்கவேண்டும் என்பதாகும். நம் அன்றாட வாழ்க்கையில், ஆடியின் வழியே நோக்கும்போது காலங்காட்டும் கருவியின் முள் எதிர்த் திசையில் ஓடுவது போலவும், வலஞ்சுழித் திருகு ஆணி இடஞ்சுழியாகத் திருகுவது போலவும், இரு மனிதர்கள் கை குலுக்கும்போது, அவர்தம் இடக் கைகளைக் குலுக்குவது போலவும், ஒரு மனிதன் வலக்கையால் எழுதுவது இடக்கையால் எழுதுவது போலவும் தோன்றும். இதிலிருந்து இயற்கையில் இடஞ்சுழித் திருகுவகைத் துகள்களோ (left-handed particles) வலஞ்சுழித் திருகுவகைத் துகள்களோ (right-handed particles) இருந்தால் அவை பங்கு பெறும் எந்தவோர் இடையீட்டுச் செயலிலும் இட வலச் சமச்சீர்த் தத்துவம் அழிவுறும் என்று நாம் புரிந்துகொள்ளலாம். உயிரியவில் இடஞ்சுழிப் புரோட்டீன்கள். உயிரியல் முறையில் விளைவிக்கப்பட்ட புரோட்டீன் மூலக்கூறு கள் முற்றிலும் இடஞ்சுழித் திருகுவகை அமைப்பைக் கொண்ட அமினோ அமிலங்களிலிருந்து அமைக்கப் பட்டுள்ளன. பென்சிலின் போன்ற நோய்உயிர்க் கொல்லிகள் (antibiotics) மட்டும் ஒரு குறிப்பிட்ட அளவு வலஞ் சுழி அமினோ அமிலங்களைக் கொண்டுள்ளன. அவற்றின் இந்த அமைப்பே அவை பாக்டீரியாக்க ளுக்குத் தீங்கு விளைவிப்பதற்குக் காரணமாகக் கரு தப்படுவதோடு அவை நோய் உயிர்க் கொல்லிகளா கப் பயன்படுவதற்கும் காரணமாகின்றன. வேதி யியல் வல்லுநர்கள் வலஞ்சுழிப் புரோட்டீன்களைச் செயற்கை முறையில் விளைவிக்க முடியும். இவை இயற்கைப் புரோட்டீன்களைப் போன்ற அதே வேதி யியல் பண்புகளைக் கொண்டுள்ளன. ஆனால் ஒரே ஒரு வேறுபாடு உண்டு. அது, ஒன்று மற்றதன் ஆடிப் படிமமாகும். புவியில், இயற்கையானது எப்பொழு தும் ஒருகுறிப்பிட்ட சீரமைவு வகை மூலக் கூறுகளை மட்டுமே விளைவிக்கும்போது, வேதியியல் வல்லுநர் களால் செயற்கையாக இருவகை மூலக்கூறுகளையும் உற்பத்தி செய்ய முடியும். இது மிகவும் விந்தையா னது. இயற்கை ஏன் இடஞ்சுழிப் புரோட்டீன் மூலக் கூறுகளை மட்டுமே விரும்பிப் படைக்க வேண்டும்? இதற்கான விளக்கமாக, புவியின்மீது தொடக்கத்தில் இடஞ்சுழி, வலஞ்சுழி ஆகிய இருவகை உயிரினங்க ளும் தோன்றியிருக்கக்கூடும். அந்நிலையில் ஒருவகை உயிரினங்களும், தாவரங்களும் மற்றவகை உயிரினங் களுக்கும் தாவரங்களுக்கும் நச்சுத் தன்மையுடைன் வாய் அமைந்திருக்கக்கூடும். இறுதியில், உயிர் வாழ் வதற்கான போட்டியில் அவற்றுள் ஒருவகை, மற் றதை வென்று நிலைத்திருக்கக்கூடும் என்று கருதப் படுகின்றது.